???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரபுசாலமனின் அடுத்தபடம்!!!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   09 , 2014  01:22:24 IST

 
 
    பிரபுசாலமன் இயக்கிக்கொண்டிருக்கும் கயல் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வெகுவேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். இந்த மாதத்துக்குள் பாடலை வெளியிட்டுவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பாடல் வெளியான பின்பு திரையரங்குகள் கிடைப்பதையொட்டி படவெளியீட்டுத் தேதியை நிர்ணயிப்பார்களாம். முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்து அந்தப்படம் வெளியாகி அதன் இலாபநட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்த பின்பு அடுத்தபட வேலைகளைத் தொடங்குவது என்றிருந்தார் பிரபுசாலமன். ஆனால் இப்போது இந்தப்படம் முடியும்முன்பே அடுத்த படத்துக்கான கதையைத் தயார் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தக்கதையை உதயநிதியிடம் சொல்லியிருக்கிறாராம். அவருக்கும் கதை பிடித்திருப்பதால் நம்முடைய நிறுவனத்திலேயே தயாரிப்போம் என்று உறுதியளித்திருப்பதாகத் தெரிகிறது.
 
 
கும்கி போல இந்தக்கதையும் ஒரு விலங்கை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறதாம். ஆனால் இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்து எடுக்கப்படும் படம் என்று சொல்லப்படுகிறது. கதை விசயத்தில் எல்லாம் பிடித்த மாதிரி நடந்திருக்கிறது. அடுத்தடுத்து நடிகர்கள் மற்றும் சம்பளங்கள் விசயமும் சிக்கலில்லாமல் நடந்துவிட்டால் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்குத்தான் அடுத்தபடம் என்பது உறுதியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...