???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கைது செய்யப்பட்ட சோபியா: பிணை வழங்கினார் நீதிபதி!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   04 , 2018  01:22:31 IST


Andhimazhai Imageசென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அந்த பெண் கைது செய்யப்பட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில் இன்று அவருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

22 வயதாகும் சோபியா, கனடாவில் ஆய்வுப்படிப்பு மாணவி. அவர் விடுமுறையில் ஊருக்குத் திரும்பியபோது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் ஏறினார். அதே விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜனும் பயணம் செய்தார். தான் லக்கேஜ்களை எடுக்க வந்தபோது பாசிஜ பாஜக ஒழிக என்று அந்த இளம் பெண் கோஷமிட்டதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது,  சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 இதற்கிடையில் சோபியாவின் தந்தை மருத்துவர் ஏ  ஏ சாமி, தன் மகளை சென்னையிலிருந்துக் அழைத்து வரும் வழியில் விமானநிலையத்தில் பாஜக ஒழிக என சோபியா கோஷமிட்டதாகவும் இதையடுத்து பாஜக தொண்டர்களும் தலைவர் தமிழிசையும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவரது ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அவருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...