அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சீதா ராமம்: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2022  17:54:06 IST


Andhimazhai Image

காதல் எல்லாவற்றையும் தாண்டியது என்பதை துயரம் தேய்ந்த காவியமாக சொல்ல முனையும் திரைப்படமே சீதா ராமம்.

லண்டனில் படிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ராஷ்மிகாவுக்கு (அஃப்ரீன்) இந்தியா என்றாலே வெறுப்பு. அவர், இந்தியக் கொடியுடன் இருக்கும் கார் ஒன்றை எரித்துவிட, கார் முதலாளியோ புதிய காரைக் கேட்கிறார். அதற்கு பத்து லட்சம் ரூபாய் ஆகும் என்பதால், தாத்தாவைப் பார்க்க சொந்த நாட்டிற்கு வருகிறார் ராஷ்மிகா. ராணுவ உயர் அதிகாரியான அவரின் தாத்தாவோ இறந்துவிட்டிருப்பார். அவரின் கடைசி ஆசையாக, இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் (மிருனாளின் தாக்கூர்) கடிதம் ஒன்றை ஒப்படைக்கச் சொல்லியிருப்பார். நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்தியாவிற்கு வரும் ராஷ்மிகாவுக்கு இருபது வருடங்களுக்கு முன் நடந்த  சீதா - ராம் காதல் கதை அறிமுகமாகி, வெவ்வேறு மனிதர்களால் சொல்லப்படுகிறது. அந்த கடிதம் யார், யாருக்கு எழுதியது? அந்த நபரை ராஷ்மிகா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய ராமாயணக் காதலை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவபுடி. காதல் தரும் துள்ளலும், ஏக்கமும், தவிப்பும், பிரிவும், தனிமையும்  அழகாக படம் பிடித்திருக்கிறார். ஏறக்குறை மூன்று மணி நேரம் படம் என்பதையே மறந்துவிடுகிறோம்.

ராணுவ வீரனாகவும், காதலனாகவும் வரும் துல்கர் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இளவரசியாக வரும் மிருனாளின் தாக்கூர் பளபளவென்று மின்னுகிறார். நடனத்தாலும், நடிப்பாலும் கட்டிப்போடுகிறார். கோபக்காரியாக வந்து அமைதி புயலாக மாறும் ராஷ்மிகா மந்தன்னாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன், சுமந்த், பிரகாஷ் ராஜ், தருண், பூமிகா, வெண்ணிலா கிஷோர் என பலரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

பாகிஸ்தான், காஷ்மீர், வட இந்தியா மாநிலங்கள், ஆந்திரா என அத்தனை பகுதிகளையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர் ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர். படத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார் கலை இயக்குநர்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்பவும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையின் போக்கிற்குப் பொருந்தாமல் போகிறது. மதன் கார்கியின் வசனம் படத்தை அசல் தமிழ் படமாக மாற்றிவிட்டது. இதை துல்கருக்கும் - மிருனாளின் தாக்கூருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தின் போது உணர முடியும்.

சில இடங்களில் ஒரு காட்சி முடிவதற்குள் அடுத்த காட்சி திடீரென வந்துவிடும். படத்தின் நீளத்தைக் குறைப்பதற்காகப் படத்தொகுப்பாளர் அவசரப்பட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது.

இவ்வளவு நிறைகள் கொண்ட படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. இந்தியா – பாகிஸ்தான், இந்து - முஸ்லீம் விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. இஸ்லாமியர்கள் தீ வைக்க வரும் போது நாயகன் பசுவையும் கன்றையும் அவிழ்த்துவிடுவது, இஸ்லாமியர்கள் என்றாலே பெரும்பாலும் தீவிரவாதிகளாகத்தான் இருப்பார்கள் என்பது போன்று காட்டுவதெல்லாம் இப்போதைய பெரும்பான்மை அரசியல்போக்குடன் ஒத்துச் செல்வதுபோலவே உள்ளது.

 

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...