???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவகார்த்திகேயன் சம்பளம் ஐந்துகோடி!!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2014  01:17:39 IST

 
    லிங்குசாமியின் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கான சம்பளமாக அவருக்கு ஒருகோடி சம்பளம் என்று முன்பு பேசப்பட்டதையும் இப்போதும் அதைத்தான் தருவோம் என்று லிங்குசாமி தரப்பு சொல்ல முடியாது இப்போதைய மதிப்புக்கேற்ற சம்பளத்தைத் தரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் கேட்க அது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நடந்துகொண்டிருப்பது ஏற்கெனவே வந்த செய்தி. இப்போது அந்தப்பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிட்டதாம். சிவகார்த்திகேயன் இந்தப்படத்துக்காக தனக்கு ஆறுகோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நான்கு கோடிகளில் லிங்குசாமி நின்றிருக்கிறார். இந்தப்படம் இன்னும் தொடங்கவே இல்லை ஆனால் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை எட்டுக்கோடி என்று விலை சொல்லி ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படிச் செய்த பிறகும் சிவகார்த்திகேயனுக்குச் சம்பளம் தர லிங்குசாமி தரப்புக்கு மனசில்லை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்ற தகவல் சிவகார்த்திகேயனுக்குத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். இவ்வளவு தொகைக்குப் படத்தை விற்றுவிட்டு நமக்குச் சம்பளம் தரமனசில்லையே என்று வருத்தப்பட்டாராம். பல வாரங்கள் இதுபற்றிப் பேச்சுகள் நடந்திருக்கின்றன. கடைசியாக ஐந்துகோடி தருவதாக லிங்குசாமி தரப்பில் சொன்னார்களாம். இதுவும் குறைவுதான் என்றாலும் இனிமேல் இதுசம்பந்தமாகச் சண்டைபோடவேண்டாம் என்று முடிவெடுத்த சிவகார்த்திகேயன் ஐந்துகோடிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனால் சிக்கல் முடிந்தாலும் அதன்கசப்பு அப்படியேதானிருக்கும் என்றும் சொல்கிறார்கள். அதன்பின்னர் அந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். படத்தின் நாயகியாக இலட்சுமிமேனனை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...