???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-29 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   01 , 2019  01:17:44 IST

சம்போ சிவ சம்போ சிவசம்போ சிவசம்போ

ஜெகமே தந்திரம், சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ

நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ 

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம் 

மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம் 

பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு 

உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு 

------------- 

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று 

காலங்கள் போனாலும் திரும்பாதே என்பர் 

மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு 

மனமுண்டு என்றாலே சொர்க்த்தில் இடமுண்டு

-    நினைத்தாலே இனிக்கும் 

 

பெண்ணுக்கும், சுகத்திற்கும் காரகன் சுக்கிரன் ஒருவனே, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமென்ற மந்திர சொல்லும், உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்ற மந்;திர சொல்லும், கண்ணதாசன் நமது மனைவிகளுக்காகவே கூறியது. பணமில்லாவிட்டால் கட்;டிய மனைவியும் மதிக்கமாட்டாள், என்று என் தாய்மாமா 12 வருடங்களுக்கு முன்பு கூறியது, இன்றும் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. தாய்மாமனுக்கான கிரகம் புதனாவார், சுக்கிரனும் புதனும் ஜோதிடத்தில் நண்பர்களே. இது ஒரு வகையில் மாமன் பெண்ணை மணப்பது போன்ற உறவுமுறை. ஜாதகத்தில் ஏழாம் வீட்டோடு புதன் சம்பந்தப்பட்டிருந்தால், தாய்மாமன் வழியாகத்தான் உனது திருமணம் நடைபெறும், திருமணத்திற்கு மன் ஒரு வாழ்க்கை, திருமணத்திற்கு முன் ஒரு வாழ்க்கை என்ற ஒரு நிலையில், தாயின் மந்திரங்கள் முற்பகுதியிலும், தலைவியின் தலையணை மந்திரங்கள் பிற்பகுதியிலும் நல்லவைக்கோ, கெட்டவைக்கோ? அதை சுக்கிரதசை அனுபவித்தவன் புரிவான், அதாவது மிக நெடிய தசை சுக்கிரதசை, இருபது வருடம் கொண்டது,

 

முப்பத்தைந்து வயதில் ஒருவருக்கு சுக்கிரதசைஆரம்பித்து, ஐம்பந்தைந்து வயது வரை நடக்கும் பொழுது, ஒருவன் அதி உன்னத நிலையும் அடைந்திருக்கிறான், மனைவி, சுகம், சுக்கிரனின் காரகத்துக்குரிய தொழில்கள் இதன் மூலம் ஒருவன்  பெறும் இன்பத்தைவிட, துன்பம் தரும் மந்திர ஆலோசனைகள், சுக்கிரன், ராகுவின், சனியின் பிடியில் சிக்கி இருளடைந்தால், ராகுவிற்கான முறையான பரிகாரங்களை செய்தால் மட்டுமே திருமண பந்தம் அமையும். அதேபோல் சுக்கிரன் வக்கிர மடைந்தாலும் முறையற்ற காமமோ, அல்லது நீடித்த தாம்பத்திய சுகம் வாய்ப்பு குறைவு. மனைவியை பற்றிய உயர்நிலை புரிதலுக்கு கண்ணதாசனின் மந்திர வரிகளை விட்டால், திருமந்திரம் கொடுத்த திருமூலர் வாழ்க்கை வரலாறும் ஓர் உதாரணம். 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். இவருடைய சித்த தன்மை சிதம்பரத்தில் உள்ளதாகவும் அறியபடுகிறது. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கி வரலாம். திருமூலருக்கான மந்திரங்களையும் உச்சாடனம் செய்யலாம். ஒவ்வொரு சித்தருக்கான மந்திரங்களை பார்ப்பதற்கு முன்னர், பரமசிவனுக்கும், மனைவியர்க்கும் உள்ள உள்ளப்புரிதலை, உடல்மொழியின் கூற்றினை, கண்ணதாசன் வழியாகவும், திருமூலர் தந்த திருமந்திரம் கொண்டும் அறியலாம். பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருட சௌக்கியா என்ற பாடல், பெண்களுக்கு வரும் தைராய்டு பிரச்சனைகளை எனக்கு ஞாபகம் தருகிறது, இதற்கான மருத்துவ விளக்கத்தையும் பிறகு பார்ப்போம். 

    

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா கௌக்கியமா 

     யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே 

கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது 

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது, உலகம் உன்னை மதிக்கும் 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்  

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று  

மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது. 

.................. 

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே 

என் உள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது 

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது 

இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது 

-    சூரிய காந்தி படத்திலிருந்து 

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே

நிழலை பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே

நதியைப் பார்த்து, நாணல் சொன்னது என்னைத் தொடாதே

நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே

புதியதல்லவே தீண்டாமை என்பது, புதுமையல்லவே அதை நீயும் சொன்னது 

இரவல் தானது, திரு நீலகண்டரின் மனைவி சொன்னது 

...........

