![]() |
இலங்கை போர்க்குற்றம்: ஐநாவில் மீண்டும் விசாரணைPosted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13 , 2015 21:23:27 IST
இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. அப்போது, இறுதிப்போரில் நிகழ்ந்த மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இதே விவகாரத்தில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை என அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. அதேவேளையில், போர்க்குற்றம் தொடர்பாக ஐநா சபை நடத்திய விசாரணை அறிக்கையை நாளைய கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்கிறார். அந்த விசாரணை அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதான இலங்கையின் பதிலும் ஐநா சபை கூட்டத்தில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|