???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-4 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   05 , 2018  04:53:56 IST

கண்ணதாசன் என் உயிர், உடல் , நாடி, நரம்பு எல்லாவற்றிலும் நிரம்பி இருப்பவர், கண்ணதாசன் இந்நூற்றாண்டின் சித்த புருச கவிஞன். ஒளிவு மறைவின்றி ஒளி அம்சம் பொருந்தி வாழ்ந்தவன். எல்லோரையும் அவர்தம் பாடல்களால் ஆனந்த கண்ணீர் வரவைக்கும் குழந்தை கவிஞன்.

கண்ணதாசனை பற்றிய விளக்கங்கள் அதிகம் தேவையில்லை.

எல்லோரும் அறிந்ததே . பட்டினத்தாரின் மறு வடிவமாகத்தான் நான் கண்ணதாசனை பார்கிறேன். கண்ணதாசன் கொடுத்த ஒவ்வொரு பாடலிலும் தமிழும், சித்த தன்மையும் கலந்து உறவாடி இருப்பதை கண்டு வியந்து வியந்து இத்தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இவ்வளவு நேரம் நாம் படித்தது சித்தர்களுக்கும் தமிழுக்குமான் முன்னோட்டமே.இனிதான் களத்திலேயே இறங்க ஆரம்பிக்கிறோம். பிரபஞ்ச ரகசியம் கண்ணதாசன் பாடல் வழியாக பீறிட்டு வெளிக்கொணரும் காலம் இனியே இனியவையாக.

தமிழே தலைவணங்கி தான் பணிந்து கிடக்கையிலே, தரணி பேசும் புரளியை கண்டு என் மனம் வீழுமோ , என்ற செருக்கின் உச்ச  ஏகோபித்த வரிகள் கண்ணதாசனுக்கே பொருந்தும்.

நவீன அறிவியலின் படி நமது உடலில் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை சுவாசம் நடைபெறுகிறது . உறங்கும் போது அதன் அளவு 10 முதல் 12 ஆக குறைகிறது. ஆழ்நிலை தியானம் போன்றவைகளை செய்யும் போது இந்த அளவு இன்னும் பாதியாக குறைந்து விடுகிறது.

 

கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டுடன் ஒடித்தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றிலும் ஒக்க வளர்ந்த பின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே
-திருமந்திரம்

மும்மண்டலமென்ற அக்கினி , சூரிய  , சந்திர மண்டலம் வளர்வதும் , முக்குணமாகிய இருள் நீங்க (தாமசம், கிராசசம், சாதிவீகம்) வாசி யோகத்தை பயின்றால்உடம்பில் உயிர் அழியாது இருக்க வைப்பான்சிவன் என்கிறார் திருமூலர். நம் சிவனை , நாம் கண்ணதாசன் எப்படி போற்றுகிறார் என்று பார்ப்போம்.

 

வாசி வாசியென்று, வாசித்த தமிழின்று
சிவா சிவாயென சிந்தை தனில் நின்று
அவாவினால் இந்த அவ்வை தமிழ்கொண்டு
கவிபாடினால் உன்னை கண்குளிர கண்டு

 

ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமசிவாயவென் ஐந்தானவன், இன்ப சுவைகளுக்குள் ஆறானவன் , இன்னிசை சுரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன். பத்தானவன் நெஞ்சில் பற்றானவன் , பன்னிருகை வேலவனை பெற்றானவன் , முற்றாதவன், மூல முதலானவன் ,

முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவையுண்டு தானென்று சொன்னானவன்
தான்பாதி உமை பாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்கும்  தந்தானவன்
காற்றானவன் , ஒளியானவன்

நீரானவன், நெருப்பானவன்
நேற்றாகி , இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பில் ஒளியாகி நின்றானவன்

-கண்ணதாசன்

திருவிளையாடல் படத்தில் சிவனை பற்றி கண்ணதாசன் எழுதியதே இது. கே.பி.சுந்தராம்பாள் குரலில் இப்பாடலைகேட்கும் போது நான் உணர்வது உலகத்தில் பிரபஞ்சத்தில் நடந்தது , நடப்பது, நடக்கபோவது, இருந்தது, இருப்பது, இருக்கபோவது , என அணைத்தையும் ஒரே பாடலில் எழுதி தள்ளிவிட்டார்.பெண்மைக்கு சரிபாதி கொடுத்து வாழ்வது தமிழராகிய நமது பண்பாட்டை , முதல் சித்தன் சிவனே அருளியிருக்கிறார். அழகான தமிழால் பரம்பொருள் பஞ்சபூதங்களாகி நிற்கிறார் கண்ணதாசன் தமிழால். சித்தர்கள், தமிழ், கண்ணதாசன் என்ற தலைப்பு இத்தனை விளக்கங்களுக்கு பிறகு பொருத்தமே என்று வாசகர்கள் நினைத்தால் இதுவே எனது பூர்வ புண்ணியமென்று நினைத்து மகிழ்ச்சி அடைவேன்.

 

பஞ்ச பூதங்களின் கலவையே இந்த பூமியும் அதில் வசிக்கும் அனைத்து உயிர்களும். இந்த பஞ்சபூதகலவையானது ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும், தனித்துவமான விகிதத்தில் கலந்திருக்கிறது. இதனையே சித்த ஞானிகள் அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனையே கண்ணதாசன் நமக்கு புரியும் படி , பாமரரும் அறியும் படி, பாடல் வடிவத்தில் கொடுத்தது. அதை நாம் இப்போது நாம் அறிவதும் , அவர் பிறந்த இந்த நூற்றாண்டில் நாமும் வாழ்வதும் பெருமையே .

