???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-3 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   29 , 2018  09:45:21 IST

தமிழ்… நம் உடலின் , சக்கரங்கள் மலரும் போது வெளிவரும் சப்தங்களே தமிழ். வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.

தமிழ் உணர்வு , தமிழ் தேசியம் பற்றி பேசும் நாம், முறையான தமிழை பேசவில்லை, 24 மொழி கலந்த தமிழையே பேசுகின்றோம். கடலை வேளியாக கொண்ட தமிழகம்,கடல்சார் வரலாற்று ஆய்வுக்கு ஒரிசா பாலுவை தவிர வேறு யாருமே இல்லை என்பதே இன்றைய நிலை. கடல் ஆய்வுக்கு என்று யாருமே ஈடுபடுத்தப்படவில்லை என்பதே நிச்சயம். என்னடா இவன் தமிழை விட்டுவிட்டு கடலை பற்றி எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா. மடகாஸ்கர் முதல் கன்னியாகுமரி வரை மூழ்கியுள்ள தீவுகளை ஆய்வு செய்தால், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பது புலப்படும்.முதல் சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் , மூன்றுமே கடலில் முழ்கியுள்ளது. எல்லா தமிழ்ச்சங்கங்களும் கடலில் மூழ்கியுள்ள நிலையில் எந்த தமிழ்ச்சங்கத்தை காணப்போகிறீர்கள்?

 

இங்கு முதல் தமிழ் சங்க தலைவனாக, இன்று நாம் வழிபடும் இறைவனாக இருப்பது சிவனே. எந்நாட்டவருக்கும் இறைவா என்பதிலிருந்து உலகில் உள்ள எல்ல பகுதி மக்களும் , சிவன் வாழ்ந்த பகுதியோடு தொடர்பில் உள்ளதையே காட்டுகிறது. இதை முழுமையாக ஆய்வு செய்தால், தமிழக்களின் வாழ்வியல் பகுதிகள். தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அதில் கிடைக்ககூடிய தரவுகள் முழுமையாக அறியலாம்.

 

ஆதிச்சநல்லூரில் கிடைத்த எலும்புகூடுகளின் தன்மையானது உலகிலுள்ள பல பகுதி மக்களின் எலும்புகூடுகளோடுஒத்துபோவது, சங்க இலக்கியத்திற்கு முன்பே தமிழர்கள் உலகிலுள்ள பல பகுதி மக்களோடு தொடர்பில் இருந்தார்கள் என்பதையே காட்டுகிறது.

 

இது எப்படி சாத்தியமாயிற்று? இந்த இடம் கடல் நீரோட்டத்தில் கிழக்கேயும், மேற்கேயும், தெற்கேயும், வடக்கேயும், இணைக்கும் பகுதியாக உள்ளது. கிரேக்கர்களின் கடல் வழி பாதையையும், சீனர்களின் பட்டு வழிப்பாதையையும், தமிழர்கள் அறிந்து வைத்திருந்தார்கள், ஆனால் கிரேக்கருக்கு சீனரை தெரியாது, சீனருக்கு கிரேக்கரை தெரிய வைக்காமல் செய்த வணிக யுத்திக்கு சொந்தக்காரர்கள் தமிழர்களே , அது மட்டுமில்லாமல் இரு மொழியையும் அறிந்து வைத்திருந்தனர்.

 

திருக்குறள் தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்கள் முறையே 2000 முதல் 10000 வருடங்களில் உருவானவையாக வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள்  ஆராய்ச்சிக்குட்படுத்தபட வேண்டியதாக உள்ளது. ஒரிசா பாலு அவர்களின் கூற்றுப்படி 13 லட்சம் வருடங்களுக்கு முன்பே மனித நாகரிக அடையாளம் தமிழ்நாட்டில் உள்ளது பெருமைக்குரியதே. எப்படியிருந்தாலும் தமிழுக்கும், திராவிடத்திற்கும் இருக்கும் குழப்பத்தை முதலில் தீர்த்து விடுவோம். உலகம் முழுக்க பல மொழி குடும்பங்களை இணைக்கும் மொழியாக நம் தமிழ் மொழி உள்ளது. என்பது நமது பெருமை. இப்பொழுது எது முதல் நாகரிக மொழி என்ற ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.அதில் திராவிட மொழி குடும்பம் என்று சொல்ல கூடியதாக தமிழ் மொழி குடும்பம் உள்ளது. திராவிடம் என்பதே இன்று வரை குழப்பமாக உள்ளது. ஆனால் தமிழ் நாட்டையும், ஆந்திராவையும் இணைக்ககூடிய திரையன் நாடு என்று சங்க இலக்கியங்களில் குறிப்புள்ளது. திரை மீளன் என்ற பொருளும் உள்ளது. கடல் கடந்து சென்று திரும்பி தன்னிடம் வருபவரே திரை மீளன் என்று தமிழ் மொழி பேசும் மக்களுக்கு உள்ளது. தமிழ் நாடு என்பது 1956க்கு பிறகு தான் இன்றிருக்கும் திருத்தணி வரை உள்ளது. ஆனால் 1802 லிருந்து பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் ஒடிஷா வரை இருந்தது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம், ஒரே மாநிலத்தில் வாழக்கூடிய நிலை இருந்தது.

