???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் 0 இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு 0 ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: முதலமைச்சர் அறிவிப்பு 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல் 0 காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம் 0 அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோடி பேச்சு! 0 அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு 0 மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்! 0 திருச்சி விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 0 காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 0 பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்: முதலமைச்சர் அறிவிப்பு 0 இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் 0 மிகவும் அரிதான நிகழ்வு: சென்னை, வடதமிழக கனமழை பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’ 0 ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை 0 வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-32 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   22 , 2019  01:43:25 IST

இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருப்பதும், இத்தொடரில் பல பகுதிகளில் வலம் வந்த கண்ணதாசனும் புதனின் ஆளுமையில் இருந்தாலொழிய இவையாவும் சாத்தியமில்லை, புதன் வித்யாகாகன் எனப்படுகிறார். கணிதம், வைத்தியம், ஜோதிடம், வாக்கு வன்மை, கல்வி கலைகளுக்கு உரியவர். கலைகளான நடிப்பு, நடனம், நாடகம், எழுத்து வன்மை, புத்தக  வெளியீடுகள், பேச்சாற்றல், கவிதை எழுதுதல், சிற்பம், ஓவியம் ஆகியவற்றிற்கு புதன் அருள் வேண்டும். இவருடைய அதிதேவதை விஷ்ணு. 4000 வருடத்திற்கு முன்பு அகில பாரதத்தையும் ஆண்ட தமிழ் சித்த அரசராகிய திருமால், நமக்கு கொடுத்த விண்ணராய்ச்சி மொத்தமும்; இன்று ஜோதிடமாக வலம் வந்து கொண்டிருப்பது. புதன் என்ற கிரகம் ஜோதிடத்தோடும். அதை அருளிய திருமாலோடும் இணைத்து வைக்கப்பட்டிருப்பது, மாபெரும் பிரபஞ்ச ரகசியம் இன்று வெளிவந்துள்ளது, வரலாற்றை தக்க வைத்த காரணத்தினால் மட்டுமே. இத்தகைய சாஸ்திர அறிவிற்கு ஞானமும் தேவை என்பதே குருவின் ரகசியம். குரு என்ற வியாழ கிரகத்தை பற்றி ஏற்கனவே தொடரில் நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளதால் அவருடைய மந்திரத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

     ஓம் பிம் சியவசி குருதேவாய நம

 

தனுசு, மீன லக்னத்தில் பிறந்தவர்கள், கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்கு சென்று குருவருள் பெறுவது மிக நல்லது.

 

