???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   07 , 2019  01:25:20 IST

 

முருகனின் வேல் வடிவம் விந்தணு குறியீடு என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். பலகோடி விந்தணுக்களில் ஓர் அணு மட்டுமே வெல்ல கூடிய தன்மையே, வெல் என்பது வேல் என்று மருவியது. புது உயிரை உருவாக்க, ஓர் பெண்மையை தாய்மையடைய செய்யும் அணு வடிவம், எதிரிகளை அழித்து புது யுகத்தை உருவாக்கும் வேல் என்றானது. தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது. ஒரு வேளை அதே பெண்ணிற்கு கருவுறுதல் தாமதம் கொண்டால் மாமியார் தரும் பட்டம் மலடி என்பது. இரு ஓர் உளவியல் வன்முறையாக தான் பார்க்கப்பட்டு வந்தது. தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான விசயம். தாய்மையடைதல் குறித்து சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு உள்ளது என காண்போம். உண்மையில் மலட்டுத்தன்மை  உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர், தாய்மை அடைவதில் தடையாகும் அமைப்பையும் விளக்குகிறார். 

 

                                இசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை

                                எதுனால் மலபான சேதி கேளு கேளு 

                                அசைந்திருக்கும் பேயினாலும் யூதத் தாலும் 

                                அடிவயிறு நொந்துவரும் வாய்வி                னாலும் 

                                பிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும் 

                                பிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந் 

                                துசங்கட்டிக் கல்வியினால் பூலவா தூங்கித் 

                                துலங்காமல் கெர்ப்பமில்லை சொல்லக் கேளே 

                       -              அகத்தியர் 

இந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை. அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவைகளால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும், அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.

   நாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசு வெண்ணெய் பாக்களவு சேர்த்து, மாதவிலக்கு முடிந்து தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர். 

 

 வேப்பம் பூ, சீந்தில் தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து, அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி, காலை, மாலை, இரண்டு வேளையும், மாத விலக்கு முடிந்து தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்படவில்லை. 

 

பெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அதைப் பெண்கள் மாதவிலக்க முடிந்து, தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்ப பூச்சி ஆகியவையும் தீரும் என்கிறார்.  இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களும் உள்ளதாக கூறுகிறார். கிரகங்களால் ஏற்படும் புத்திர தோசம் எவ்வாறு வரும் என்பதை கிரக சூழ்நிலைகளுக்கேற்ப பின்னர் விளக்குகிறேன். சோதிடத்தில் புத்திரகாரகன்; குருவாகவும், புத்திரஸ்தானதிபதியாக 5ம் மிடமும,; அதன் அதிபதியும் வருவர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது தாய்மை மருத்துவம் மலர்வோம். 

 

                                கேளுந் கெர்ப்பந்தான் வாழ்வதற்கு 

                                கெடியான நன்னாங்கள்ளி வேரு 

                                ஆளவேயரைத்துப் புன்னக்காய் போலே 

                                ஆவின் வெண்ணெய் பாக்களவு கலந்து 

                                நீளஞ்குளித்த முதல் மூன்று நாளும் 

                                நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம் 

                                கோளறவே பத்தியந்தான் புளிபுகையும் 

                                கொள்ளாமலர்வின் பால் சோறுமுன்னே 

                              -              அகத்தியர்  

கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலைமுழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம். பத்தியமாக புளியும் புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசும்பால் கலந்து சாப்பிட வேண்டும் என்கிறார். 

 

 ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை, கடின உழைப்பில் புத்தகங்களுக்கு கொண்டு வந்த பெரியவர்களை நமக்கு இன்று தெரியாது. ஆனால் அவர்கள் செய்த இந்த பணியின் மகத்துவம், நமக்கு அருளும் தாய்மையின் ஓர் நிலையே. இந்த மண்ணை தாண்டியறியாத நாம், உலகம் முழுதும் உள்ள தொடர்பை உணர்வோமானால், அது சித்தர்களின் தாயகமாக தான் இருக்கிறது. அதேபோல சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை என்றாலும், தமிழ் ஒன்றே அவர்களின் வாழ்வியல் முறையை ஆசிவகமாக வழி நடத்துகிறது. ஆசிவகத்தின் ஆராய்ச்சியும் இன்று தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த யுகத்தின் முழுமுதற் கடவுள் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்ற, உலகத்தின் தாய்மை நிலையின் நாயகன், விநாயகன் ஆனது எப்படி என்ற கேள்விக்குள் ஆசிவகம் ஒளிந்துள்ளது. விநாயகரின் பிறப்பை பற்றி அறியும் முன்னர், 11 வருடங்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது இருந்த தம்பதியருக்கு, ஓர் குழந்தை பேறு கிடைக்க வைத்த அதிசய மூலிகை மருத்துவம் இதோ

 

 அரசமரத்தை சுற்ற வைத்ததும், அதனடியில் விநாயகரை வைத்ததும், அரசு அதாவது குழந்தை அற்று போகாமல் இருக்க செய்வது, 50 வருட முந்தைய அரச மரம் எல்லா கோவில்களிலும் உள்ளது. இந்த அரச மரத்தின் 3 இளந்தளிர் இலையுடன், முருங்கை விதை பருப்பு ஐந்தும் சேர்த்து அரைத்து, அக்ரூட் உள்பருப்பு கால் பங்கு சேர்த்து, அதனுடன் நாட்டு மாட்டுபால் அல்லது ஆட்டுபால் 150 மில்லி சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு இதமான சூட்டோடு பனைவெல்லத்தை சேர்க்க வேண்டும். இதனை தினமும் பருகிவர உயிரணுக்கள் கூடுவதுடன், நல்ல சக்தியும் கொடுக்கும். இதனுடன் நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வரவேண்டும். 

               

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை       தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...