???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: டிசம்பர் 21-ல் தீர்ப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   07 , 2018  07:45:18 IST

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்துள்ளது. சொராபுதீன் ஷேக் என்ற ஒரு சிறிய குற்றவாளி, குஜராத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சொராபுதீனைக் கொன்றதற்கு குஜராத் போலீஸ், ‘அவன் ஒரு தீவிரவாதி' என்று குற்றம் சாட்டியது. சொராபுதீனின் மனைவி கவுசி பி-யும் கொல்லப்பட்டார்.
 
என்கவுன்ட்டர் நடக்கும் போது, சொராபுதீன் தம்பதியுடன் இருந்த துல்சிராம் பிரஜபதி, வழக்கிற்கான சாட்சியாக மாறினார். அவரும் ஓராண்டு கழித்துக் கொல்லப்பட்டார்.
 
சில ரகசியங்கள் வெளிவரக் கூடாது என்பதற்காகவே, இந்தக் கொலைகள் செய்யப்பட்டதாக புலன் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஆந்திரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசியல்வாதிகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, பின்னர் வழக்கிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
 
அதேபோல குஜராத்தில் இருக்கும் கீழ்நிலை நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து விசாரிக்கையில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த பல அதிகாரிகளை விடுவித்து உத்தரவிட்டது. அப்படி இருந்தும், இன்னும் 22 அதிகாரிகளின் பெயர் விடுவிக்கப்படாமல் உள்ளது. அவர்கள் குறித்துத்தான் வரும் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...