???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   17 , 2019  07:41:18 IST

தேனீக்கள் போன்ற மனைவி இல்லத்தில் இருந்தால், கொட்டிய பிறகு உயிரை விடும் மரபை சார்ந்த ஆண்கள் நாங்கள்.  பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரிக்கும் பொறுப்பு ஆண்களுடையது என்ற கேள்விக்கு விடை தேடினால், மலர்கள் பூக்காத, உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத,  குளிர்காலத்திற்காக இவைகளால் முன் கூட்டிய சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையே தேன் சேகரிப்பு பதில். காதலையும், மணம் முடித்து தேன் கலந்த தேடலையும், அதன் உண்மை புரிதலையும் உணர்த்தும் உலகம் வியக்கும் ஒரே கவிஞன் கண்ணதாசன் ஒருவனே.  இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன், என்ற கண்ணதாசனின் வரி, ஒரு முறை எதிரியைக் கொட்டியவுடன் இறந்து விடும் ஈக்களின் கதையை முடித்தேன் என்பதன் உவமையே. சங்ககால புலவனுக்கே உள்ள செருக்கோடு தன்னை பற்றிய கவிதையிலும் பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன் என்றவன் கண்ணதாசன். 

           கவிஞன் யான் ஓர் காலகணிதம் 

           கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் 

           புவியில் யானும் ஓர் புகழுடை தெய்வம் 

           பொன்னினும் விலைமிகு பொருள் என் செல்வம் 

           இவை சரியென்றால் இயம்புவது என் தொழில் 

           இவை தவறானால் எதிர்ப்பது என் வேலை 

           செல்வர்தம் கையில் சிறைப்பட மாட்டேன் 

           பதவி வாளுக்கு பயப்பட மாட்டேன் 

           ஆக்கல், அளித்தல், அழித்தல் மூன்றும் 

           அவனும் யானும் அறிந்தவை அறிக 

           பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன் 

           ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன் 

           உண்டாயின் பிறர் உண்ண தருவேன் 

           இல்லாயின் எமர் இல்லம் தட்டுவேன் 

           வண்டாய் எழுந்து மலர்களில் அமர்ந்து      

           வாய்புறம் தேனை ஊர்புறம் தருவேன்     

           புகழ்ந்தால் என் உடல் புல்லரிக்காது  

           இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது 

           வளமார் கவிகள் வாக்கு மூலங்கள் இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு 

           கல்லாய் மரமாய் காடுமேடாக மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல

 

           நானே தொடக்கம் நானே முடிவு  

           நான் உரைப்பது தான் நாட்டின் சட்டம்.  

                

 

