???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-7 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   26 , 2018  07:58:22 IST

ஆரியப்பட்டா அவரது சீடரான வராஹமிகிரர் வாழ்ந்த காலங்கள் 5-6ம் நூற்றாண்டுகள் தான். மிகரர் எவ்வாறு வராஹமிகிரர் ஆனால் என்பதாக ஓர் கதை உண்டு. பதினெட்டாம் பிறந்த நாளன்று இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிட ஞானி, அரசனிடம் சொல்ல விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போனால் தானே மகன் இறப்பான் என்று அரண்மனைக்குள்ளேயே மகனை வைத்து அடைகாத்த நிலையில் மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித் தலை விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் வெற்றிப்பெற்று வெறும் மிகிரர் ‘வராஹமிகிரர்;”ஆனதும் ஜோதிடத்தால் தான். ஆரியபட்டா மற்றும் அவரது சீடர்கள் பயன்படுத்திய நாள் காட்டி இந்தியாவில் தொடர்ச்சியாக பஞ்சாங்கம் கணிப்பதற்கு பயன்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுக்கு முன்னரே வாழ்ந்த அதாவது புராண காலங்களாக, வேதகாலமாக சொல்லப்படும். கிமு 1500-500ல் வாழ்ந்த பராசர மகாரிசியின் கணக்கீடுகள், இன்று வரை யாராலும் அறிய முடியவில்லையென்றால், அதற்கும் முன்பு வாழ்ந்த சித்தர்களின் தன்மையை எவ்வாறு அறிய முடியும் என்பதை அவர்கள் பிரதிஷ்டை செய்திருக்கும் சிலைகளின் மூலம் பரம்பொருள் அருகே நெடுங்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது. அதே நேரம் உலகிலேயே மிகப்பெரிய கணித சமன்பாடு என்பது ஜோதிடமே. இவைகளை எதன் அடிப்படையில் சித்த ஞானிகள் அமைத்தார்கள் என்பதை யாராலும் அறிய முடியவில்லை என்பதை திரும்ப திரும்ப கூறுகிறேன். மனித வாழ்வின் நிகழ்வுகளை நொடிக்கணக்கில் துல்லியமாக்கிய ஜோதிடத்தில் கணக்கீடுகள், ஏதேனும் ஒரு உன்னத கணத்தில், ஒரு தெய்வீக நிலையில் இறைவனே நேரடியாக சித்தா;களுக்கு அருளியிருக்க முடியுமே அன்றி, மனித யத்தனத்தில் அமைக்கப்பட்ட கணிதங்கள் இல்லை இவை என்கிறார் ஆதித்யகுருஜி.

 

     ஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தான்
     அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்.

     .......

     தாமரையில் பூத்து வந்த தங்கமுகம் ஒன்று
     தன்னிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று
     பால்மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
     பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
     வேல்வடிவில் கண்ணிரண்டும் விளங்கும் முகம் ஒன்று
     வெள்ளிரதம் போலவரும் பிள்ளை முகம் ஒன்று

     -கண்ணதாசன்

எங்கடா கண்ணதாசன் இங்கே வந்தார் என்று யோசிக்கிறீர்களா?. இன்று கண்ணுக்கு முன்னால் சாட்சியாக, போகரால் நிர்மானிக்கப்பட்ட நவபாசாண முருகன் சிலை, எக்காலத்தியது என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று இந்த முருகன் சிலை கை பகுதியிலும், மார்பு பகுதியிலும் சிதைந்திருக்கிறது. இதற்கு மாற்றாக சிலை வைக்க முயற்சித்த நிகழ்ச்சிகள் யாவரும் அறிவோம். 200 கிலோ தங்கத்தாலான முருகன் சிலை வைத்த மூன்றே நாளில் கருப்பாகிவிட்டது. தற்போது அதில் ஊழல் என்று கைதாகியும் விட்டார்கள் சிலர். கண்ணதாசன் வர்ணித்த அழகு முகம் இன்று நவபாசாண சிலையாக காட்சி தருவது, சித்தரான போகர் அதை வடித்தது. இறைவனே நேரில் வந்தாலொழிய அமைக்க முடியாது. உவமைக்காக கண்ணதாசன் கண்ணிரண்டும் வேல் என்று குறிப்பிடுகிறார். ஆனால் முருகன் கையிலுள்ள வேலின் அமைப்பு, நம் விந்தணுவுடன் ஒப்பிட்டு பாருங்கள் புரியும் சித்தர்களின் தமிழ் அறிவியல். நீர் பிரளயம் ஏற்பட்ட காலத்தில் அதாவது சுனாமி இனவிருத்திக்கான காலம் இக்குறியீட்டில் அடங்கியிருக்கிறது. அதாவது கடல் நிலத்தை மூழ்கி, ஆக்கிரமித்த பேரழிவு காலத்தை உணா;த்துவது கடல் கொண்ட தென்னாடு என்ற வார்த்தையையே எதிரொலிக்கிறது.

