???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை போரின் போது மாயமான மக்கள்: கடற்படை அதிகாரியிடம் விசாரணை

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   02 , 2015  00:10:38 IST

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது காணாமல் போன மக்கள் குறித்து அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளரும், காவல்துறை கண்காணிப்பாளருமான அஜித் ரோஹானா, '2010ஆம் ஆண்டு முதல் வந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு, கடற்படை அதிகாரி ஒருவரின் வாக்குமூலத்தை சிஐடி பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தனர். 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து (ஏராளமான இளைஞர்கள் கடத்தப்பட்டது, காணாமல் போனது தொடர்பான புகார்) விசாரணை நடத்தப்பட்டது' என்றார் அவர். அதேசமயம், அந்தக் கடற்படை அதிகாரியின் பெயரையோ அல்லது அவர் வகிக்கும் பதவிப் பொறுப்பையோ ரோஹானா வெளியிடவில்லை.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் 2006, 2009ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிரமடைந்தது. அப்போது, தமிழ் இளைஞர்களும், இளம்பெண்களும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக, காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச உத்தரவிட்டார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...