மூவேந்தர்கள் ஆண்ட இந்நாட்டின் சட்டம் எப்படி இருந்தது? மூவேந்தர்கள் எப்போது தோன்றினார்கள்? என்று கூறுவதும் எளிதல்ல. ஆனால் அவர்கள் தான் நமக்கு சட்டங்கள் உரைத்த பழமையான தமிழ் அரச மரபினர் என்று மட்டும் ஒத்துக் கொள்ள முடியும். வால்மீகி இராமாயணம், மகாபாரதம் அர்த்த சாத்திரம் அசோகர் கல்வெட்டு ஆகியவை மூவேந்தர்களை பற்றி குறிப்பிடுவதால் இவர்கள் கிறித்துவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டவர்களாக அறிய முடிகிறது. பொதுவாக அன்றும் அரசியலில் ஒற்றுமையில்லை இன்று போலவே. மூன்று பேரரசர்கட்கும் இடையே என்றும் போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இவர்களை தவிர குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர் இ;ன்றைய அரசியல் அமைப்ப சட்டங்கள் எவ்வளவு பலவீனமாக உள்ளது எவரும் அறிவோம். ஆனால் அன்றைய மன்னர்கள் சிறந்த கல்வியாளர்களாக இருந்துள்ளனர். கோப்பெருஞ்சோழன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இளம்பெருவழுதி கணைக்கால் இரும்பொறை போன்றோர் பழைய பாடல்கள் சங்க நூல்களில் இடம்;பெற்றுள்ளன. தகடூரில் அதியமானும், முதிரமலையில்; குமணனும், பொதினியில் பேகனும், தோட்டி மலையில் நள்ளியும், கொல்லிமலையில் ஓரியும், முள்@ர் மலையில் காரியும், பறம்பில் பாரியும்; என இப்படிச் சிறுசிறு மலைகளை கொண்டு ஆண்டு வந்துள்ளனர். மலைகளை பற்றி பேசுவதால் கண்ணதாசனின் மலைத்தேன் ஞாபகம் பெற்று சங்க கால மன்னர்களின் வாழ்வியல் சட்டங்களை நினைத்து மலைக்கிறேன். தேனின் மருத்துவ  குணங்களை அறிவதற்கு முன்னர், அக்கால மன்னர்களின் வாழ்வியல முறையும், அவர்கள் கொண்ட சட்டமும், அதற்கான கிரக அமைப்புகளையும் பார்ப்போம். இன்றுவரை நம்;மை தொடரும் ஒற்றுமையின்மை, தேனீக்களிம் இருந்து  நாம்; கற்றுக்கொள்ள வேண்டும். அன்றைய அரசியலிலும் ஒற்றுமை இல்லை எனும் போது, இறைவன் தன்; நாடகத்தை பல ஆயிரம் வருடங்களாக ஒற்றுமையை வைத்தே நடத்தியுள்ளான் என்பது மரபுவழி வரலாற்றுத் தொடர்ச்சிப்படி புரிகிறது.

 

உதாரணமாக, அதியமான், பாரி போன்றோர் பேரரசர்களின் தலைமையினை எதிர்த்து வந்துள்ளதன் விளைவே, அதியமான், பெருஞ்சேரல் இரும்பொறையாலும், பாரி, மூவேந்தர்களாலும் கொல்லப்பட்டதாக அறிகிறோம், சில வேளைகளில் பலர்; கூடி ஒருவனை எதிர்த்தலும்  நடந்துள்ளது, ஓரே நேரத்தில் இறைவனின் ஆட்டத்திற்கு முன்னால், இருவருடம் முன்னர்; தமிழகத்தின் ஆளுமைமிக்க முரண்பட்ட மூன்று சக்திகளும் இயல்பில்லாமல் போனது வருந்ததக்க விசயம், ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என்ற மூன்று வெவ்வேறு வயதினரின் ஆளுமை ஒரே சமயத்தில் தமிழகத்திற்கு இல்லாமல் போனது இறைவனின், இயற்கையின் விளையாட்டன்றி வேறென்ன சொல்வது?

 இப்போது  எத்தனை அரசியல் தலைகள் உள்ளே நுழைந்து விளையாடுகிறது பாருங்கள், புரியும். படைக்கலம், கொடி, குடை, முரசு, களிறு, தேர், மாலை, முடி ஆகியவை அரசுச் சின்னங்கள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, ஆனாலும் உயிர்பிரியும் நிலையில் எவராயினும் ஒரே சின்னம் இடுகாடு போவதே. உயிர்பிரியும் நிலை, உயிர் விடும் நிலை என இருபிரிவுகள், சங்ககால மன்னர்கள் உயிர்விடும் நிலையையும்; தேர்ந்தெடுத்துள்ளார்கள். மன்னர்கள் சிலர் மானம் அழியவந்த போது உண்ணாதிருந்து உயிர்விட்டனர். இன்றைய அரசியலில் உண்ணாவிரதம் காலையில் தொடங்கி மாலைக்குள் முடிவது, வரலாற்றை மனதில் அசைப்போட்டு வாருங்கள் புரியும். வெண்ணிப்பறந்தலையில் கரிகாலனிடம் தோற்ற பெருஞ்சேரலாதன் தானே உயிர் விட்டான், கணைக்கால் இரும்பொறை சிறை வைத்த போது பகைவர் தரும் நீரை உண்ண விரும்பாது உயிர்விட்டான், தமிழ் மன்னர்களின் மான உணர்விற்கு இவை சான்றாகும்,

