???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-5 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   12 , 2018  06:05:39 IST

 

 

 

காளிதாசரின் சோதிட குறிப்புகள் நாம் அனைவரும் அறிந்தவையாக இருக்க முடியாது, அவருடைய நூலான உத்தரகாலாம்ருத்ததில் குறிப்பிட்ட சோதிட ரீதியிலான ஸ்லோகங்கள், இறைவனால் நேரடியாக அவருக்கு உணர்த்தப்பட்டவையாக தான் இருக்க வேண்டும், சோதிடத்தில் கிரகத்தின் காரகத்துவங்கள் மற்றும் ராசிகளின் ஆதிபத்தியங்கள் போன்றவை, நமது ரிஷிகள் தவம், தியானம், போன்ற ஆன்மீக உச்ச நிலைகளில் மனம் அடக்கி, இறைவனிடம் ஒன்றி இருந்த போது  எல்லாம் வல்ல இறைசக்தியால் அருளப்பட்டவைதான் . இன்றும் இந்த அடிப்படை சோதிட அறிவை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்று அறிய முடியாமல் திணறி கொண்டுதான் இருக்கிறோம்.

 

உலகின் வேறு  எந்த சோதிட முறையிலும் இல்லாத , நம் ஜோதிடத்திற்கு மட்டுமே உள்ள தனிசிறப்பு, மனித வாழ்வை பிறந்ததிலிருந்து, இறுதி வரை பகுதி பகுதியாக பிரித்து பலன் சொல்லும் தசா புத்தி கணக்கீடுகள், புலிபாணி ஜோதிடம் 300 – புலிப்பாணி சித்தர் இந்த நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல் அமைத்திருக்கிறார், எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது, நூலின் துவக்கத்தில் லக்னங்களை பற்றி விவரித்து விட்டு, தொடர்ச்சியாக கிரகங்களின் தன்மைகளை விளக்குகிறார், பின்னர் லக்னங்களை கொண்டு குறிக்கப்படும் ஒவ்வொரு பாவங்களின் பலன்களை விளக்குகிறார், ஒவ்வொரு கிரகமும் எந்த பாவங்களில் இருந்தால் என்ன பலன் என்று விவரிக்கிறார், கிரகங்களின் பார்வைகளையும் அதன் பலன்களையும் விவரித்துவிட்டு, இந்த கிரகங்களின் மகா தசையில் இந்த புத்தி நடைபெற்றால் இன்ன பலன் என்பதையும் வரையறுத்து தெளிவாக சொல்கிறார் , தமிழுக்கும் ஜோதிடக்கலைக்கும் கிடைத்த அரும் பெரும் கொடை இந்த நூல் என்றால் மிகையில்லை.

 

காலம்காலமாக விளக்கி சொல்லாமல் பாமரமக்களும் அறியாமல் போய்விட்ட இந்த மாபெரும் கலையை எல்லோருக்கும் புரியும் படி தமிழில் எளிமைப் படுத்தவேண்டும் , என்பதை தற்கால ஜோதிடக் கலை அரசு ஆதித்ய குருஜி அவர்கள் ஜோதிடம் ஒரு தேவ ரகசியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

 

