???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சர்ச்சைக்குரிய தி இண்டர்வியூ திரைப்படத்தை நாளை திரையிடுகிறது சோனி நிறுவனம்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   24 , 2014  00:16:14 IST

அமெரிக்கா- வடகொரியா இடையே பிரச்னையை ஏற்படுத்திய தி இண்டர்வியூ திரைப்படம் சில திரையரங்குகளில் நாளை முதல் திரையிடப்படும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்குப் பின் திரைப்படம் வெளியாவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சோனி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் லின்டம், விரைவில் அனைத்து இடங்களிலும் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அமெரிக்கா கருத்து சுதந்தரத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என்றும் சோனி நிறுவனத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னை கொலை செய்யத் திட்டமிடுவது போன்ற காட்சியமைப்பு கொண்ட நகைச்சுவைத் திரைப்படமான THE INTERVIEW வை தயாரித்ததால், சோனி நிறுவனத்தின் கணினி செயல்பாடுகள் சட்டவிரோத இணைய முடக்கர்களால் முடக்கப்பட்டன. இதன் பின்னர் திரைப்பட வெளியீட்டை ரத்து செய்வதாக சோனி நிறுவனம் அறிவித்தது. கணினிகள் ஹேக் செய்யப்பட்டதற்கு வடகொரியாவே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனை மறுத்த வடகொரியா தொடர்ந்து இது போன்ற அவதூறுகளை பரப்பினால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...