அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   02 , 2021  10:29:08 IST

பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால், இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
 
உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
இதற்காக, ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
அரிசி, சர்க்கரை, நெல் போன்ற உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...