???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-6 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   19 , 2018  01:23:42 IST

தூரத்தில் பிரம்மாண்டமான நெருப்பாக இருந்து, அதனுடைய சிறு சாரத்தால் நம் வாழ்க்கை அமைந்திருப்பதையும், சூரியனையே தாயாக்கியவனுமான என் உள்ளத்தின் நாயகனான கண்ணதாசன் வணக்கத்துக்கும் போற்றுதலுக்குமுரிய கவிஞன்.
 

நம் சித்தர்கள் சோதிடயியலில் சூரியனை தந்தைக்கு காரகனாக , தாயாக சந்திரனை  வகுத்துள்ளனர், தூரத்தே நின்று சாரத்தை தருவாய்போற்றி , பலகோடி கிலோ மீட்டர் அப்பால் இருந்து பூமி பெருகின்ற சார ஒளியே நம்மையும், நம்மை சுற்றியுள்ள செடி, கொடி, மர வகைகள், உயிரினங்களையும் வாழவைக்கிறது, சூரிய வணக்கம், இளஞ்சூரியனை கண்ணால் காண்பது, இன்றளவும் நம் யோக வகைகளில் ஒன்று, பழந்தமிழரின் ஒரு நாள் என்பது அனுபவ நாழிகையாக பிரிக்கப்பட்டிருந்தது, அதாவதுஒரு நாள் என்பது தினமும் சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலைசூரிய உதயம் வரையிலான 24 மணி நேரமே ஒரு நாள் ஆகும். உயிர் உருவாவதற்கு சூரிய ஒளியும், அதனை வாங்கி பிரதிபலிக்கும் சந்திர கதிர்களும், குரு கிரகத்திடம் உள்ள மீத்தேன் ஒளியும், அவசியமானது மற்றும், நம் சோதிடத்தின் இரண்டரை நாழிகை அளவுள்ள ஹோரை(ஓரை) எனப்படும் ஒரு மணி நேரம் கொண்ட ஒரு கால அளவுதான் இங்கிருந்து ஏற்றுமதியாகி ஆங்கிலத்தில் ஹவர் என்று சொல்லப்பட்டு நமக்கே திரும்பி வந்து இறக்குமதி ஆனது என்கிறார் ஆதித்ய குருஜி அவர்கள், மேலும்
சோதிடத்தின் மூலகருத்தே உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் அதன் செயல்களையும் அதாவது மனிதனையும் அவன் சிந்தனைகளையும் சூரியனும், சூரியனை போன்ற ஒளி பொருந்திய நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் ஆக்கிரமித்து இயக்குகின்றன என்பதுதான்.
 

பகலில் ஒளியை தந்து நம்மை வாழவைக்கும் சூரியனும், இரவில் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று நம்மை ஒளியூட்டும் சந்திரனும், இதனாலே சோதிடத்தின் தந்தையும் தாயுமாக ஆக்கப்பட்டனர். இன்று சித்திரை திருநாளாக, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதே சூரியன் மேஷ ராசிக்குள் சித்திரை மாதத்தில் சுட்டெரிக்கும் முழு ஆற்றலுடன் உச்சமாக இருக்கும்போதே. எனவே அது ராசிகளில் முதன்மை ராசியாக உருவாக்கப்பட்டுள்ளது.
 

நமது பூமி சூரியனை சுற்றி வரும் 360 டிகிரி கொண்ட நீள்வட்டப் பாதையே சமமான பங்கு கொண்ட பன்னிரெண்டு ராசிகளாக நமது சித்த ஞானிகளால் அமைக்கபட்டது. சூரியனின் இயக்கப்படியே பன்னிரெண்டு மாதங்களும், பன்னிரெண்டு ராசிகளாக அமைக்கப்பட்டன என்பதால் மேஷ ராசி என்பது சித்திரை மாதத்தையும், துலாம் ராசி ஐப்பசி மாதத்தையும் குறிக்கும், இதில் வியக்க வேண்டிய விசயம் என்னவென்றால் நாம் கொண்டாடும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னரும், பின்னருமாகத்தான் அவர்களுடைய புத்தாண்டை கொண்டாடுகிறார்கள், இந்த வழக்கத்தை கிழக்காசிய நாடுகளில் கொண்டாடுவதை கண்டிருக்கின்றேன். அறிவியல் திருவிழாவாக இருப்பதற்கு இது ஒன்றே சாட்சி, நம் தமிழ் பண்பாடு, அறிவியல் தன்மை கடல்கடந்து சென்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 

