???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எஸ்.பி.பி: நிலவு தூங்கும் நேரம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  04:27:35 IST


Andhimazhai Image

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போராடிவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று மறைந்திருக்கிறார். அரை நூற்றாண்டு காலமாக அவரது குரலில் திளைத்திருந்த பல மொழி ரசிகர்களுக்கு எஸ்.பி.பி-யின் மரணச் செய்தி பேரிடியாக விழுந்திருக்கிறது.

 

ஆந்திரத்தில் 1946-ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளம் பருவம்தொட்டே தனது இசைப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். பாடகர் எஸ். ஜானகி மூலம் அடையாளம் காணப்பட்ட அவரது முதல் திரைப்பாடல் 1967-ஆம் ஆண்டு வெளியான “ஸ்ரீஸ்ரீஸ்ரீ மர்யாத ராமண்ணா” திரைப்படத்தில் இடம்பெற்றது. சாந்தி நிலையம் திரைப்படத்தில் இடம்பெற்ற “இயற்கை எனும் இளையக்கன்னி” பாடலே தமிழில் அவர் பாடிய முதல் பாடல். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் நிலவே வா” பாடல்தான் முதலில் வெளியானது.

 

அப்போது தொடங்கி தமிழின் முதன்மையான பாடகராக எஸ்.பி.பி விளங்கினார். 15 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 6 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அவர் பாடிய முதன்மையான மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய அனைத்திலும் தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது இதில் சிறப்பம்சமாக இருக்கிறது. இதில் தெலுங்கில் மட்டும் மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.

 

பாடகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பரிணமித்த எஸ்.பி.பி, 40 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேளடி கண்மணி திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அவர், அதன்பிறகு பல படங்களில் நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்தார்.

 

திரைஇசை பாடல்களில் அவர் புரிந்த பல சாதனைகள் இன்றளவும் வேறெவராலும் நெருங்க முடியாததாக இருக்கின்றன. ஒரேநாளில் 21 பாடல்கள் பாடியது, தமிழில் மட்டும் ஒரேநாளில் 19 பாடல்களை பாடியது என இதில் பல சாதனைகள் அடங்கும். திரைஇசை வரலாற்றில் பல தசாப்தங்களை பார்த்துவிட்ட அவர், அக்காலங்களுக்கேற்ப பல புதுமைகளையும் நிகழ்த்தியிருக்கிறார். கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற “மண்ணில் இந்த காதலின்றி” என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

 

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பெரும்பாலான பாடல்கள் அவரது நெருங்கிய நண்பரான இளைராஜா இசையில் உருவானவை. அதில் பல பாடல்களின் பரிபூரணத்தை எஸ்.பி.பி-யின் குரலின்றி நம்மால் கற்பனைகூட செய்யமுடியாது. இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசகர், யுவன், அனிருத் வரை அனைத்து காலக்கட்ட இசையமைப்பாளர்களின் இசைக்கும் எஸ்.பி.பி-யின் குரல் ஆதாரமாக விளங்கியிருக்கிறது. இன்றுவரை தமிழ் மக்களின் இரவுகளை இசையால் நிறைவு செய்துகொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பி பாடல்கள் தான் என்பதில் வேறுகருத்தே இருக்க முடியாது. காதல், துயரம், உற்சாகம், நம்பிக்கை என எவ்வகை உணர்வு நிலைகளையும் தனது ஆன்ம குரலால் கட்டியெழுப்பும் வல்லமை எஸ்.பி.பி-க்கு உண்டு. அவ்வகையில் அவரது மறைவு நமக்கு பேரிழப்பு. இதனை கடக்கவும் அவரது பாடல்கள் தான் ஆறுதலாக இருக்கின்றன என்பதே நிதர்சனம்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...