 

அந்த காலகட்டத்தில் கார்டுவேல் 12 மொழிகளை இணைத்து திராவிட மொழி குடும்பமாக கொண்டு வந்துள்ளார். அக்காலத்தில் பல மொழிகளை கலந்து தான் தமிழ் பேச வேண்டிய நிலை இருந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு , மற்ற மாநிலங்கள் அவரவர் மொழியை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இங்கு மட்டும் திராவிடம் என்ற சொல்லில் தமிழ் அடங்கிவிட்டது.

மொரிசியஸில் உள்ள தமிழர்கள் தங்களின் இனம் தமிழ் என்கிறார்கள். மலேசியாவில் உள்ள தமிழர்கள் தங்களின் மதம் தமிழ் என்கிறார்கள், இவர்கள் 200 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்தவர்கள், பின்னாளில் அர்ச்சகர்கள் சமஸ்கிருதத்தை பயன்படுத்தும் போது தான் இந்து மதமாக மாறுகிறது.

எந்த நாகரிகத்திற்கும் இல்லாத பெருமை தமிழ் நாகரிகத்திற்கு உண்டு , பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுக்க பயணித்த தமிழ் நாகரிகம் , இன்றளவும் அதன் தொடர்பை உறுதி படுத்தமுடிகிறது.

சிந்து வெளி நாகரிகமோ, சுமேரிய நாகரிகமோ, கிரேக்க நாகரிகமோ, சீன நாகரிகமோ, எகிப்து நாகரிகமோ, எதற்கும் உலகம் முழுதும் தொடர்பில்லை. தமிழ் நாகரிகம் மொழிவாரியான தொடர்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , கொரியா, ஜப்பான், நியுசிலாந்து , சீனா, பெல்ஜியம், பல்கேரியா, இங்கிலாந்துடன் தொடர்பில் உள்ளது பெருமையே.இன்றும் கனடாவில்ஆய், காமாட்சி என்ற மக்களும் , அமெரிக்காவில் ஆயர், தமையர், மக்கா, என்ற தமிழ் மொழி மக்களும் வாழ்கிறார்கள், இன்றும் 183 நாடுகளில் எழுத பேச படிக்க தெரிந்த தமிழர்கள் வாழ்கிறார்கள் இன்றைய நிலையில் அதிகம் பரவலாகத் தெரிந்த மொழியாக தமிழ் தான் உள்ளது என்பது நமது பெருமை, இது தமிழுக்கு ஓர் கடல் சார்ந்த வணிக ஆளுமை, தமிழர்களுக்கு உலகளாவிய ஆளுமை உள்ளதை உறுதி செய்து எங்கும் தமிழும் தமிழரும் வாழ முடியும் என்பது உறுதியாகிறது.

பாடப்பட்டுள்ள சித்தர்களின் நூல்கள் எல்லாம் தமிழில் உள்ளதே பறைசாற்றும்  பெருமை.

கல்லாபிழையும் , கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும், நினையாப்பிழையும் நின்
ஐந்தெழுத்தை , சொல்லாபிழையும் ,
துதியாப்பிழையும்,தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொருத்தருள்  வாய் கச்சி யேகம்பனே

-பட்டினத்தார்

 

இறைவனோடு மனித கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி பட்டினத்தார் “ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்தையும் திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணரமுடியும் என்பதையும் , பிழைகள் செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லா பிழைகளையும் பொருத்து அருள்வான் என்பதையும் கூறுகிறார். பட்டினத்தார் இப்போது நமது கதாநாயகனை அறிமுகப்படுத்தபோகிறார். பட்டினத்தாரின் அநேக பாடல்களை கண்ணதாசன் நமக்கே புரியும் தமிழில் பாடலாய் கொடுத்து சென்றிருக்கிறார். கண்ணதாசன் எழுதியதெல்லாம் பட்டினத்தாரிடம் இருந்து பெற்றவையே.

 
(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...