???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவகார்த்திகேயனை தவிக்க விட்ட அனிருத்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   30 , 2014  01:31:48 IST

 

    தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் டாணா படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையிலேயே பல நாட்களாக இருக்கிறதாம். வசனப்பகுதிகளைப் படமாக்கிவிட்டார்களாம். பாடல்கள் மட்டும் படமாக்கவேண்டியிருக்கிறதாம். படத்தின் இசையமைப்பாளர் அனிருத். அவர் இந்தப்படத்துக்குப் பாடல்கள் போட்டுக்கொடுப்பதில் நிறையத் தாமதம் செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. தனுஷூடைய படத்துக்கே இந்த நிலையா? என்று வியந்து விசாரித்தால், இந்தப்படத்துக்காகப் போட்டு வைத்த மூன்று மெட்டுகளை விஜய் படத்துக்காகக் கொடுத்துவிட்டாராம். டாணா படத்தின் வேலைகளுக்கு நடுவில் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருந்தனவாம். அப்போது டாணா படத்துக்காகப் போட்ட மெட்டுகளைக் கேட்டுப்பாருங்கள் என்று முருகதாஸிடம் போட்டுக்காட்டியிருக்கிறார் அனிருத். அந்த மெட்டுகள் முருகதாஸூக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அவர் போய் விஜய்யிடம் இந்தவிசயத்தைச் சொல்ல அவரும் அந்த மெட்டுகளைக் கேட்டாராம். அவருக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், இந்த மெட்டுகைள அப்படியே கத்தி படத்தில் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று விஜய் சொன்னாராம். விஜய் கேட்டதும், பெரியநடிகரே இறங்கிவந்து கேட்கும்போது மறுக்க முடியாமல் அந்த மெட்டுகளை அவர்களிடம் கொடுத்துவிட்டாராம் அனிருத்.

 

பாடல் தயாராகியிருக்கும் என்று நம்பி டாணா படத்துக்கான பாடலைப் படம்பிடிக்கத் திட்டமிட்டுவிட்டார்களாம். அதன்பின் பாடலைக் கேட்டால், அனிருத் இந்தக்கதையைச் சொல்லியிருக்கிறார். அவரிடம் கோபித்துக்கொள்ளவும் முடியாது. இதனால் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்துவிட்டோம் தயவு செய்து சீக்கிரமாகப் பாடல் போட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம். அவரும் இப்போது டாணா படத்துக்காக வேலை செய்துகொண்டிருக்கிறாராம்.

 

நல்லபாடல்கள் கையைவிட்டுப் போய்விட்ட ஏமாற்றத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...