???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-34 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   04 , 2019  01:44:51 IST

 

 இப்பொழுது வாழ்க்கையின் இரு ரகசியங்களை பின்பற்றி வந்தால் ஓரளவேனும் விதியின் விளையாட்டில் இருந்து விடைபெறலாம். ஒன்று, உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு நடக்கும் ஏழரை, அஷ்டமசனி பற்றிய விவரங்களை அறிந்து, அந்த நேரத்தில் புதுவிதமான எந்த முயற்சியையும், மேற்கொள்ளாமல், அகலக் கால் வைக்காமல் இருத்தல், இரண்டு உங்களுடைய லக்னாதிபதி யார் என்று அறிந்து, அதற்குரிய பரிகாரங்களையும், அவரை வலுப்படுத்தும் முறையையும் அறிந்து வைத்து இருத்தல், இந்த இரண்டு தன்மைகளையும், எவர் ஒருவர் பின்பற்றி வருகிறாரோ, கண்டிப்பாக ஓர்  நாள் வெற்றியை இறைவன் அருள்வான் கர்மவினையையும் மீறி, எவ்வளவு தாழ்வு நிலையிருந்தாலும். எங்கு நோக்கினும் எதிரிகளின் கூடாரம், அதற்கான தொலை தொடர்பு தன்மையை வீழ்த்;தினாலே, நாம் வெற்றி பெற்று விடலாம்,

 

எவர் ஒருவர் வெற்றியின் தொடர்பில் இருந்து அறுபடுகிறாரோ, அவரை எதிரிகள் சூழ்ந்து விடுவர். எவர் ஒருவர்; எதிரிகளின் தொலை தொடர்பு முறையை தகர்க்கிறாரோ, அவர் வெற்றியாளனாகி விடுவர். இதுவும் கடந்து போகும் என்ற ஒற்றை வரி இலக்கணத்தில் தான் இன்பமே அடங்கியுள்ளது. துன்பத்திற்கு காரணமான சனி விசித்தரமான மனித மனதில் விளையாடுகிறான். உலகில் நடக்கும் அமானுஷ்ய தரமான சம்பவங்கள் அனைத்திற்கும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் சொல்ல முடியாது. மெய்ஞானம் தான் இதற்கு பதில் கூற முடியும். இறந்து போன முன்னோர்களை காகத்தின் வடிவில்; பார்ப்பதே நம்முடைய மரபு. ஜோதிடப்படி காகத்தை வாகனமாக கொண்ட சனிபகவானே முற்பிறவி, அடுத்த பிறவி செயல்களை சூட்சுமமாக சுட்டிக்காட்டுபவர். அதனால் தான் இறந்தவர்களின் திதியில்;, அவர்;களுக்கு படைக்கும் உணவை அவர்களின் சார்பில் பூமியில் உயிருள்ள காகத்திற்கு அளிக்கிறோம். காகம் வந்து சாப்பிடுவதன் மூலமாக இறந்து போன நம் முன்னோர்கள் நம்மிடம் வந்து திருப்தி அடைவதாகத் தான் நமக்கு அறிவுறுத்தப்பட்டது. ஜோதிடப்படி சகஜமான மற்ற நாட்களில் காகம் வீட்டிற்குள்ளே வருவது நல்லதல்ல என்றாலும், சனிதசை, புத்தி  மற்றும் ஏழரை, அஷ்டம சனி நடப்பவர்களுக்கு சனியின் வாகனமான காகம் சம்பந்தபட்டவைகள் நடப்பது சகஜம் தான். சனியை யோகராக கொண்டவர்களுக்கு சுபத்துவ சனி சம்பந்தபட்டவைகள் நன்;மையை மட்டுமே செய்யும், எனவே காகத்தின் தொடர்பு சனி தசை, புத்தியில் தீமையல்ல. சனிக்குரிய ரத்தினம் கருநீலக்கல், சனியும் கருநீலநிறத்தில் தான் உள்ளது. அவருக்குரிய உலோகம் இரும்பு. நீலத்திற்கும், இரும்புக்கும் உள்ள ஒரே உறவு சிவபெருமானே. கடல் நீல நிறமானதும், சமத்திர மாந்தன் என்ற சிவன் கைலாயத்தில் வாழ்வதாக என்று அறிகிறோம். கயல் + ஐயம் ஸ்ரீ மீன் +  கடல் மீனுள்ள கடல் என்றே பொருள். சிவன் வாழ்ந்தது குமரிக்கண்டத்தில்.  கண்டம் என்பதற்கு ஒரே அரசாட்சியால்  கட்டப்பட்ட தீவுக்கூட்டம் என்று பொருள் அந்தக் கண்ட மக்கள் ‘கும்பலாய் மறித்ததால்” அது குமரிக் கண்டம் என்று பெயர் பெற்றது. ஆல் என்பது கல் ஆலமரத்தை குறிக்கும் ஆல் + ஐயம்  ஸ்ரீ ஆலயம் என்றானது. சிவனின் ஆலயமென்பது, கைலாசத்தின் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து வேதங்களை சிவன் அருளிய இடமே. சிவன் வேதங்களையே முதலில் அருளினார். பிறகு குண்டலினி யோகத்தை அறிவதாக தான் புரியமுடிகிறது. மருத்துவத்தின்  சின்னம் குண்டலினி பாம்புகளை கொண்டுள்ளது. என்னை இன்னும் ஆச்சர்யப்பட வைக்கிறது. பாற்கடலை கடைவதில் உள்ள தத்துவம், இந்த சின்னத்தில் உள்ளடங்கியுள்ளது. இவையே ஜோதிடத்தில்; ராகு, கேதுகளான பாம்பின் தன்மையை குறிக்கிறது, கிரகணங்களாக வருகிறது இப்பூமியில்.

