???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-8 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   03 , 2018  19:06:43 IST

ஏலேலோ...

                நீலசேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு

                நெளிஞ்சி நெளிஞ்சி பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு

                யாரை காண துடிக்கிறியோ கரையிலே நின்னு

                அந்த ஆள் வராமல் திரும்பறியோ சொல்லடி கண்ணு

                                திருவிளையாடல் படத்திற்காக கண்ணதாசன் தந்தது. இந்த பாடல் ஓர் தமிழன் தூர்வார இல்லையே என்பதையே காட்டுகிறது. ஆனால் துப்புரவாளர்களான கடல் ஆமைகள் இன்னும் வரலாற்றை சுமந்த படி, உலகில் 3 இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதில் இரண்டு இடங்கள் மெக்ஸிகோவின் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி. இங்கே பிறக்கும் ஆமைகள் அதிகம் ஆண் குழந்தைகளாக பிறக்கிறது, காரணம் குளிர் வெப்பநிலை. ஆனால் நமது கடலில் குறிப்பாக கன்னியாகுமரியிலிருந்து, இலங்கை, ஒரிசா வரை பெரும்பாலானவை பெண் பிள்ளைகளாகவே பிறக்கின்றன. இதற்கு தட்ப வெப்பநிலை தான் காரணம். இதையே நமது மரபோடு ஒப்பிடுகிறார்கள். நமது பெண்கள் பிரசவத்திற்கு ஊருக்கு வருவதையே காட்டுகிறது. பிறந்த கடல் ஆமைகள் பல வருடம் கழித்து, திரும்பி தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகவும், பிரசவத்திற்காகவும்  வருவது நாம் கொண்ட மரபே. தமிழர்கள் ஆமையை மிகவும் விரும்பி பார்த்து பாதுகாத்திருக்கிறார்கள்.

                தமிழ்நாட்டில் மட்டும் 460 கோவில்களில் கடல் ஆமை சிற்பங்கள் மிக தெளிவாக இருக்கிறது. பாண்டியனுடைய கிமு 6ம் நூற்றாண்டின் காசுகளில் ஆமை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கடலில் இந்த ஆமைகள் தமிழர்களை காப்பாற்றியதற்கான பதிவுகளும் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு ஓர் பழமொழி நம்மிடையே புகுத்தப்பட்டது.

                ‘ ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது” என்று. அமினா என்பது போர்ச்சுகீசிய சொல். 16ம் நூற்றாண்டில் ஆமையை கொல்லக் கூடிய பழக்கத்தை உருவாக்கினார்கள். நம்முடைய மீனவர்களிடம் ஆமையை கொல்லக் கூடிய பழக்கம் கிடையாது. டயனோசர் காலத்தில் வாழ்ந்த கடல் ஆமைகள் இன்று வரை நம் தமிழ் கூறுகளுடன் இருப்பதே நமது கலாசார பெருமை.  உலகத்தில் மிக பழமையான ஆமை ஓடு, திருச்சியில கல்லா மேடு என்ற இடத்தில் 2001 ல் கிடைத்ததாக ஒரிசா பாலு கூறுகிறார். அந்த ஆமை ஓடு இன்று அமரிக்காவில் மிக மிக பாதுகாப்பாக நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். இதன் காலம் கிட்டத்தட்ட 6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. கடல் சார் ஆராய்ச்சியாளர்களால் இன்றளவும் கண்டுபிடிக்கப்படும். கடலில் மூழ்கியுள்ள மக்கள் வாழ்ந்த தீவுகள். ஆமைகளை வைத்தே அறியப்படுகின்றன. இப்படி நம் கலாச்சாரத்தோடு ஒன்றியுள்ள கடவுள் கூர்ம அவதாரமாக வந்து, நம் பரிணாம வளர்ச்சியை நமக்கே தந்த அறிவியல் ரீதியிலான கருத்துக்கள். ‘ஆமை புகுந்த வீடு” என்ற ஒற்றை பழமொழியை வைத்தே நம் கதையை முடித்துவிட்டார்கள் எதிரின போராளிகள். இன்றும் ஆமையை நாம் வீட்டில் வளர்ப்பதென்றால், இனம்புரியாத ஓர் பயம் நமக்கு தொற்றிக் கொள்ளும். அதே பயம் நமது சமூகத்திற்கு சீமகருவேலையால்  ஏற்பட்ட இழப்போடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும். சித்தர்கள் மூலிகை வனங்களை ஏற்படுத்த கூறினார்கள். நாம் சீமகருவேல வனத்தை கொண்டு, நீராதாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விறகுக்காக கொண்டு வந்த இந்த பொருளாதாரம் ஒன்றால், இதற்காக இதுவரை நாம் செய்த செலவு கணக்கிலடங்காதது.

