???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   21 , 2018  06:49:38 IST

காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவின் பேராசையால் தேசம் பெரும் விலை கொடுத்துள்ளது என பா.ஜ.கவை சிவசேனா விமர்சித்து உள்ளது. காஷ்மீரில் பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென்று பாஜக விலக்கிக்கொண்டது. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  “ஒரு தேசத்தை வழிநடத்துவது என்பது குழந்தைகளின் விளையாட்டு போன்றது கிடையாது. ஜம்மு காஷ்மீரில் அராஜகத்தை நிகழ்த்திவிட்டு ஆட்சியை விட்டு வெளியேறுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற மோசமான நிலை இதற்கு முன்னதாக ஏற்பட்டது கிடையாது. இவ்வளவு இரத்தமும் சிந்தவில்லை, ராணுவ வீரர்களும் உயிரிழக்கவில்லை. பா.ஜ.க ஆட்சி செய்யும் போதுதான் இவ்வளவு அழிவும் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதாவின் பேராசை காரணமாகவே ஆட்சி அமைக்கப்பட்டது. பா.ஜனதாவின் பேராசைக்காக தேசம், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரும் விலையை கொடுத்துள்ளார்கள். இதற்காக பா.ஜனதாவை வரலாறு மன்னிக்காது. இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...