 

     கடலுக்கடியில் ஓர் தமிழ் நாகரிகமும், கடலுக்கு மேல் பிராயணம் செய்த ஓர் தமிழ்நாகரிகமும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. நம்முடைய தமிழ் நாகரிகம் பெருமை உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, சீனா, பெல்ஜியம், பல்கேரியா, இங்கிலாந்து, கனடாவுடன் தொடர்பை, மொழி வழியான தொடர்பில் அறிய முடிகிறது. 183 நாடுகளில் எழுத பேச படிக்க தெரிந்த தமிழா;கள் வாழ்கிறார்கள். இன்றைய நிலையில் அதிகம் தெரிந்த மொழியாக தமிழ் தான் உள்ளது. ஆங்கிலமோ 100 நாடுகளில் தான் அறியப்படுகிறது. இது தமிழுக்கு ஓர் கடல் சார்ந்த வணிக ஆளுமை, தமிழர்களுக்கு உலகளாவிய ஆளுமை, எங்கும் தமிழர்கள் உள்ளது உறுதியாக அறியமுடிகிறது. சென்னை கூடிய நீலாங்கரையிலிருந்து மெரினா வரை பழைய பெயரே ஆமையூர்.

     8ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆம்பூரில் கிடைத்ததன்படி,

     ”பழுவூர் கோட்டத்து மேல் அழையர் நாட்டு ஆமையூர்” இந்த இடத்திற்கு எத்தனையோ ஆயிரம் வருடங்களாக ஆமைகள் வந்து போயிருக்கிறது. கடல் வழியாகவே தமிழ் உலகம் முழுதும் பரவியுள்ளது காரணம், ஆமைகளின் கடல்வழி நீரோட்டங்களின் பயணமே. வழக்கமான பெருமையாக சோழர்கள் 1000 வருடங்களுக்கு முன்னர் சென்றதாகவும், பல்லவர்கள் 1500 வருடங்களுக்கு முன்னர் சென்றதாகவும், பாண்டியர்கள் 2000 வருடங்களுக்கு முன்னர் சென்றதாகவும், சென்று வந்ததை பேசுகிறோம். ஆனால் பழங்குடிகள் கடலில் சென்றதை பற்றி பேசுவதே கிடையாது. ஆஸ்திரேலியாவிற்கு போன பழங்குடிகள் ஏன் தமிழ் பேசுகிறார்கள். மெக்ஸிகோ போன பழங்குடிகள் ஏன் தமிழ் பேசுகிறார்கள்?, கனடா போன பழங்குடிகள் ஏன்  ஆமை சின்னத்தை மையமாக வைத்திருக்கிறார்கள். அர்ஜெண்டினாவில் ஏன் நல்பாண்டியன் பெயர் வைக்கிறார்கள் என்று பேசுவதே கிடையாது. ஆனால் இன்று தமிழ்நாட்டை மட்டும் கட்டிக் கொண்டு, உலகளாவிய தன்மையையும் அறியாமல் ஓர் கிணற்று தவளையாக தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் வாழ்வதாகத் தான் நான் கருதுகிறேன். இதிலே இடையில் திராவிடன், தமிழ் தேசியம் என்ற குழப்பம் வேறு.  எவ்வாறு நம் இனத்தையும், மொழியையும் நாமே குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது போக போக என்னுடைய எழுத்துக்கள் மூலம் புரியும்.

 

     உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை
     சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி,  

     தெய்வம் என்றால் அது தெய்வம்,
   அது சிலையென்றால் வெறும் சிலைதான்.

-கண்ணதாசன்.

 

இந்தப்பாடல் பார்த்தால் பசி தீரும் படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த வரிகளுக்கு சொந்தகாரரான கண்ணதாசனின் தீர்க்க தரிசன அறிவை என்னவென்று சொல்வதென்று புரியவில்லை வாசகர்களே. நம் தமிழ் கலாசாரத்தின் முக்கிய குறியீடு ஆமை, அதை உள்ளத்தோடு ஒப்பிட்டது ஒர் தீர்க்க தரிசனம். கண்ணதாசனை சித்த புருஷ கவிஞன் என்று சொன்னது தப்பேயில்லை. எல்லா பழமையான கோவில்களிலும் ஆமை சின்னம் உண்டு. இதற்க்கும் ஒருபடி மேலே போய், தாய்லாந்து நாட்டின் விமான நிலையத்தில் மகாவிஷ்ணு, மேருமலையை கொண்டு பாற்கடலை கடையும் போது, ஆமையின் மீது நிற்பதாக மிகப்பெரிய சிலையே இருக்கிறது. இந்த ஒரு பாடலுக்குள் ஆமையையும், சிலை என்ற வார்த்தையும் பயன்படுத்தியது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஆனால், ஆமைகள் நம் கலாச்சாரத்தின் தாய் என்பது 5-10 வருடங்களுக்குள் தான் அறிந்துள்ளோம். இந்த தொடர்பை சித்தர்களின் நவபாசாண சிலையுடன் ஒப்பிட்டு, தமிழ் நாகரிகத்துடன் இணைந்து, கண்ணதாசன் பாடல் வழியாக உங்களுக்கு நான் எழுதுவது சித்தர்களின் அருளன்றி, இறைவனின் கருணையின்றி சாத்தியமே இல்லை. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சித்தர்களின் வாழ்வியலும், தமிழ் சமூகத்தின் பெருமையும் கண்ணதாசனையும் தோண்ட தோண்ட கிடைத்துக் கொண்டு தான் இருக்கும்.