     எந்த ஒரு பரிகாரமும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யப்படுவதே முழுமையான பலனைத் தரும் என்று நமது சித்தர்களால் வலியுறுத்தப்படுவதால், உங்களின் பிறந்த நட்சத்திரம் அன்று செல்வதே முறையானது. அது போலவே திருத்தலங்களுக்குள் கிரக வலுவினை நாம் பெறுவதற்காக இருக்கம் நேரமும் மிக முக்கியமாகும். தடைகளை நீக்கி அருளும் கண் கண்ட தலமான கண்ணப்பர் கண் தந்த ஸ்ரீகாளஹஸ்தியில் நமக்கு ஓரிரவு தங்கி பரிகாரம் செய்ய சித்தர்களால் விதிக்க்பட்டதைப் போல, ஆலங்குடியில் கோவிலுக்குள் ஒருவர் இரண்டரை மணிநேரம் இருக்கவேண்டும். இதே விதி நீங்கள் குலத்தெய்வ கோவிலுக்கு செல்லும்; போதும், பொருந்தும் என்றே நினைக்கிறேன். குலத்தெய்வ கோவிலுக்கு அருகில் சிவாலயம் இருந்தால் மிகச்சிறப்பு. இருமை தத்துவம் எல்லோரும் அறிவோம், ஆண், பெண், இரவு பகலென்று, அது போலவே குலத்தெய்வமும், சிவமும். சிவலிங்கம் என்ற பெயரைம், அந்த வடிவம் இருமை தத்தவத்தை குளிக்கிறது என்று கூறியவரும் சிவனே. அவர் உயிர் உருவாக்கத்திற்கான கடவுளாக சிவலிங்க வடிவிலும், உயிர் அழிக்கும் கடவுளாக எமனாகவும் உருவகப்படுத்தபட்டார். இதிலும் இருமை தத்துவம் அடங்கியுள்ளது. உயிர் உருவாக்கித்திற்கான காமம், சுக்கிலம் இரண்டையும் சுக்கிரனே குறிப்பார். சு + இயக்கி + உயர்ந்த உயிர் உருவாக்கத்தை இயக்குவது + வெண்மை  சுயக்கிலவம்  சுக்கிலம் என்றானது. சுக்கிலம் என்பது உயிர் உருவாக்கத்தை இயக்கும் வெண்பொருள், இதற்கும் சிவனின் பிரதோஷ வழிப்பாட்டிற்க்கும் ஓர் சம்பந்தம் உள்ளது. அமாவாசையை நெருங்கி வரும் பிரதோஷமன்று, கேடு செய்யும் கதிர்வீச்சுகள் அதிகமாக பூமிக்குள் வரும். காமா கதிர்வீச்சுகள் சுக்கிலத்தை அதாவது அதில் உள்ள விந்தணுக்களை சிதைவடைய செய்கின்றன. இதனால் இக்காலத்தில் உண்டாகும் கருக்களில், ஒரு பகுதி, குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாகின்றன. பிரதோஷ காலத்தில் ஆண், பெண் சேர்க்கை நிகழகூடாது என்ற அறிவியலே, சிவனின் ஆலய வழிப்பாடாக வந்து நிற்கின்றது. சிவலிங்கம் என்பது கருவலத்தின் ஆக்கத்திற்கான வடிவமாகும், பரிமாணமாகும். பிரதோஷம் என்பது மிகமுக்கியம் என்பதால் அதை மக்களுக்கு நினைவூட்டவே, ஏறத்தாழ அனைத்து சிவன் கோயில்களும் லிங்கக் கோயில்களாக உள்ளன. திரையோதசி திதியில் பிரதோஷம் தொடங்கி, சதுர்த்தி, அமாவாசை, பிரதமை, துவிதியை திதிகளை கடந்த திரிதியை திதி வரை உடலுறவை தவிர்க்க வேண்டும் என்ற அறிவியல் விதியே, பிரதோஷ வழிப்பாடாக வந்து நிற்கின்றது. நாம் முருகனை உருவத்தாலும், விஷ்ணுவை உருவத்தாலும் வழிப்படுகிறோம். ஆனால் சிவனை லிங்கமாக ஏன் வழிப்படுகிறோம் என்று இப்பொழுது புரிகிறதா? இந்த வழிப்பாட்டை முருகனே உருவாக்கி இருக்க வேண்டும். முருகனே உருவ வழிபாட்டை உலகில் முதன் முதலாக கொண்டு வந்தவர். சிவனின் வரலாற்றை உருவகங்களால் விளக்கும் வகையில் சிவனின் அனைத்து பரிமாணங்களுக்கும் உருவங்கள் தந்தவர் முருகனே. எனவே முருகனே பிரதோஷ வழிப்பாட்டையும் உருவாக்கி இருக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சேராமல் ஆறு நாட்கள் விரதோஷம் கடைபிடிப்பதே விரதம் என்றாகி,                பிறகு அதுவே அனைத்து வகை, வழிபாடு சார்ந்த கட்டுப்பாடுகளுக்குமான,                 பொதுப் பெயரானது. தமிழரின் பண்டிகைகள் வரலாற்றை தக்க வைக்கும் கொண்டாட்டங்களாகவும், மனிதர்கள் செய்ய வேண்டியதையும், செய்ய                கூடாததையும் நினைவூட்டும் சடங்குகளாக அனுசரிக்கப்பட்டன. இவ்வாறு             ஒவ்வொரு வழிப்பாட்டிற்க்கும் பின்னர்ஓர் அறிவியல் உள்ளது. ரிசப, துலாம் லக்கினகாரர்கள் சுக்கிரனின் அருளை பெற்றே தீரவேண்டும். அதே போல ரிசபம் என்பது ஓர் காளை, சிவலிங்கத்தின் முன்னால் நந்தியாக நாம் வழிப்படுவதும், அதுவும் பிரதோசமன்று வழிப்படுவது எப்பேர்பட்ட உண்மை. சுக்கிரனுக்குரிய தலமாக கஞ்சனூர் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளது. சுக்கிரனின் மந்திரத்தை இந்த லக்கினகாரர்கள் தினமும் உச்சரிப்பது அவசியம்.

