???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-24 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   23 , 2019  07:28:53 IST

மரணமில்லா பெருவாழ்வு  கொண்டு உடலோடும் ஆன்மாவோடும் வாழ்ந்த சித்தர்களின் பூமி  நம் தமிழ் தேசம். கோடிக்கணக்கானவர்கள் அழுவதும் தலைவன் ஒருவன் இழப்புக்கு தான் மனமுருகி அழுதலும்  ஓர் சித்த நிலையே. வேறுபட்ட மாறுபட்ட எண்ணங்களடங்கிய பூமி மரணம் ஒன்று தான் எத்தனையோ மன ஓட்டங்கள் ரகசியங்கள், உயிர் ஒன்று தான். இந்த உயிர் உடலை பிரியும்; நிகழ்வுக்கு வரும் மனிதர்களின் அழுகை உண்;மையானதும் கூட.            தன் சோகத்தையும் இணைத்து அழும் நிகழ்வு, அதில் அழுததில் மிச்சம் சோகம்,  சோகத்தில் மிச்சம் மறதி, மறந்ததால்; காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சித்த நிலையிலும், பரம்பொருளை நினைக்கும் பொழுதிலும் அழுவதை தவிர வேறு நிலையில்லை. அதை உணரும் போது உள்ள சுகத்தை, கண் மூடி அழுதால் கொஞ்சம், நிம்மதி என்றான் கண்ணதாசன்.

 

எந்த சித்த நூல்களாக இருப்பினும், அன்பில் சிவம் கலந்து, கண்ணீர் மல்கும் தன்மையையே கொடுக்கிறது. பனி உருகி வரும் நீராக, மனமது உருகினால் அழுது தான் தீரவேண்டும், இறுதியில் கடலெனும் கடவுளுடன் கலந்து தான் ஆகவேண்டும். சித்தர்களும் இறைவனை நினைத்து அழுதே காரியத்தை சாதித்து உள்ளார்கள், இறைநிலை அடைந்து உள்ளார்கள். நாதங்கள், பரிமாணங்கள், தொடர்புகள், உணர்வுகள், உள்ளங்கள், ஐவ்வகை பஞ்சபூதத்தில் உள்ளடங்கிய நிலையில், அழுகை மட்டுமே ஐந்தையும் அசைக்கும் சக்தி கொண்டது. தனிமையில் அழுதுபார், அதன் சுகம் புரியும். ஐம்பூதங்களும் உன்முன் கைகட்டி நிற்கும் உணர்வு உண்டாகும். அன்பின் சக்தி வெளிப்பட சிரித்து பார் கண்ணீர் தரும், மரணத்தின் சக்தி வெளிப்பட, சிவனுடன் உயிர்க்கும் போது வரும் கண்ணீர், தேனமிர்தம். படைத்தவனே கண்முன் நின்றதால், சித்த ஒளி நிலையில் நான் எனை மறந்தேன். என் வாழ்வு கருவறையில் புகுந்ததையும் மறந்தேன், கல்லறையில் புகுந்ததையும் மறந்தேன். மறதி நிலைக்கே ஓர் மறதி நிலையில் நான் சிவனில் மலர்ந்தேன். தேன் தரும் மருத்துவம் இப்பொழுது நினைந்தேன். மறுபடி உயிர்பெற்று உலகில் கலந்தேன், உங்கள் உள்ளத்தில் வீழ்ந்தேன். 

 

உண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து 

உகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன

வண்மையுடன் புகைந்திருமுந் சேத்தும நோய்தான் 

மாறியே பசியுண்டாம ருவிப்பாரு 

 

திப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலோத்தும நோய்களும் குணமடைந்து பசியுண்டாகுதேன். இறைபசி உண்டாகி, இரைபசி அற்று வாழும் சித்தர்கள் மருத்துவத்தை தேன் கொண்டு சேர்ப்போம் மனதில், கழுத்திலுள்ள உருத்திராட்ச மணிகளின் மகிமையை இனி பார்ப்போம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதை போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும் வாந்தி தணியுமாம். நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து, அந்த நீரை பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். உருத்திராட்ச மணிமாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சில முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக  தயாரித்து விற்கின்றனர். இவை பெரும் பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும். உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஓர் மூலிகை தாவரம். சித்த, ஆயுர்வேத மருந்துகளில் இவை மருந்து பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. காக்காய் வலிப்பிற்கு உருத்திராட்ச மர பழத்தின் சாறு அருமருந்தாக கூறப்படுகிறது. மேலும் இருமல், தலைவலி, மூச்சுக்குழல் அழற்சி ஆகிய வியாதிகளுக்கும் நல்ல பலனை தருகிறது.  

 

ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, மூட்டுவலி, பக்கவாதம், கண்களின் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை தணிக்க முடியும். இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் கவன சிதறல், மன அழுத்தம், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு நல்ல பலன் பெற முடியும். 