    

ஒரிசா பாலுவின் கூற்றுப்படி, இந்தோ பசுபிக் கடலில் எங்கு பார்த்தாலும் தமிழ் கூறுகள் இருக்கிறது. கடல் நீரோட்டத்தையும் , இந்த பருவ காற்றையும் பயன்படுத்தி இந்த தமிழ் மக்கள் கடலில் ஒரு வழிப்பயணம், பிறகு இருவழிப் பயணம் போனவர்கள். இருவழிப் பயணம் என்பது கடலில் சென்று திரும்பி வருதல், அவர்களை திரைமீளர் என்றழைப்பதும் உண்டு. இந்த இருவழிப் பயணத்திற்கு முக்கிய காரணம் கடல் ஆமைகள்.'

  

   பசுபிக் கடல், அட்லாண்டிக் கடல், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அறியப்பட்டது. ஆனால், தமிழர் பெருங்கடல் (அ) குமரிக் கடல் மிக முக்கியமாக மூன்று புறம் கடல் சூழ்ந்த பகுதி, இங்கேயிருந்து தான் நம்முடைய முன்னோடிகள் உலகம் முழுதும் போனார்கள். தமிழ் மொழியையும், நமது மரபையும், உலகம் முழுதும் கொண்டு சேர்த்ததற்கான காரணம் இந்த கடல் ஆமைகள் தான். மருத நில நாகரிகம் உருவாக்கியது நமக்கு மட்டுமே பெருமை. பசுபிக் கடலின் முனையிலிருந்து, இந்தோனேசியாவிலிருந்தும், கொரியாவிலிருந்தும், நியுசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பெரு நாட்டிலிருந்து இங்கே வரக் கூடிய கடல் ஆமைகள், 20000 கிமீ தள்ளி இங்கே வருவதற்கான காரணம், தான் பிறந்த இடத்தில் இங்கே முட்டை இடுவதற்காக வருகிறது.கடலில் ஆமைகள் இவ்வளவு தூரம் நீந்த முடியுமா?, என்றால் வர முடியும், அவைகள் நீந்துவதில்லை.  கடலில் உள்ள நீரோட்டத்தை அறிந்து அதில் மிதந்தே வருகின்றன. இதையறிந்தே, தேக்கு மரங்களை, பர்மாவிலிருந்து விட்டால் கோடியக்கரைக்கு வந்துவிடும் என்பதை அறிந்து கொண்டனர். இன்றும் கடல் நீரோட்டத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்றால், தாய்லாந்தில் விடக்கூடிய ஓரு பொருள் தமிழ்நாட்டிற்கு வந்து விடும். பர்மாவில் விடக்கூடிய ஓர் தேக்குமரம் கோடியக்கரைக்கு வந்துவிடும். கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தில் மிதந்து செல்லும் போது கண்டிப்பாக ஒரு நிலப்பரப்பை அடையும் என்று பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்தார்கள், பல நாடுகள் நிலப்பரப்புகள் சென்றார்கள்.  ஆனால், இவ்வளவும் இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு புரியா வண்ணம், இந்த பெருமைகளை அழிப்பதெற்கென்றே ஓர் நிலை வரும் என்று நம் முன்னோடிகள் உணா;ந்திருந்தாலும், கண்டுபிடித்த ரகசியங்களை இதே கடல் கொண்டு விட்டதாக தான் நான் உணர்கிறேன். இது இறைவனின் விளையாட்டே அன்றி வேறு என்ன சொல்வது.

 

பூம்புகார் கடலுக்குள் புதைந்த வண்ணம், எத்தனையோ தீவுகள் மூழ்கியுள்ளதாகவே கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருமைகளை கடல் கொண்டிருந்தாலும் அது அமைதியாகவே இன்றும் அலையாடிக் கொண்டிருக்கிறது. இந்த பெருமைகளை  ஒரு மனிதன் தன்னகத்தே கொண்டிருந்தால், தம்பட்டம் அடித்தே இறந்திருப்பான். இறவாக்கடல் உள்ளே உள்ள பொக்கிஷங்களை ஆராய்ந்து உலகுக்கு உணர்த்த ஓர் தமிழன் இல்லையே என்பது வருந்தத்தக்கது.

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...