 

     ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ

இந்த மந்திரங்கள் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மாற்றபட்டவையாகத் தான் இருக்க வேண்டும்.  

 

     ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக 

     தத்துவ வித்துக்கள் அரணாகுக 

     பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்

தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும் 

-    கருவூரார் 

 

காயத்ரி சூரியனை நோக்கி சொல்லப்படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்றோ (அ) அமர்ந்தோ 108 முறை உச்சரிப்பது சிறப்பு. இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது பயன்படுத்தும் காயத்ரி மந்திரத்தின்                ஓசைகளை ஒத்திருப்பதை சமஸ்கிருதத்தில் பார்ப்போம். தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றை தாமறிந்தன போலவும்? வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டின உலகமப்பா இது. தமிழில் இருந்து இவ்வாறு, 

 

          ஓம் பூர் புவ ஸீவ 

          தத் ஸவிதுர் வரேண்யம் 

          பர்கோ தேவஸ்ய தீமஹி 

          தியோ யோந ப்ரசோதயாத் 

-    விசுவாமித்ர முனிவர் 

மொழி மாற்றம் செய்யப்பட்டவைகளில் ஒன்று தான் காயத்ரி மந்திரம். காயம் ஸ்ரீ உடல், திரி ஸ்ரீ உயிர், மந்திரம் ஸ்ரீ காக்கும், உடலையும் உயிரையும் பேணிக் காக்கும் கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த தமிழ் மூல மந்திரத்தின் இணையான உச்சரிப்புகளைக் கொண்டதே தற்போது புழக்கத்தில் உள்ள காயத்ரி மந்திரம் எனப்படுகிறது. இப்படி மாற்றப்பட்டுள்ள ஒவ்வொரு தன்மையையும் கண்டுபிடிக்க எத்தனை அவதாரம் எடுக்க வேண்டுமோ தெரியவில்லை. கண்ணன் ஓர் அவதாரமாகி, கிருஷ்ணனாகி இன்று மகாபாரத நாயகனாகி வலம் வரும் வேளையில், கிருஷ்ணர் ஓர் பச்சை தமிழர் என்றால் நம்புவீர்களா, நம்பிதான் ஆக வேண்டும். கலிகாலம் ஆரம்பித்தலுக்கும் சுமார் 5000 வருடம் முன்னர், கிருஷ்ணன் மறைவிற்கும் சம்பந்தம் உண்டு. அதை மாயன்களின் காலண்டர் முடிவை கொண்டும் அறியலாம். அதை கலிகால முடிவில் அவதரித்த கண்ணதாசனின் பாடல்களின் வாயிலாகவும் அறியலாம். தமிழர், சித்தர்கள் மரபென்ற ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் இருந்து கொண்டு, நம் தமிழர் வரலாற்றை அறியவிடாமல் செய்கிறதே? 

 

     நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 

     காலம் மாறினால் கௌரவம் மாறுமா 

     அறிவைக்; கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 

     அவர்மேல் தொடுத்ததோ அர்ஜீனன் கௌரவம் 

நடந்தது அந்த நாள் 

முடிந்ததா பாரதம் 

நாளைய பாரதம் யாரதன் காரணம்

மூன்றடி மண்கேட்டான் வாமனன் உலகிலே

மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே 

வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே

மாறும் அவதாரமே இதுதான் உலகிலே

-    கௌரவம் படத்தில்

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன் தோறும் வெளியாகும்)  click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...