![]() |
மக்களின் துயரத்தில் லாபம் பார்ப்பதா? சோனியா பிரதமருக்கு கடிதம்!Posted : திங்கட்கிழமை, பிப்ரவரி 22 , 2021 11:24:20 IST
பொருளாதார வீழ்ச்சியை பெட்ரோல், டீசல் விலை மூலம் மறைக்க மக்களை மிரட்டி மத்திய அரசு பணம் வசூலிப்பதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் கடந்த பிறகும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை சொல்வது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறரை ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக 21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளதாகவும்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு விலையை குறைக்காதது கொடூரமானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
18 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி,
பொருளாதார பிரச்சனைகளில் சாக்குபோக்குகளை சொல்வதற்கு பதிலாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
|
|