???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வானில் தோன்றிய நெருப்பு வளையம்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   25 , 2019  22:00:30 IST


Andhimazhai Image

அரிய வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக சூரியனை நிலவு மறைக்கும் காட்சி படிப்படியாகத் தென்படத் தொடங்கியது. அப்போது சூரியனின் நடுப்பகுதியை முழுமையாக மறைக்காமல், 93 சதவீதம் அளவிற்கு மறைத்தது. இதனால், சூரியன் சிவப்பு நிற வட்ட வளையமாக தோன்றியது.



உலக அளவில் துபாயில் முதலில் முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. அதன்பின்னர் மற்ற இடங்களில் தெரியத் தொடங்கியது.



இந்த நெருப்பு வளைய சூரிய கிரகண நிகழ்வு ஒவ்வொரு பகுதியிலும், ஓரிரு நிமிட வித்தியாசத்தில் முழுமையாக தெரிந்தது. சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி, உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை காண முடிந்தது.



இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை கிரகணத்தின்போது வெவ்வேறு நிறங்களில் சூரியன் தெரிந்தது.



கிரணத்தை பார்ப்பதற்காக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...