தாளத்தை ராகம், தொடாத போதிலே, கீதத்தை நெஞ்சம், தொடாமல் போகுமே 

தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நானும் இல்லையே நீயும் இல்லையே 

............ 

தங்கம் எடுத்த கை, அது தங்கம் பார்த்ததா 

தர்மம் காத்த கை, சமதர்மம் கண்டதா ...... ஆலயம் செய்வோம் 

அங்கே அனுமதியில்லை, நீ அந்த கூட்டமே இதில் அதிசயமில்லை.  

-    சவாலே சமாளி 

 

ஒவ்வொரு மனைவியும் கணவனை தொடாதே என்ற மந்திர வார்த்தையில் மடக்கி விடுகிறார்கள் என்பதற்கு பரமசிவனும் விதிவிலக்கல்ல. இந்த இரு படங்களிலும், மனைவியாக நடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது ஓர் கூடுதல் செய்தி. அவர் பிராமண வகுப்பை சார்ந்திருந்தாலும் அனைவரையும் அரவணைத்தே கொண்டு சென்றது, பெரும்பாலான மக்களின் மனதை தொட்டு விட்டது என்பது அவருடைய அரசியலில் மாபெரும் வெற்றி. இன்று நம்மோடு அவர் இல்லை, மனதால் மக்களை தீண்ட அவர் இல்லை என்றாலும் நல்லபடியாகவே நினைப்போம். நான் தொட்ட இந்த விசயம், நீங்கள் மேம்போக்காக படித்தால் ஓர் அர்த்தத்தையும், ஆழ்ந்து அறிந்தால் வேறொரு வரலாற்று பரிமாணத்தையும் புரியவைக்கும். உங்கள் ஜாதகத்தில் அறிவதற்கான கிரகம் புதனின் வலுவை பொருத்து வாசகர்களே.

 

ஸ்ரீரங்கத்திற்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள தொடர்பு எவரும் அறிவர். அங்கே வீற்றிருக்கும் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர், மகாவிஷ்ணுவாக பாற்கடலை கடைந்தெடுத்த நிகழ்வும், அதில் வந்த விசத்தை உண்ட திருநீலகண்டனான பரமசிவனின் ஆசீர்வாதம் இல்லாமலா, இதை நான் எழுத முடியும். சுக்கிரனுக்கான முதன்மை தலமாக ஸ்ரீரங்கம் உள்ளது. அதில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவே அகில பாரத்தையும் ஆண்ட அரசனாவார். இவர் மூன்றாம் தமிழ் சங்ககால கட்டத்தில் வாழ்ந்ததாகவும், ஆண்டதாகவும், இவ்வளவு சோதிட நுட்பவியலையும், சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்து சென்றது, இன்றும் நம்மை தொடர்வதும், உள்ளத்தை தொடுவதும், கடவுள் முன் தீண்டாமை இல்லை என்பதே உணர்த்துகிறது. திருமூலரின் உடற்கூறு கூடுவிட்டு கூடு பாய்தல் முறையில், மூலனின் உடலில் வாழ்ந்தார், தன் உடலை இழந்து. தீண்டாமை சித்தர்களுக்கு இல்லை என்பதே திருமூலரும் திருமந்திரமும் சாட்சி. 

 

     மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் 

     ஞாலம் அறியவே நந்தி அருளது 

     காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின் 

     ஞாலத் தலைவியை நண்ணுவர் அன்றே. 

-    திருமந்திரம்

 

அருணந்தி என்பவர் திருமூலரின் குருவாக விளங்கியவர். அவருடைய அருளால்தான் திருமூலர் 3000 பாடல்களை எழுதினார். அந்த 3000 பாடல்களை காலையிலேயே எழுந்து கருத்துடன், பொருள் புரிந்து ஓதி வந்தால் அனைத்துலுகிற்க்கும் தலைவியாய்த் திகழும் உமாதேவியின் பேரருள் கிடைக்கப் பெறுவர். திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல்கள் ‘தமிழ் மூவாயிரம்”  என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில் உள்ள அனைத்து சித்தர்களின் கருத்துகளும் திருமூலர் பாடல்களில் அடங்கியுள்ளன. உலகெங்கிலும் வாழும் சித்தர்களின் எண்ணங்கள், கருத்துகள் ஒன்றாகவே உள்ளதற்கான உதாரணம் அயல்நாட்டு மத மார்க்கங்களும் இதே கருத்துக்களுக்கு ஒத்து போவதே. அனைத்து சித்தர்களின் நூல்களையும் அறியமுடியவில்லை என்றாலும், என்னுடைய தனிப்பட்ட விருப்பம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்றையாவது தெரிந்து கொள்ளங்கள். அதில் சில பாடல்களை, திருநீலகண்டனுக்கான மந்திரமாகவும், தைராய்டு குறைப்பாட்டிற்கான மருத்துவமாகவும் காண்போம். 

 

சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன் தோறும் வெளியாகும்)             click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...