???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:45:23 IST

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை கோவையில் கமல்ஹாசன் அறிவித்தார். தேர்தலில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் போட்டியிடவில்லை. மேலும் சிவகங்கை தொகுதியில் சிநேகன் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 
மேலும் பல்லக்கில் ஏறி அமருவதை விட, இவர்களுக்காக ஊர் ஊராக பல்லக்கை சுமப்பதில் பெருமை அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
 
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்:
 
சாத்தூர் தொகுதியில் சுந்தர்ராஜ், விளாத்திகுளம் தொகுதியில் நட்ராஜ் ,தஞ்சாவூர் தொகுதியில் துரைஅரசன், ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கவேல் போட்டியிடுகின்றனர்.
 
இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் வளரும் தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வளரும் தமிழகம் போட்டியிடும் தொகுதிகள்
சோளிங்கர் - மலைராஜன், குடியாத்தம் - வெங்கடேசன், திருப்போரூர் - கருணாகரன் போட்டியிடுகின்றனர்.
 
இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பரமக்குடி - உக்கிரப்பாண்டியன் ஆகியோர் மநீம இடைத்தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
திருவாரூர் - அருண் சிதம்பரம், மானாமதுரை - ராமகிருஷ்ணன், பெரியகுளம் - பிரபு போட்டி
பாப்பிரெட்டிபட்டி - நல்லதம்பி, அரூர்- குப்புசாமி, நிலக்கோட்டை - டாக்டர் சின்னதுரை, பூந்தமல்லி - பூவை ஜெகதீஷ், பெரம்பூர் - பிரியதர்ஷினி, ஓசூர் - ஜெயபால், ஆம்பூர் - நந்தகோபால், கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் மகேந்திரன், திருப்பூர் - வி.எஸ்.சந்திரகுமார், பொள்ளாச்சி - மூகாம்பிகை ரத்னம்
கடலூர் - வி.அண்ணாமலை, விருதுநகர் - வி.முனியசாமி, தென்காசி - முனீஸ்வரன் போட்டி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...