 

ராகு, கேதுக்களுக்கான பரிகார தலமாக ஸ்ரீ காளஹஸ்தி உள்ளது. இங்கு காளத்தி நாதரான சிவபெருமான் பாம்பின் வடிவிலேயெ இருக்கிறார். ராகு, கேதுவினால் பாதிப்பு கொண்டோர் அதிகாலையில் இங்கு நடக்கும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்வது மிகச்சிறப்பு. சிவபெருமானின் கழுத்திலுள்ள பாம்பும் இதனையே உருவகப்படுத்துகிறது. ஜோதிடத்தில் சனி, செவ்வாய் தொடர்பு கொண்ட ராகு, கேதுக்கள், மிக அசூரதனம் வாய்ந்தவையாக தான் அறியப்படுகிறது, இதனை சுபக்கிரகங்கள் தொடர்பு கொண்டால், மிகுந்த நன்மையையும் அதன் தசையில் கொடுத்திருக்கிறத. நீலநிறம் பாம்பின் விசத்தோடு உருவகம் கொள்வதும், அதனை கண்ணதாசன் பாணியில் நாம் காண்பதும் புதிதா?

          நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே

          உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே

          ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா

          அதன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா

ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்

பால் உண்ட சுவை மாறுமுன்னே நன்றி மறந்தாய்.

வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்

அவர் பிஞ்சு மகன் நெஞ்சினிக்கே நஞ்சு கொடுத்தாய்

பெயருக்கு தகுந்தாற் போல் மாறி விடு

நெஞ்சம் மாறி விடு, பிள்ளையை வாழவிடு

சங்கமம் அமைத்தொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை

சங்க புலவர்கள் நாவில் அடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை

மங்கல குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை

மாதொரு பாகன் சூடிய நாகபாம்பே உன் மேல் ஆணை

தேவன் மீதில் ஆணை, திருமறை மீதில் ஆணை

   -   திருவருட்செல்வர் படத்தில்

 