ஆனால் நாம் இங்கே புத்தாண்டையே மாற்ற முயற்சித்தோம், அதற்கான அதிகாரமிக்க அரசியல் செய்து பார்த்தோம், இன்று கவர்னர் கூறிவிட்டார், சித்திரை ஒன்றே தமிழ் புத்தாண்டு என்றும் தொல்காப்பியத்தில் கூறியுள்ளது என்று.


சாலமன் பாப்பையா ஒருமுறை தமிழை புகழ்ந்து வரும்போது தொல்காப்பியத்திலும் சமஸ்கிருதம் கலந்துள்ளது என்றார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் கால ஓட்டத்தில் சில கணிக்க முடியாத கலவைகள் இருந்தே தீரும், அதை வேற்றுமையுடன் அணுகுவதை விட நான் முன்னர் கூறியது போல இருநிலை என்பதுண்டென்று யாவரும் உணரவேண்டும்.முரண்பட்ட கருத்துகளை களைந்து , அறிவியல் தன்மையை ஆராய்ந்து பார்த்தோமேயானால் நாம் தமிழ் புத்தாண்டை மாற்ற நினைக்க மாட்டோம். சர்வ திசையெங்கும் சூரியன்களாகவே இருக்கின்றன என்று ஆர்யபட்டர் பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களையே குறிப்பிடுகிறார், சித்தரியியலில் சூரியனின் இயக்கத்தை வைத்தே மாதங்கள் பிரிக்கப்பட்டு, பனிரெண்டு ராசிகளும் 12 மாதங்கள் ஆயின, சோதிடத்தில் ஒரு மனிதனின் லக்னத்தை உறுதி செய்வதும் சூரியனே , சூரியனை பற்றி விக்கிப்பீடியாவில் தமிழாக்கத்தில் பின் வருமாறு  கொடுத்துள்ளார்கள்.
 

இந்திய கணித மேதையும், வான சாஸ்திர வல்லுனருமான ஆரியபட்டா மற்றும் கிரேக்க சமோஸ் நகர தத்துவ அறிஞருமான அரிஸ்டாட்டில் இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம் பற்றி மறு வரிசைபடுத்தினர் , நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் என்பவர் தான் சூரிய குடும்பத்தில் சூரியன் தான் மையஸ்தானம் கொண்டவன் , என்று கணித பூர்வமாக முன்கூட்டி அறிவித்தவர் , பதினேழாம் நூற்றாண்டில் அவருக்கு பின் வந்தவர்களான கலிலியோ கலிலி, கெப்லர், மற்றும் ஐசக் நியுட்டன் மூவரும் இயற்பியலை புரிந்து கொள்ளும் தன்மையை வளர்த்தனர் என்றிருந்தது.என்னுடைய கேள்வி என்ன வென்றால் ஆரியபட்டா வாழ்ந்த காலமாக அறியப்படுவது கி.பி. 476-550. ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் கிரகங்கள் அனைத்தும் நவீன விஞ்ஞானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டவை. இன்றைய விஞ்ஞானம் கடந்த 500 ஆண்டுகளாக செழித்து வளர்ந்திருக்கலாம். ஆனால், வானவியலின் அடிப்படையே ஜோதிட சாஸ்திரம் தான்   என்பதை வசதியாக மறந்து விடுகிறோம். எந்த தொலை நோக்கி வசதியும் இல்லாத, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே எவ்வாறு கிரகங்களை வரிசைப்படுத்தினார்கள்?. ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு நாள் சூரியனை சுற்றி வருகிறது என்று எவ்வாறு கண்டுபிடித்தார்கள்?. பலகோடி நட்சத்திரங்களை 27 தொகுப்பாக வகுத்து, எவ்வாறு அமைத்தார்கள்? என்ற இது போன்ற ஏராளமான கேள்விகளுக்கான விடை அடுத்தவாரம் பார்ப்போம்.

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...