 

இதே அரசியலில், சென்ற நூற்றாண்டில் உயிர்துறந்த அரசியல் ஆளுமைகளின், சிகரங்களின் சட்டதிட்டங்களை காண்போம், அரசியலில் உச்சநிலை அடைவதற்கும், அதன் பின்னர் அவர்களே இந்த பூமியில் இல்லாது போவதற்குமான காரண காரியங்களை யார் அறிவார்? இந்திராகாந்தியின் இறப்பு, அரசியலில் ராஜிவ்காந்தியின் வருகை, ராஜிவ்காந்தியின் துன்பியல் சம்பவம், நரசிம்மராவிற்கு உச்ச பதவி, அன்னை என்று அழைக்கப்பட்டாலும், பிரதமர் பதவி சோனியாவிற்கு இல்லை, எதிர்பாராத மன்மோகன் சிங் ஒருவருக்கு தான் தொடர்ந்து பத்து வருடங்கள். இன்று நமது பிரதமர் மோடி அவர்களும், நாம் எதிர்பார்க்காத திடீர் நிகழ்வே. நான் முன்னர் கூறியபடி மூன்று அரசியல் சக்திகள் இல்லாமல் போனதும்,  ஒரே நேரத்தில் நடந்த திடீர் நிகழ்வே, ஒருவர் நாட்டை ஆளும் அளவிற்கு வரவேண்டுமெனில், சிம்மமும், சூரியனும் மிகுந்த  சமத்துவமாக இருக்கவேண்டும், அதே நிலையில் ராசி அல்லது லக்னத்தின் பத்தாமிடங்களோடு சூரியன் தொடர்பு கொண்டும் சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அல்லது லக்ன கேந்திரங்களில் அமர்ந்தோ இருக்க வேண்டும், சிம்மம் அல்லது சூரியன் சுபத்துவம் அடையாத நிலையில் பிறந்த ஒருவர் நிச்சயமாக அரசியல் வாதியாகவோ, ஐ.ஏ.எஸ்  போன்ற உயரதிகாரியாகவோ ஆகவே முடியாது.

 

ஜோதிடத்தில் தலைமை பண்பை குறிக்கக்கூடிய, அனைவராலும் ஏற்றுக் கொள்ளகூடிய ஒரு தலைவராக ஒருவரை மாற்றுகின்ற கிரகம் சூரியன் மட்டுமே, இதனை அடுத்த அதிகார உயர்நிலையாக செவ்வாய் அமைவார், சூரியன் வீடான சிம்மம், சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் ஆளுமையில் இல்லாமல் இருந்து ஒரு வேளை அப்படி இருக்குமாயின் அவற்றின் தசைகள் இளம் வயதிலேயே முடிந்து சூரியன் மிக வலுவோடு இருக்கும்; ஒருவர் அதிகாரத்தில், ஆளுமையில் உயர்நிலைக்கு செல்வார், நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவர் எதிர்காலத்தில் உலகம் வியக்கும் நிலையை அடைவார் என்பது அவரது குடும்பத்தாரே எதிர்பார்க்காத ஒன்று தான், அப்படிப்பட்ட நரேந்திர மோடி அவர்களும் பிரதமராகி உள்ளார். வம்சா வழியாக பிரதமர்; பதவியை, கட்சி தலைமை  பதவியை அனுபவித்தாரும் உண்டு, அதிகாரம், சொகுசு போன்றவைகளை கொண்டோர் ஜாதகத்தில், லக்னம், ராசியை அல்லது லக்னாபதியை குரு பகவான் பார்த்திருப்பார்;. இந்த மூன்றோடும் தொடர்பும் கொண்டிருப்பார், சாதாரண நிலையில் பிறந்து வாழ்வில் உச்சநிலைக்கு சென்றோர்; அனைவரின் ஜாகத்திலும்; இந்த அமைப்பினை நிச்சயமாக பார்க்கலாம் என்கிறார் ஆதித்ய குருஜி.

