???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசைக் காப்பாற்றவே அதிமுக அவையை முடக்குகிறது: சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு! 0 தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரத் தயார்: பாஜக பொதுச்செயலாளர்! 0 நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்: மைத்ரேயன் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை: சிவசேனா 0 காவிரி விவகாரத்தில் மார்ச் 29- ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்: ஓ.பன்னீர்செல்வம் 0 டீகேன்னா தினேஷ் கார்த்திக்... இறுதி பந்தில் அடித்த அந்த ஆறு! 0 மீண்டும் ரஷ்யாவின் அதிபராகிறார் விளாதிமீர் புடின்! 0 இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் ரத்து : மைத்ரிபால சிறிசேனா 0 குரங்கணி தீ விபத்து: சட்டசபையில் இரங்கல் தீர்மானம்! 0 தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி: கி.வீரமணி 0 முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா கோப்பையை வென்றது! 0 அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி! 0 தோல்வியடைந்தவர்களின் பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது: நிர்மலா சீதாராமன் 0 பாஜகவில் இருந்து மோடியை நீக்கிவிட்டால் பாஜக கட்சியே இருக்காது: குஷ்பு 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக உண்ணாவிரத போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிம்புவுக்கு நான்கு கதாநாயகிகள்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   15 , 2014  01:10:13 IST

 
    சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வாலு, இதுநம்மஆளு ஆகிய படங்களுக்குப் பிறகு கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம். விஜய்சேதுபதி நடிக்கவிருந்த அந்தப்படம் இவருக்குக் கைமாறியதன் காரணம் இப்போது கசிந்திருக்கிறது. இந்தப்படத்தில் நாயகன் நான்கு காலகட்டங்களில் நான்கு விதத் தோற்றங்களில் வருகிற மாதிரி கதை எழுதப்பட்டிருக்கிறதாம். அதன்படி ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒரு கதாநாயகியையும் நடிக்கவைக்கலாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்களாம். விஜய்சேதுபதியை வைத்துக்கொண்டு நான்கு கதாநாயகிகளையும் வைத்தால் அது பொருத்தமாக இருக்காது என்று பலரும் கருத்துச் சொன்னதாகத் தெரிகிறது. சிம்புவோ, ஏற்கெனவே வல்லவன் படத்தில் நயன்தாரா, ரீமாசென், சந்தியா ஆகிய மூன்றுநாயகிகளுடன் நடித்திருந்தார். அவர் இப்போது நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கிறார் என்றால் கதைக்குப் பொருத்தமாக இருப்பதோடு பெரியஅளவில் விளம்பரங்களும் கிடைக்கும் என்று நினைத்ததன் விளைவுதான் விஜயசேதுபதியை விட்டுவிட்டு சிம்புவை நாடிப்போனதன் காரணம் என்று சொல்கிறார்கள். நான்கு நாயகிகள் மட்டுமின்றி நான்கு நகைச்சுவை நடிகர்களையும் படத்தில் இணைத்துவிட்டால் இன்னும் பலமாக இருக்கும் என்கிற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. அதையும் செயல்படுத்த முனைகிறார்களாம். சிம்பு தற்போதிருக்கும் எல்லா நகைச்சுவை நடிகர்களுடனும் நல்லநட்பில் இருப்பவர் என்பதால் அவர் படத்தில் நடிக்க எல்லோரும் தயாராக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. யார் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதை அவர்கள் முடிவு செய்துவிட்டார்களாம். விரைவில் அதுபற்றிய அறிவிப்புகள் வருமென்றும் சொல்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...