???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-27 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   14 , 2019  03:44:42 IST

அதே நேரத்தில் ஒரு ஜாதகத்தில் கிரக தொடர்பை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதையும் பார்ப்போம்.

 

ஒரு ஜாதகத்தில் ஆறு எட்டு, பனிரெண்டு போன்ற இடங்களில் குருபகவான் மறைந்தோ, பகை, நீசம், பெற்றோ, சனி, ராகு போன்ற பாவக்கிரங்களுடன் தொடர்பு கொண்டோ, முழுமையான கேந்திராதி பத்தியதோசம் கொண்டு குருபகவான் இருந்து, ஜாதகத்தின் புத்திரஸ்தானதிபதி எனப்படும் ஐந்திற்குடையவரும் வலிமையிழந்தால் அந்த ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது கடினம், அல்லது ஆண் வாரிசு இல்லாத நிலையும் ஏற்படும். இதையே புத்திர தோசமாக சோதிடயிலில் கூறுகின்றனர்.

 

ஜோதிடத்தில் மிகப்பெரிய நன்மைகளைச் செய்யும் சுபக்கிரகங்களாக குருவும், சுக்கிரனும், உள்ள நிலையில், இவர்கள் இருவரும் ஜென்ம விரோதி எனப்பட்டாலும், குருவின்;; குழந்தை பாக்யம் தரப்படுவது சுக்கிரனின் காமத்தின் மூலமாக, இதுபோன்ற அமைப்புகளே, வாழ்க்கையே முரண்களின் மேல் என்பதை உணர வைக்கிறது. குருவும் சுக்கிரனும் பூமிக்கு எப்போதும் எதிரெதிர் நிலைகளில் இருப்பவர்கள் என்பதனாலேயே, நமது சித்த ஞானிகள் இருவரையும் தேவகுரு, அசுர குரு என்றழைத்தனர். வானில் பூமிக்கும் சூரியனுக்குமான உள்வட்டத்தில் இருப்பவர் சுக்கிரன். அதற்கு நேர் எதிரே உள்ள வெளிவட்டத்தில் பூமிக்கு வெளிப்புறத்தில் அமைந்திருப்பவர் குருபகவான்.             இந்த எதிர்நிலைகளே இவர்கள் எதிரிகளாக உருவகப்படுத்தப்பட்டதில் உள்ள வானியலின் அறிவியல் உண்மை.

 

அதுபோலவே குருவும் சுக்கிரனும் இணையும் நிலையில், இணையும் ராசியைப் பொறுத்தும், தூரத்தை பொறுத்தும், தங்களது சுய இயல்பை இழப்பார்கள். இதில் இருவரும் அடுத்தவரின் செயலை செய்யவிடாமலும் தடுப்பார்கள். சுக்கிரனும் குருவும் சமசப்தமாக நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதும் இதே பலனையே செய்யும். குருவும் சுக்கிரனும் சம்பந்தம் பெற்றால், ஒருவருக்கு சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகமும், குருபகவானால் கிடைக்கப்பெறும் புத்திர பாக்கியமும் கிடைக்காத நிலை இருக்கும் அல்லது இவ்விரு பாக்கியங்களும் கிடைக்கத் தாமதமாகலாம். கடுமையான புத்திரதோசம் இருக்கும் போது கண்டிப்பாக திருமணம் தடைப்படும். இதை அனுபவ பூர்வமாக உணர்ந்த ஜோதிடர்கள் ஏராளம். குருவும் சுக்கிரனும் 10 டிகிரிக்குள் இணைவோர்களேயானால் ஒருவருக்கு திருமணமோ அல்லது திருமணமாகி குழந்தை பாக்கியமோ இல்லாது போகலாம். இருபது டிகிரிக்கு மேல் விலகி இருந்தால் இந்த பலன்கள் நடப்பதில்லை. இன்னும் முக்கியமாக இந்த அமைப்பில் குருதசையில் சுக்கிர புத்தியும், சுக்கிரதிசையில்  குருபுத்தியும் நன்மைகளை கண்டிப்பாக செய்வதில்லை. அதே போல் புத்திரஸ்தானத்தில் பாபக்கிரகங்களான செவ்வாய், சனி, ராகு தொடர்பு இருப்பின் கடும் விளைவுகள் உண்டாகிறது. ஜாதகத்தில் குருபகவான் வலிமை இழந்திருக்கும் நிலையில், முதன்மைத்தலமான ஆலங்குடி சென்று குருவருள் அடையாளம். எந்தவொரு பரிகாரமும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யப்படுவதே முழுமையான பலனைத் தரும் என்று நமது சித்தர்களால் வலியுறுத்தப்படுவதால், அவர் பிறந்த நட்சத்திரம் அன்று, இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருக்க வேண்டும். கிரக வலுவினை நாம் பெறுவதற்கு, கோவிலுக்குள் நாம் இருக்கும் நேரமும் வலியுறுத்தப்படுகிறது.

 

சென்னையில் இருப்பவர்கள் செல்ல வேண்டிய தலமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ராமனாதீஸ்வரப் பெருமான், போரூரில் உள்ளது, மற்றும் வட ஆலங்குடி எனப் போற்றப்படுகிறது. அதேபோல் வருடம் ஒருமுறை ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள், ஒரு யானைக்கு விருப்பமான உணவை உங்கள் கையால் கொடுங்கள். விநாயகரின் பிறப்பு பற்றிய ரகசியத்தை பாதியிலேயே விட்டு விட்டு வந்தோம். இப்போது யானை ரூபத்தில், எமது ஞாபகம் பெற வைத்தார் குரு பகவான்.