 

இதைபோல ஒவ்வொரு முக உருத்திராட்ச மணிக்கும், ஓர் மருத்துவ குணம் உள்ளது. இப்போது புரிந்திருக்கும் ஏன் உருத்திராட்ச மணி மாலைகளை பயன்படுத்துகிறார்கள் என்று. 

 

          காணவே சொல்கிறேன் நன்றாய்க் கேளு 

          கருநெல்லிப் பழமைந்தின் சாரு வாங்கி

          பேணவே அதுக்கு நிகர் தேனுங்கூட்டி 

          பிரியமுடன்  அந்திசந்தி மண்டலங் கொள்ளு

          பூணவே வாசியது பொருந்தி நின்று

          பூரணமாயத் தேகமது சித்தியாகும்

        -    அகத்தியர்

ஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார். இவ்வாறு ஒரு மண்டல காலம் உண்டால் சுவாசம் சீரடையும், தேக சித்தியம்; கிட்டும் என்கிறார்.

          விள்ளுகிறேன் பொடி செய்து கொழுந்து தன்னை 

          வெரு கடியாய்த் தேனிலரை வருடங்கொண்டால்

          வள்ளலே நரையோடு  திரையுமாறும்

          வாலிபமுந் நூறுவய திதுப்பான்றானே

        -    கருவூரார்

கருவூராhர் ஜீவசமாதி கரூரில்  உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகவும், அவரது ஒளிவட்டம் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து போவதாகவும்; குறிப்புகள் கூறுகின்றன. இவரை அஸ்தம் நட்சத்திரகாரர்கள் வணங்கி, வழிபட்டு வரலாம்.

 

வேப்பமரத்தின் அதிக நீர்த்தன்மை உள்ள கொழுந்தைப் பறித்து பொடியாக செய்து, தேனில் குழைத்து ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக உண்டு வந்தால் நரை திரை மாறும் என கருவூரார் கூறுகிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. நம் உடலை வளர்க்கத் தேவையான உணவையே மருந்தாகச் சொல்வது தான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. இந்த வகையில் உடலை நோய் அணுகாமல், பொலிவுடன் இருக்க செய்ய சித்தர்கள் தேனை பல்வேறு மருத்துவ கூறுகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். லவங்கபட்டையும் தேனும் சேர்ந்து நடத்தும் அதிசயங்கள் இதோ, கொலஸ்டராலை குறைக்க 2 தேக்கரண்டி தேனுடன், மூன்று தேக்கரண்டி லவங்கப்பட்டை பொடி ஒரு கப் தேனீரில் கலந்து குடிக்க வேண்டும். உடல் எடை குறைய, ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, தேனையும், லவங்கப்பட்டை பொடியையும் சேர்த்து உணவிற்கு முன் காலை இரவு அருந்த வேண்டும். நோய் எதிர்ப்பு திறன் குறைவு, அல்சர், செரிமாண தன்மை, வாய்வு தொல்லை போன்ற தொல்லைகளுக்கும், தேன் மற்றும் லவங்கபட்;டை பொடி இணைவு ஓர் அருமருந்து. இது மட்டுமல்லாது உடல் எடை நன்றாக குறைய, இஞ்சி, கருப்பு மிளகு அரை தேக்கரண்டி, எலுமிச்சைசாறு -2, தேக்கரண்டி, தேன் - 2 தேக்கரண்டி, எடுத்து, 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்த அதில் இஞ்சி, மிளகுதூள் சேர்த்து ஆறவிடவும். இதனுடன் எலுமிச்சை சாறு தேன் சேர்த்து இதனை தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். பல உடல் நல பாதிப்புகளுக்கும், இதயம் மற்றும்; இரத்த அழுத்;தம் தொடர்பான நோய்களும், ஒரு வாரம்; ஊற வைத்த பூண்டு மற்றும் தேன் இணைவு சிறந்த அருமருந்தாகும். அரை தேக்கரண்டி தேனில் ஊற வைத்த பூண்டை தினமும் உணவுக்கு முன்னர் உண்ண அறிவுறுத்துகிறார்கள்.

 

மலையும் மலையும்; சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்தின் முக்கிய உணவு தேன் ஆகும். உலகிலேயே நிலங்களை ஐவகையாக பிரித்த ஒரே இனம் தமிழ் இனம் தான். குறிஞ்சி நிலத்தில் தேனடைகள், திணை, மூங்கில் அரிசி, பலா, சுனை நீர் உண்டு. குறிஞ்சிப்பாட்டு பாடிய கபிலர்;, குறிஞ்சி நில போர் முறையில் எக்காலமும் உணவில்லாது போகாது, ஒரு காலத்திலும்; உணவு பஞ்சம் வராது. மூவேந்தர்களின் படை ஒரு போதும் குறிஞ்சி நில மன்னனின் அதாவது பாரியை வெல்ல முடியாது என்கிறார் கபிலர், இதுதான் குறிஞ்சி நிலத்தின் தனிப்பட்ட சிறப்பு.

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...