???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மேலும் 2 எம்.பி.க்களுக்கு கொரோனா 0 இருமொழி கொள்கை குறித்த அறிவிப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   13 , 2019  23:57:21 IST

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த ஐதராபாத், உன்னாவ் சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என நாடு முழுவதும் பொதுமக்கள்  மற்றும் அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  

பெருகி வரும் பாலியல் குற்றங்களை குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று  நாடு முழுவதும் அதிகரித்து வரும் கற்பழிப்புகளால் ரேப் இன் இந்தியா என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ராகுல்  பேசியிருந்தார். இவரது கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக பெண் எம்பிக்கள் அமளியில்  ஈடுபட்டனர். இந்நிலையில், ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்தியை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி  இரானி தெரிவித்துள்ளார். ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பாலியல் குற்றங்கள்) என்று ராகுல் காந்தி கூறிய கருத்து அருவருக்கத்தக்கது. ராகுல் காந்தியின் கருத்தை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...