???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   06 , 2015  22:38:04 IST

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 71 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 2 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் 55 பேர், தேர்தல் கண்காணிப்புக்காக இலங்கையில் முகாமிட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால், தமிழர்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 19 பேர் போட்டியிடும் இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ராஜபக்சே மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனே இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குகளை எண்ணும் பணி, நாளை இரவு தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...