பட்டினத்தார் பாடல்கள் பெரும்பாலும் மனத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டவையே , புற வாழ்வை  வெறுத்து , அகவாழ்வில் எல்லாம் வல்ல பரம்பொருளை மனதில் இருத்தி பேரின்ப பெருவாழ்வு வாழ்தல் பற்றியதே . இதே தன்மையை கண்ணதாசன் நமக்கு புரியும் படி கொடுத்ததே ஓர் வரப்பிரசாதம் நமக்கு.

 

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை , கடைசி வரை யாரோ
-கண்ணதாசன்.

 

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
விழிஅம்பொழுக  மெத்திய மாதர் வீதிமட்டே
விம்மி விம்மி இருகைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவமே

-பட்டினத்தார்.

கண்ணதாசனிடம் கேட்டதற்கு கடைசி வரை யாரோ என்று எழுதி இருக்கிறீர்களே…. பட்டினத்தார் கடைசியில் நம்மை தொடர்வது நாம் செய்த பாவ புண்ணியமே என்றிருக்கிறாரே என்று கேள்வி கேட்டதற்கு அதை சொல்லும் தகுதி பட்டினத்தானுக்கு மட்டுமே உண்டென்று சொன்னார். அவர் சித்தர்களை எவ்வாறு புரிந்து, அறிந்து வைத்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. பட்டினத்தார் தமிழ் பாமரருக்கு புரியாவிட்டாலும் கண்ணதாசனுடைய எளிமையான வரிகள் எல்லோரிடமும் சித்தர் தமிழை கொண்டு  சேர்த்துவிட்டது.

நம் மண்ணில் நிலவும் இன்னொரு வருந்ததக்க விசயம் , வீடு வரை உறவு  பாடலை எங்கு இறப்பு நிகழ்கிறதோ அவர்கள் வீட்டில் நாம் கேட்கிறோம் . ஆனால் உண்மையில் இந்த பாடலை தனிமையில் நாம் கேட்க வேண்டும்.அதிலுள்ள வரிகள் எல்லாம் நிலையாமை தத்துவத்தை உணர்த்துபவை, இதன் மூலம் நாம் உணர்வது எல்லா மக்களையும் தம் மக்களாக உதவி புரிந்து வாழ்ந்தால் வரும் நன்மையும் , புகழும், இறந்த பின்னாலும் நம்முடன் வரும் என்பதே.  நிலையாமை தத்துவம் அடங்கிய காலங்களை கணிப்பது கண்ணதாசனுக்கே உரிய தத்துவம் ,பல்வேறு குணங்களை கொண்ட மனிதன் நற்படி வாழவும் பழக வேண்டி , இறைவனிடம் வேண்டும் நிலையில் நாம் உள்ளோம், எல்லோரும் தம் மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் நோக்குகிறார்கள், இனி அக்காலம் வராது என்கிறார்கள், நிகழ் காலத்தில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதிர்காலத்தை பயத்துடனேயே நோக்குகிறார்கள், இந்த மூன்று காலங்களையும் எவன் ஒரே காலமாக கொண்டு செல்கிறானோ அவனே சித்தன். எனக்கு தெரிந்த வரை கண்ணதாசன் கிட்டத்தட்ட அவர் சமகாலத்தில் ஒரே காலமாக வாழ்ந்தவன், இப்படி ஒரே காலமாக வாழ்ந்தவர்கள் தான் , எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் அன்பு வடிவமான சிவமாக வாழ்பவர்கள் கண்ணதாசன் பாடல்களில் சமஸ்கிருத வார்த்தைகளும் உள்ளடங்கியிருக்கும். கர்ணன் படத்திற்கு கொடுத்த பாடல்களும் இதில் அடங்கும். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆண் , பெண் இணைந்து சந்ததிகளை உருவாக்குவது எப்படியோ , அப்படி தமிழும் , சமஸ்கிருதமும் சேர்ந்து பல மொழிகளை கொடுத்துள்ளது. பல்வேறு சித்த மந்திரங்களையும் , பலகவிஞர்களையும் உருவாக்குகிறது,

இந்த இரண்டு மொழியையும் லாவகமாக பயன்படுத்தி முத்திரை பதித்தவன் கண்ணதாசன் ஒருவனே. எல்லா மொழிகளும் குழந்தைகள் தான், ஆனால் நம் தமிழ் அவற்றிற்கெல்லாம் தாய். எல்லா குழந்தைகளும் அழகிய மொழிதான், நம் தமிழ் உலககுழந்தைகளுக்கெல்லாம் தாய். எப்போது எங்கே பிறந்தாலும், அக்குழந்தையின் தேடல் அம்மா என்றே ஆரம்பிக்கிறது.

 

காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவிமன்னனே
உனக்கு தாய் ஒரு மொழி சொல்லுவேன்….
உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா, மகனே சந்தனம் சேறாகுமா.

 

…..

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்னும் குறைவென்றும் – சக்கரம் சுழல்கின்றது
அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அதுவரை பொறுப்பாயடா..
மகனே என் அருகினில் இருப்பாயடா..
-கண்ணதாசன்.

மகாகவி காளிதாஸ் படத்திற்காக கண்ணதாசன் இயற்றி கே.பி.சுந்தராம்பாள் காளியாக பாடியது . காளி தாயாகி மகாகவி காளிதாசனை தன் மகனுக்கு தரும் தன்னம்பிக்கை வரிகள் , யாருக்கும் வாழ்வுண்டு, பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே, இதை அறியாமல் மக்கள் படும் இன்னல்கள் இன்று அதிகம்.

 


(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...