???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவ.22 - பங்குச் சந்தை

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   22 , 2012  06:35:26 IST

இன்றைய வர்த்தக நேர முடிவின்போது மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்ந்து 18517லும் தேசியப் பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 5627லும் முடிவடைந்தன. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்ட தொடரின்போது சில முக்கியமான மசோதாக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் நேற்று சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. ஆனால் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்த அமளியை ஒட்டி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கும், தின வர்த்தகர்களுக்கும் நம்பிக்கை குறைந்ததால் இன்றைய பங்கு வர்த்தகம் பரபரப்பில்லாமல் நடந்து முடிந்தது.

இன்று SBI , L &T , M &M , இன்போசிஸ், ITC  போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், டாட்டா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ICICI ,சிப்லா போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. கடந்த மூன்று தினங்களில் மட்டும் 14.5 சதவிகித அளவுக்கு விலை உயர்ந்திருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனப் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்தன. அதே போன்று கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் முடிவடைந்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் 1431 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் 1366 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் , 146 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றமில்லாமலும் முடிவடைந்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...