 

நான் முன்னர் குறிப்பிட்டது போல, யானையும், தாமரையும் ஆசிவக சின்னங்களாக முருகன் வகைப்படுத்தினார். வெண்தாமரையில் அமர்ந்திருக்கும் கலைவாணியை, ஆசிவகத்தின் அடையாள தெய்வமான கலைவாணியை முருகனின் மனைவியாகவும், யானையை அடையாள சின்னமாக்கி ஆசிவக வாழ்வியலை முருகன் நிறுவினார் என்ற வரலாற்று நிகழ்வை தக்க வைக்க தெய்வானை என்ற பெயரில் உருவகப்படுத்தினர் முருகனுக்கு பிற்காலத்தில் சித்தர்கள். அனுபவத்தின் பாடமே ஒரு மனிதனின் ஞானத்தின் அடிப்படை. ஞானத்தின் வெளிப்பாடுகளே கலைகள். குரு எனும் ஞானத்தை குறித்த கிரகம், கலைவாணி என்ற தெய்வத்திற்கான கிரகம். இப்பொழுது புரிகிறதா குருவிற்கான பரிகாரத்தில் யானை ஏன் வந்தது என்று, யானை என்பது அன்பிற்கும், அறிவிற்கும், ஞானத்திற்குமான அடையாள விலங்கு. இவை அனைத்தும் சித்தர்களின் பண்பு என்பதால்; சித்தர்களின் அடையாளமாகவும், ஆசிவகத்தின் அடையாளமாகவும் யானையை தேர்ந்தெடுத்தார் முருகன். இந்த யானைக்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பும், தாமரை என்பது ஆசிவகர்கள் எப்படி வாழவேண்டும் என்பதையும் குறிக்கும். இருட்டில் சகதியில் தோன்றும் தாமரைக் கொடி, சூரியனை கண்டு மலர்கிறது. எனவே இருள் என்ற அஞ்ஞானத்தை ஒதுக்கி, ஒளி எனும் ஞானத்தை நாடுவதை தாமரை அடையாளபடுத்துவதாக கொண்டார் முருகன். தாமரையின் மற்றைய பண்புகளும் இதற்கு வலிகோலின. அதனால்  தான் விநாயகரும் தாமரையில் அமர்ந்திருப்பதாக உருவகப்படுத்தினர். அதே சமயத்தில் சப்த கன்னிமார்கள் கையில் தாமரை மொட்டும், அத்தெய்வங்களே வெண்தாமரையில், செந்தாமரையில் அமர்ந்திருப்பதாக உருவகப்படுத்தினர். தாமரை ஒரு மருத்துவமூலிகை என்பதையும் நாமறிய வேண்டும். செந்தாமரை இதயத்திற்கும், வெண்தாமரை மூளைக்கும் வலுசேர்க்கும் மூலிகை தன்மை கொண்டது. பேசும் திறன் அதிகரிக்க தாமரை இதழ் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம். தேரையர் வாகடம் எனும் நூலில் தேரையர் அருளியுள்ள இந்த பித்த வெடிப்பு மருத்துவம், இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதே உண்மை. தாமரையாள் பாதம் தாமரை பூப்போலாகும் என்கிறார் தேரையர். 

 

உப்பு மண்புழுங் கரிசியூ மத்தவித் திந்துப்புத் தயிரொ 

பெருக்கம்பால் யுக்க விரைப்பன விற்பா கப்பிளங் வடங்கப்பூச 

நிலைவிற் றாமரை யாங்காலே யறுத்துப் போடும் வேரோடே  

      -   தேரையர்  

 

உப்பு மண், புழுங்கலரிசி, ஊமத்தை விதை, இந்துப்பு, இவை நான்கினையும் சம அளவில் எடுத்து, தயிர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையில் எருக்கம்பால் விட்டரைத்துக் கால்களில் பூசி வந்தால், கால் வெடிப்புகள் அடியோடு நீங்கி விடும் என்கிறார். மேலும் பாதம் தாமரைப் பூப்போல் ஆகுமாம். 

 

                                காத்துக் கஞ்சிநீர்காலசா தத்தினடுக்  

                                கொண் ணெறித்திரிக்குதென 

                                நீற்றுப் பாலநெய்யில்காலிட வல்லீரெல் 

                                சேத்துத் தாமரை செய்யதழொக்குமே 

 

 சூடான வடிகஞ்சியில் காலை வைத்தும், சூடான அன்னத்தை சுடு கஞ்சி விட்டு அரைத்து அத்துடன் கற்சுண்ணமும் கலந்து சூடாகக் கால்வெடிப்பின் மேல்பூசுp வந்தால் பாதவெடிப்பு நீங்கி, பாதம் தாமரை இதழைப் போல ஆகுமென்கிறார். 

 

தொடரின் ஆரம்பத்தில் குண்டலினியை விளக்கும் போது, ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம். குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும், மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகத்தில் பன்னிரென்று இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு தாமரை இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம். குண்டலினி யோகத்தில், இந்த ஆதார சக்கரங்களிலிருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம். வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் பேசினாலே, உடல் நலம், ஆன்ம நலம், சிறக்கும் என கூறியிருக்கின்றனர். நாம் தான் அதனை மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில் உழன்று கொண்டிருக்;கிறோம். அறிவது எல்லாம் அறிக என்ற நாயகனின் கரம் சேர்த்து, தமிழ் தலைவியிடம் இடம் சேர்த்து, தலைவி நாயகன் தலை விநாயகன் ஆனது சித்தர்களின் பூமியில். 

 

                                ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை  

                                இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை 

                                நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் 

                                புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. 

                                 -    விநாயகர் துதி

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...