மேலும் பலன் சொல்வதை தவிர்த்து விட்டால் ஜோதிடம் என்பது முழுக்க் முழுக்க வானவியலை சார்ந்த ஒன்றுதான் என்பதை பகுத்தறிவாளர்கள் கூட ஒத்து கொள்கிறார்கள். என்கிறார் . அதை போலவே ஒரு மனிதனின் வாழ்வை 20 வருடங்களாக மகரிஷி பராசரர் எந்த கணக்கில் எடுத்து கொண்டார் ? அந்த 120 வருடங்களையும் ஒன்பது கிரகங்களுக்கும் சமமாக இல்லாமல், கேதுவிற்கு 7 வருடங்கள், சுக்கிரனுக்கு 20 வருடங்கள் , சூரியனுக்கு 6 , சந்திரனுக்கு 10, செவ்வாய்க்கு 7 , ராகுவிற்கு 18 , குருவிற்கு 16 , சனிக்கு 19 வருடங்கள் என எதன் அடிப்படையில் என்பது ஒரு மாபெரும் பிரம்ம ரகசியம் என்கிறார். அதனினும் மேலாக ஒரு கிரகத்தின் ஆளுமை காலம் எனும் தசைவருடங்களுக்குள் மற்ற கிரகங்களின் செயல்பாடுகளை ஒன்பது மாதங்கள் அடங்கிய  பிரிவுகளாக புத்திகள் எனவும் ஒவ்வொரு புத்தியையும் ஒன்பது பிரிவுகளாக பிரித்திருப்பது விசேடமானது. எனக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் தான் நினைவுக்கு வந்தது.

 

ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது

எண்பதடா, உருவத்தை பார்ப்பவன் மனிதனடா – அதில்

உள்ளத்தை காண்பவன் இறைவனடா.

  • கண்ணதாசன்,

 

மேற்கூறிய விளக்கங்களை கண்ணதாசன் மூன்றே வரிகளில் அடக்கி விட்டார்.

 

ஏறும்போது எறிகின்றான் , இறங்கும் போது சிரிக்கின்றான்,

வாழும் நேரத்தில் வருகின்றான், வருமை வந்தால் பிரிகின்றான்,

தாயின் பெருமை மறக்கின்றான் , தன்னல சேற்றில் விழுகின்றான்,

பேய்போல் பணத்தை காக்கின்றான்.

பெரியவர் தம்மை பழிக்கின்றான்.

 

என்று எட்டு குணங்களை எண்பதாக உருவகப்படுத்திருக்கிறார் கண்ணதாசன், இந்த மனிதனுக்கு ஆகாத குணங்கள், எண்பதாக பிரிகிறது என்பதும் உண்மையே , இந்த குணங்களுடன் வாழ்வு சுழன்று கொண்டே தான் இருக்கின்றது . இன்று அழகாக தெரியும் ஓர் முகம், பிற்பகுதில் மாறிவிடும், இன்று சாப்பாட்டிற்கே அலைந்து கொண்டிருக்கும் ஒருவன் ஒரு காலகட்டத்தில் அரசனாகும் தகுதியையும் அடைகின்றான். யார் எப்பொழுது எந்நிலை அடைவார்கள் என்று அறியவே முடியாது, அது இறைவனின் பிரபஞ்ச ரகசியம், நீ ஒருவனை மதிக்காமல் , ஏளனமாக நினைத்தாயென்றால் , அவனே ஒரு காலகட்டத்தில் உன் முன்னே பிரமாண்டமான வாழ்க்கையுடன் நிற்பான், அதனால் கண்ணதாசன் கூறிய மேற்கண்ட குணங்களை ஒதுக்கி வாழ்தலே சிறந்தது. அதனால் பணம் வந்த பின்பு எல்லோரையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை வல்லவராகத்தான் இருக்க கூறுகிறேன் அனைவரையும் மதித்து, தாயின் பெருமையை மறக்கின்றான் என்பதும், பட்டினத்தாரின் தாயின் பெருமையை தாயின் இறுதி சடங்கிற்கான பாடலிலும் இரு நிலைகளை அறிய முடிகிறது, இந்த இருநிலையாக சூரியனையே தாயாக்கியவன் கவிஞர் கண்ணதாசன். என்ன புரியவில்லையா? கர்ணன் படத்திற்காக அவர் எழுதிய பாடலையே கூறுகிறேன்.

 

ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே போற்றி,

அருள் பொங்கும் முகத்தை காட்டி, இருள் நீக்கம் தந்தாய் போற்றி.

தளைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம், துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி,

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி…

- கண்ணதாசன்

    

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...