???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அதிபர் தேர்தல் தோல்வி பயத்தால் ராஜபக்சே தப்பிக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் செய்தி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   04 , 2015  00:35:17 IST

இலங்கை அதிபர் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ராஜபக்சவின் மகன்களுக்கு சொந்தமான விலை உயர்ந்த கார்களை விமானங்கள் மூலம் ரகசியமாக வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.ராஜபக்சவுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், இதனையடுத்து தனது மகன்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 6 பந்தய கார்களை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான இணையதளம் தெரிவித்துள்ளது.தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்ச தமது கார்களை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 9, 10 தேதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் இரண்டு பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...