???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  22:17:34 IST

இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பப்பி'. இந்தப் படத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் வருண், வனமகன், போகன், ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைக்கிறார்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.. இது வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்டானது. இளைஞர்களை கவரும் வகையில், இந்த போஸ்டரில் எழுத்து-இயக்கம் 'முரட்டு சிங்கிள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் முழு நீல பாலியல் படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவருடைய படம் ஒரு பக்கமும், மற்றொரு புறம் நித்யானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தன.
 
இதனை எதிர்த்து ஆபாசப் பட நடிகர் ஒருவரின் படத்துடன், நித்யானந்தாவின் படத்தையும் சேர்த்து, மோஷன் போஸ்டர் வெளியிட்ட பப்பி படக்குழுவினர் மீது சிவசேனா அமைப்பு போலீசில் புகார் அளித்துள்ளது.
 
இந்நிலையில் சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில், இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த புகார் மனுவை பகிர்ந்து பலரும் “பிரே ஃபார் முரட்டு சிங்கிள்” என்று ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...