                உலக நியதியில் ஒரு புறம் நாம் இயங்க. பிரபஞ்ச விதிகள்  மறுபுறம்  இயங்க தன்னிச்சையாக அல்லது தலைவிதி என்று அறியபடுவது அறிய முடியாததாகவே இருக்கிறது. இதை உணர்ந்த ஞானிகள், மெய்யுணர்வின், தவத்தின் மூலம் அறிந்தவற்றை நமக்கு உரைத்திருக்கிறார்கள். அவைகள் இன்று சங்க கால இலக்கியமாகவோ, சோதிடமாகவோ, புராணமாகவோ, வேத நூல்களாகவோ, மந்திரங்களாகவோ, சுயமுன்னேற்ற நூல்களாகவோ, கட்டிட கலையாகவோ, சித்தர் பிரதிஸ்டை செய்த சிலைகளாகவோ, மருத்துவ குறிப்புகளாகவோ, ரசவாத முறைகளாகவோ, இறுதியாக மனிதனே கடவுளின் அவதாரமாகவோ உலாவி வருகின்றதை, நாம் இன்று வரை 10 சதவிகிதம் அளவு கூட உணரவில்லை என்பதே யதார்த்த நிலைமை. எல்லாமே உண்மைக்கு புறம்பாக திரிக்கப்பட்ட விஷயங்களையே நாம் உண்மை  உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அது நமது கல்விக் கொள்கையின் வாயிலாக கூட இருக்கலாம்.

                ‘மின்னல் மின்னினால் அவ்வொளியை கண் பார்க்க மறுக்கும். அதே ஒளியை தொலைக்காட்சி மூலம் பார்த்து நம் மனம் மகிழும். எத்தனை பெண்கள் குழந்தைகள் இவ்வொளியை உள்வாங்கி கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?,           ஒளி உன் பருவத்தை தூண்டும், இன்று அதிவேகமான பூப்படைதல் 10 வயதில் கூட பெண் குழந்தைகள் வயதிற்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த செயல் பிராய்லர் கோழி சாப்பிடுவதால் தான் என்று திரித்து விடுகிறார்கள். உண்மையிலேயே பிராய்லர்  கோழி புரதசத்து மிக்கது. மற்றவர்கள் கூறுவது  போல, இதில் எந்த ஹார்மோன் ஊசிகளும், ஸ்டிராய்டுகளும் உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஆண்டிபயோடிக் மருந்துகள் மட்டும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அதற்கும் கூடிய விரைவில் ஓர் சட்டம் வந்துவிடும். பொதுவாக அசிடிப்பயர்ஸ் என்று சொல்லப்படும் அமில ஊக்கிகள் பயன்படுத்தினாலே நாம் ஆன்டிபயாடிக் சமாச்சாரத்தில் இருந்து விடுப்பட்டுவிடலாம். இன்று நான் பார்க்கும் எத்தனையோ பண்ணைகளுக்கு ஆன்டிபயாடிக் இல்லாமல் தான் வைத்தியம் பார்த்திருக்கிறேன். அதற்கு சித்தர்களின் ஆசியும், அவரது பாடல் அறிவே தேவை. பல வைரல் தொற்றுகளுக்கு வேப்பிலை, மஞ்சள் தூள், துளசி கலந்த கசாயம் கொடுத்திருக்கிறோம். ஆண்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தாமல் மருத்துவம் பார்ப்பதென்பது சித்த அறிவு இல்லாமல் செய்ய முடியாது. என்னுடைய ஆராய்ச்சியில் பலவகைப்பட்ட மூலிகைகளை பயன்படுத்தி உள்ளேன். பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்க எத்தனையோ மருத்துவமுறை உள்ளது. அவர்கள் கைவிட்ட பின், முயற்சி செய்த மூலிகைகள் நல்ல பலனையும் கொடுத்துள்ளது. அவை கீழாநெல்லி, பாபடாகம், ஓரிதழ் தாமரை, விஷ்ணு கரந்தை, வல்லாரை, கருவேப்பிலை, கசாலை, செம்பருத்தி, மணத்தக்காளி விதை, சீரகம், சோம்பு, நெல்லி, கோரைக் கிழங்கு என இவற்றின் கலவை கல்லீரவை புதுப்பிக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் நானே தினமும் இதை கொல்லிமலையிலிருந்து பெற்று அருந்துகிறேன். தேநீர்க்கு பதிலாக மது அருந்தும் எல்லோரும் இதை தினமும் அருந்தினால் தான் தப்பிக்கவே முடியும், என்னையும் சோ;த்து. ஏனென்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் மதுக் கொள்கையை, மற்ற மாநிலத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும். குடித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையும், அதற்காக நான் பயன்படுத்தும் மூலிகை நிலையும், விலை பேச முடியா சித்தர்கள் கொடுத்த பொக்கிஷமே. 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...