சிவன் ஆணையிட்டு, இந்த அகிலத்திற்க்கே வேதங்களை தந்தவன், சிவனே முதல் தமிழ்சங்கத்தை தொடங்கியவர். உலகமொழிகள் எல்லாமும் தமிழில் இருந்து வெவ்வேறு காலக் கட்டங்களில்; கிளைகளாக பிரிந்து உண்டானவையே. சிவனின் மூலவேதங்கள், சிவனே முதலில் இரும்பை உருக்கியவன் என்பதையும், அவரே கொட்டிசை கருவிகளை கண்டறிந்தவர் என்பதையும் குறிக்கிறது. இப்படிதமிழில் உருவான மூலவேதங்கள் இப்பொழுது சமஸ்கிருத வேதங்களாகி, நம் கை விட்டு, வெகு தொiவிற்கு சென்று விட்டது. மூலவேதங்களின் சொல் அறிவியலை காண்போம், இனியாவது புரிதலை கொள்வோம். சிவனே இரும்புருக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்து,  அதை உருக்கு வேதம் என்றும், கொட்டிசை கருவிகளான பறை, முரசு, உடுக்கை போன்றவற்றை உருவாக்கும் தொழில் நுட்பத்தை கண்டு, அதை அதிர்வு வேதம் என்றும், சாம, தான, பேத, தண்டம் என்ற அரசியல் தத்துவத்;தை வகுத்து அதை சாம வேதமென்றும், விண்ணாய்வு, மருத்துவம் போன்ற விஞ்ஞானங்களை யஜீர் வேதமென்றும் வழங்கினார்;. இந்த மூலவேதங்களை சிவன் கல்லால மரத்தடியில்; அமர்ந்து, தனது நான்கு சீடர்களுக்கும் ஒவ்வொன்றாக பாடல் வடிவில் தந்து, உலக மக்களின் சந்ததியிருக்கு வாய் வழியாக கடத்துமாறு ஆணையிட்டார். இது மனித சமுதாயத்திற்கு சிவனின் மிக முக்கியமான பங்களிப்பு. வேதங்களை உருவாக்கிய வெகு காலத்திற்கு பின் தான் குண்டலினி  யோகத்;தையும் முதன் முதலாக கண்டறிந்தார்  குண்டலினி மூலமாக சிவன் பெற்ற பிரபஞ்ச ஞானமே அவரது மூன்றாவது கண்ணாக உருவகப்படுத்தப் படுகிறது.

 

     பிறகு அவர் ஐம்புலன்களையும் அடக்கி, நிர்வாண நிலையை எய்தியதால், அவரே உலகின் முதல் கடவுளாகவும் ஆனார். சிவன் ஒட்டு மொத்த மனித குலத்தின் ஆதிகடவுள். சிவன் குண்டலினி யோகத்தை கண்டறிந்து, மனிதன் கடவுளாக முடியும் என்றும், மரணத்தையும் மறுபிறப்பையும் தவிர்க்க முடியும் என்றும் அறிந்தவர். அவரது மூன்றாவது கண்ணே அதை குறிக்கும் உருவகம். சித்தர்கள் மரபில் ஆதிகுருவாக      தான் சிவன் இருக்கிறார். சிவன் பௌர்ணமியன்று திருவாதிரையான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவராக அறியப்படுகிறார். சுப அமைப்புள்ள ராகுதசை ஒருவருக்கு நடக்கும் போது சிவபெருமானின் மீது பற்றும், நமது வேதங்கள் மறைந்துள்ள சூட்சும அறிவை உணரும் ஆற்றலும் கிடைக்கும். ராகு கேதுக்களின் தசை புத்தி நடக்கும் போது ஒருவருக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் வரும். பாபத்துவம் பெற்ற ராகுதசை நாத்திகத்தையும், அன்னியமத ஈடுபாடும், குறிப்பாக இஸ்லாமிய நண்பர்கள், துணையை அமைத்து கொடுக்கும். கேது கிறித்துவ நட்பை, துணையை அமைத்து விடும். ராகுவை மூலவராகவும் கேதுவை தாயாராகவும் கொண்ட திருக்காளத்தி ராகு கேதுக்களுக்கான முதன்மைப் பரிகார தலம். தமிழ்நாட்டில் திருநாகேஸ்வரம், கொடுமுடி, சுயம்புவாக தோன்றிய புற்றுக் கோவில்கள் ராகு, கேது தோஷத்திற்கான பரிகார தலங்களே. குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகு தசை புக்தி நடக்கும் போது, குடும்பத்தினர் அனைவரும் சூலினி துர்கா ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பு.

