அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சினம்: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   16 , 2022  22:00:54 IST


Andhimazhai Image

மனைவியின் மரணத்தையொட்டி சுமத்தப்படும் இழிவைத் துடைக்கப் போராடும் காவல் துறை அதிகாரி ஒருவரின் கதையே சினம் திரைப்படம்.

சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்று வருகிறார் நாயகன் அருண் விஜய்(பாரி வெங்கட்). இவருக்கு மருத்துவமனையில் வேலை பார்க்கும் நாயகி பாலக் லால்வாணியுடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வர அவர்களுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. இதற்கிடையே, தங்கையின் திருமண ஏற்பாட்டையொட்டி, பாலக்  லால்வாணி அப்பா வீட்டிற்கு சென்று திரும்பி வரும் போது மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் உடலுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்படுகிறது.

தனது மனைவியின் கொலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அருண் விஜய், கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் பாடத்தின் மீதிக் கதை.

காதல், பாசம், குடும்பம், ஆக்‌ஷன், எமோஷன் என நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருக்கிறது சினம். க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு மட்டும் படம் கொஞ்சம் பொறுமையாக செல்வது போல் தெரிந்தாலும் முழு படமும் விறுவிறுப்பாக செல்கிறது. திரைக்கதை கனக்கச்சிதமாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன்.

அருண் விஜய்யின் மிடுக்கான போலீஸ் நடிப்பில் குறை காண முடியவில்லை. இறந்து போன மனைவியை கையில் ஏந்தி கொண்டு அவர் அழும் காட்சிகள் மெய்சிலிர்த்துப் போகிறது. பலக்லல் வாணி அழகான குடும்பத்துப் பெண்ணாக வந்து போகிறார். காளி வெங்கட், குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர்.

ஷபீரின் பின்னணி இசை கதையின் போக்கிற்கு பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக இரவு காட்சிகளில் வரும் பின்னணி இசை திகிலூட்டுகிறது. அதேபோல், கோபிநாத் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பிற்கு உதவியிருக்கிறது. சில இரவு காட்சிகளை டாப் ஆங்கிளில் எடுத்து அசத்தியிருக்கிறார்.
உதிரிகளாக இருக்கும் இளைஞர்கள் எப்படியெல்லாம் தங்களை சீரழித்துக் கொண்டு, மற்றவர்களையும் சீரழிக்கிறார்கள் என்பதை படம் யதார்த்தமாகப் பேசியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளை திருத்துவதற்கு அருண் விஜய் சொல்லும் ஆலோசனையும், தீர்வும் காலாவதியான ஒன்று.

இந்த வாரம் குடும்பத்துடன் சென்று பார்க்க சினம் சிறந்த படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...