???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2018  00:01:33 IST

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு வயது 89. நீண்ட காலமாக சிறுநீரகம் பாதிப்பு இருந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆக.10ல் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் இன்று காலை உயிரிழந்தார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் 10 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோம்நாத். கடந்த 2004 - 2009ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக சோம்நாத் இருந்தார். இவர் சபாநாயகராக இருந்த காலக்கட்டத்தில் அவையை சிறப்பாக நடத்தி நற்பெயர் பெற்றுள்ளார். காங்கிரஸின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான கொள்கையை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டிருந்தது. ஆனால் கட்சியின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, 2008ல் கட்சியில் இருந்து சோம்நாத் சட்டர்ஜி நீக்கப்பட்டார்.
 
சோம்நாத சட்டர்ஜி உயிரிழந்ததற்கு இரங்கள் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பலராலும் மதிக்கப்பட்டவர் சோம்நாத் சட்டர்ஜி என்று புகழாரம் சூட்டியுள்ளார். இவரின் மறைவு குறித்து வேதனை தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சோம்நாத் சட்டர்ஜி தன்வாழ்நாள் முழுவதும் சிறந்த ஜனநாயகவாதியாக திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பல கட்சிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கடைசி வரை, அவர் தன்னுடைய கருத்திலும் கொள்கையிலும் உறுதியாக இருந்தார் என்றும் சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...