 

தமிழர்கள் வாழ்வில் தீ வளர்த்து செய்யும் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது வேதங்களை கொடுத்த சிவபெருமான் ஒருவரே அறிவார். என்னுடைய கணிப்பின்படி இது யஜீர் வேத முறையில் இருப்பது, இது சிவனின் ஆதி அறிவியலாகவே இருக்க முடியும். இந்த ஹோம முறையை கேவலம் என்று கூறிய அரசியல் தலைவருக்கும்,            அதன் உள்ளார்ந்த அர்த்தம் கேவலமான அரசியலை தவிர வேறென்ன. சரி, அகத்தியர் துவங்கி பல சித்தர்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர். வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல பெயர்களால் வழங்கப்படும் இந்தத் தீச்சடங்கு, அரசியல் துரோகிகளை சுடுகாட்டு வேள்வியில் எரித்தால் தான் நம் தமிழ் பிழைக்கும், நமது தமிழர் கலாச்சாரம், பண்பாடு மீளும். ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்திபடுத்தி பலன்களை அடைந்திடலாம் என்ற நம்பிக்கை, எவ்வாறு அறிவியலாகிறது பார்ப்போம். ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதால் உண்டாகும் வேதிவினைகள், புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் பல நன்மைகள் நிகழ்கிறது கண்களின்  ஊடே. கண்ணதாசனின் கடைசி பாடலான கண்ணே கலைமானே பாடலையும் தாண்டி, நான் வைக்கும் தொடரின் முடிவின் கடைசிபாடலின் வினைகள் மன வலியையே தருகிறது. இந்த தொடரின் காலங்கள் இருபதாயிரம் வருடம் முன்பு வாழ்ந்த சிவபெருமானில் தொடங்கி, அன்பே சிவமென்றாகி, எமது இரண்டாம் தமிழ்சங்க கால முருகனாகி, அவர் தம் சித்தர்களின் குறியீடு விநாயகராகி, மகாபாரத கால கிருஷ்ணராகி, அதன் பின்னர் அகில இந்தியாவையும் ஆண்ட மகாவிஷ்ணுவாகிய கால வினைகள், கண்ணே தமிழில் மூன்றாம் கண் என்ற கண்ணதாசனாகி, கண்ணதாசன் விழியில், 

   

  வசந்த கால நதிகளிலே, வைரமணி நீரலைகள்  

     நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் 

     நினைவலைகள் தொடர்ந்து வந்தால் 

     நேரமெல்லாம் கனவலைகள் 

     கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள் 

     ......... 

     தலையணையில் முகம்புதைத்து, சரசமிடும் புதுக்கலைகள் 

     புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள் 

 

          மண வினைகள் யாருடனோ

          மாயவனின் விதிவகைகள் 

          விதிவகைள் முடிவு செய்யும் 

          வசந்த கால நீரலைகள்         

-    மூன்று முடிச்சு

 

 கண்ணே கலைமானே பாடல் கண்ணதாசனின் கடைசிபாடல், இது அவரது வாழ்க்கையை பற்றி அவரே எழுதிய கடைசி பாடல் அதுவும் இரண்டு நிமிடத்தில், அப்போது கண்ணதாசன் கூறியது, இளையராஜா கொடுத்து வைத்தவர், இனி நான் திரைப்பட பாடல்களை எழுத போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன் என்றார். அதன் பின்னர் உலக தமிழ் மாநாட்டிற்கு சென்ற அவர், உடல் நலக் குறைவால் தில்லை நடராசர் பாதம் எய்து விட்டார். மண வினைகள் யாருடனோ, மாயவனின் விதி வகைகள், விதிவகைகள் முடிவு செய்யும் கண்ணதாசனின் வசந்த கால தீர்க்க தரிசன நினை வலைகள்.

 

     கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நானே 

     அந்திபகல் உனை நான் பார்க்கிறேன் - ஆண்டவனே இதைதான் கேட்கிறேன். 

ஆரிரோ ஓ ஆரிரோ .........     

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே 

 

சிவன் தமிழ் கண்ணதாசன்

நான் வாங்கும் மூச்சு.

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன் தோறும் வெளியாகும்)  

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...