திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது குறித்து நடிகர் சிம்பு கடிதம் ஒன்றை வெளியிடுள்ளார்.
அதில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கவும், பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்கள், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டியும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தையும், விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தையும் தியேட்டர்களில் சென்று பாருங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.