![]() |
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவதூறு வீடியோ: பாஜக நிர்வாகி கைதுPosted : புதன்கிழமை, ஆகஸ்ட் 03 , 2022 10:25:57 IST
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவதூறு வீடியோ வெளியிட்ட தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவை சேர்ந்த தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கிருஷ்ணன்(33) என்பவர் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுதொடர்பான வீடியோவில் கிருஷ்ணன், பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள், சாணியை அபிஷேகம் செய்யுங்கள், செருப்பு மாலை அணியுங்கள் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, புளியங்குடியை சேர்ந்த திமுகவினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, புளியங்குடி போலீசார் கிருஷ்ணனை கைது செய்து இந்திய தண்டணை சட்டம் குற்ற எண் 316/ 22 பிரிவு 153(A), 505 (1) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
|