 

இன்னுமொரு மிகமுக்கிய விதியாக பத்தாமிடம்; மற்றும் அதன் அதிபதி  மிகுந்த வலுவுடன் சுபமாக இருக்க வேண்டும், மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர். கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகத்தில் தெளிவாக காணலாம். கலைஞருடைய ஜாதகத்தில் ராசிக்கு 10-க்குடைய சனியும், லக்னத்திற்கு 10-க்குடைய செவ்வாயும் உச்சம். எம்.ஜி.ஆரின் ஜாதகத்தில் ராசிக்கு 10-க்குடைய குரு ஆட்சி, லக்னத்திற்கு 10-க்குடைய புதன் பரிவர்த்தனை. ஜெயலலிதாவின் ஜாதகத்தில் ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் உச்சம், லக்னத்திற்கு பத்துக்குடைய குரு ஆட்சியாகி உள்ளது. சரி, லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் வாழ்ந்த தலைவர்கள் இல்லையா என்றால், உண்டு. உதாரணம் கர்மவீரர் காமராஜர் அவர்களே. சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் தியாக உணர்வோடு வாழ்ந்;த சில தலைவர்களின் ஜாதகங்களில் மட்டுமே லக்னாதிபதி வலுவிழந்து இருந்தார். காமராஜர் ஜாதகத்தில் கடக லக்னம் கொண்டு, லக்னாதிபதி சந்திரன் எட்டில் மறைந்துள்ளார். தன் வாழ்வில் பெரும்பகுதி சிறையிலும், இறந்தபோது அவரிடம் இருந்தவை இரண்டு பழைய வேட்டி சட்டைகளும்; நூறு ரூபாய் பணம் மட்டுமே என்பதே வரலாறு. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கை எவரும் அறிவோம், இந்த சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் லக்னாதிபதி வலுவாக இருந்தே தீரவேண்டும், 1991-ல் ராஜிவ் மரணமடையும் போது அவருக்கு ராகு தசையில் புதன் புத்தி நடைபெற்று கொண்டிருந்தது. எனது முந்தைய தொடரில் குறிப்பிட்டது போல பல இழப்புகளுக்கு பின்னே 12-மிட விரய ராகு இருக்கிறார். அதே போல அஷ்டாமாதிபதி, பாதகாதிபதி தொடர்பு கொண்ட ராகு பல இழப்புகளுக்கு காரணமாகிறார். ராகுவுக்கும், சனிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. ஒரே மாதிரி தான் காய் நகர்த்துவார்கள். சனி தசையில் ராகு புத்தியால் தான்; இந்திராகாந்தி சுட்டுகொல்லப்பட்டார். இவரது ஜாதகப்படி, பாதகாதிபதி சுக்கிரனுடன், இணைந்த ராகு இந்த பாதகத்தை செய்தார். இதே போன்ற பாதகாதிபதி அஷ்டாமாதிபதியின் சஷ்டாஷ்டக தசா புத்தியில் தான் ஜெயலலிதாவும் மரணமடைந்தார்.

 

மரணித்தல் பல யுகங்களின் பிரபஞ்ச மறு சுழற்சி, வாழ்ந்த காலங்களை முடித்து வைப்பது. முடிந்த காலங்கள் வரபோவதில்லை, மடிந்த தலைவர்கள் காலங்களில் நின்று, வென்று, நிலைத்து என்றுமே இறப்பதில்லை. மரணத்திற்கும் மரணமில்லாமல் நிற்பது தலைவர்களின் சரித்திர புகழ் ஒன்றே.

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...