???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லியிலும் பாடுங்கள் ரம்யா!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   04 , 2019  03:27:10 IST


Andhimazhai Image
வேடிக்கையாகத்தான் இருக்கிறது ரம்யா ஹரிதாஸின் தேர்தல் பிரச்சார காணொலி காட்சிகளைக் காண்பது. பிரபலமான மலையாளப் பாடல்களை இனிய குரலில் அவர் பாட, மக்கள் கைத்தட்டி உடன் சேர்ந்து பாடுகிறார்கள். மேடையிலேயே இருக்கும் உள்ளூர் விஐபிகளும் சேர்ந்து ஆடுகிறார்கள். மக்களை ஆடவைக்கும் பாடல்களையும் பாடுகிறார். ரகுபதி ராகவ ராஜாராம் என அழகான உருகவைக்கும் பாடல்களையும் பாடுகிறார்.
 
 
இசை மூலம்  கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் மக்களின் இதயங்களைக் கவர்ந்திருக்கிறார் ரம்யா ஹரிதாஸ்.
 
இவர்தான் கேரளத்தின் இரண்டாவது தலித் பெண் எம்.பி, தற்போது கேரளத்தில் வெற்றிப்பெற்ற ஒரே பெண் வேட்பாளரும் இவர்தான், வயது 32தான் ஆகிறது இவருக்கு.
 
கூட்டத்தை தன் பேச்சால் கட்டிப்போடுவது பெரும் தலைவர்களின் பாணி. முதல்முறையாக தன் இசையால் ஈர்த்திருக்கிறார் ரம்யா. 
 
 
குன்னமங்கலத்தைச் சேர்ந்த ரம்யாவின் தந்தை ஹரிதாஸ் கூலித்தொழிலாளி. தாய் ராதா, காங்கிரஸ் மகளிர் அமைப்பில் முன்னணி பொறுப்பு வகித்தவர். கடந்த 2010-ஆண்டிலேயே ராகுல் காந்தி திறமையான இளைஞர்களை இனம்காண தேர்வுகள் நடத்தியபோது ரம்யாவை அடையாளம் கண்டார். 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஆலத்தூர் தொகுதியில், கடந்த இருமுறையும் தொடர்ந்து வெற்றிப்பெற்ற பி.கே. பிஜுவை அக்கட்சி மீண்டும் களமிறக்கியது. அவரை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் ரம்யா.
 
முதலில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்த ரம்யா ஹரிதாஸை, ”இவர் நாடாளுமன்றம் சென்று மக்கள் பிரச்னைகளை பேசப்போகிறாரா? அல்லது பாடல் பாட போகிறாரா?” என சிபிஎம் கட்சியினர் கேலி செய்தனர்.”பாட்டுப்பாடி ஓட்டுக்கேட்க இது சூப்பர் சிங்கர் போட்டி இல்லை’ என்றனர். ஆனால் அதன்பின்னர் ரம்யா மேலும் ஆவேசமாகப் பாடினார்!
 
தன்னை இழிவாக விமர்சித்த மூத்த சிபிஎம் தலைவர் விஜயராகவன் மீது காவல்துறையில் புகார் அளித்தார் ரம்யா ஹரிதாஸ். இனி வேறு எந்த பெண்ணுக்கும் இப்படியான தாக்குதல் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே புகார் அளித்ததாக கூறிய ரம்யாவின் விளக்கம் மக்களிடம் கவனம் பெற்றது.
 
சக்திவாய்ந்த இடதுசாரிகளின் பிரச்சாரத்தை தனது எளிய பாடல்களின் வழியாக தகர்ந்தெரிந்த ரம்யா ஹரிதாஸ், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தனித்த அடையாளம். நீங்கள் நாடாளுமன்றத்திலும் பாடுங்கள் ரம்யா! உங்கள் தொகுதியின் தேவைகளைப் பேசுவதை விட பாடுவது இதயங்களைத் தொடும்!
 
 

English Summary
Sing also in delhi ramya

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...