???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-22 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2019  03:16:32 IST

நிலவு, வானம், நிழல் பூமி இவைகள் தான் எவ்வளவு அழகாக தங்களை தானே இயக்கி கொண்டிருக்கிறது. இவைகள் தங்களுக்குள்ளே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு, மனித மற்றும் மற்ற உயிர்களை பிரசவித்த நிகழ்வை, பரிணாம வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விட்டோம். இயற்கையின் ஒவ்வொரு வடிவத்தையும் இறை அவதாரமாக கொடுத்த நம் முன்னோர்கள், வாழ்க்கை பரிமாணத்தையும் நமக்கு விட்டுதான் சென்றுள்ளார்கள். இதில் மனம் அடங்க மறுப்பது, அதிகப்படியாக மதுவால் மட்டுமே. அதனால் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு என்ன கிரக சூழ்நிலைகள் என்று பார்ப்போம். குடிப்பழக்கத்திற்கு காரணமான கிரகம் சனி, நீசதிரவத்திற்கு அதிபதி சனி, பாபத்துவமாக லக்னத்தில் (அ) ராசியில் இருக்கும் நிலையில், ஒருவருக்கு சனி திசையில் அல்லது புத்தியில் மதுவருந்தும் பழக்கம் உண்டாகும். சனியின் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசையிலும், புத்தியிலும் இந்த பழக்கம் உண்டாகலாம். 95 சதவிகிதம் பேருக்கு குடிப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் மனம் சனியால் ஆக்ரமிக்கும் இருள் நெருங்கும் வேளையில், எல்லாவற்றையும் மறந்து விட்டு குடிக்கப்போய் விடுவார்கள். பூர்வஜென்ம கர்மவினைப்படி மனம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதால் தான் ஒருவர் குடிகாரராகிறார். உண்மையில் யாரும் வேண்டுமென்றோ அல்லது விரும்பியோ குடிப்பதில்லை, மனைவியை நினைக்கும் பொழுது, எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரோ, மிகப்பெரிய குடிகாரராக இருந்தாலும், ஏதோ ஓர் நிலையில் தானே உணர்ந்து குடியை விட்டு விடுவார். மனிதர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, பலவிதமான உணர்ச்சிகளின் கலவையாக தான் இருக்கிறார்கள். இளமையில் குடி அறிமுகப்படுத்தப்படுவதும், கோட்சாரப்படி, ஏழரை சனி, அஷ்டமசனி காலங்களில் தான் கற்று கொள்ள ஆரம்பிக்கும். தேவையற்ற நபர்களின் பழக்க வழக்கங்களும், போதைக்கு அடிமையாவதும், ஜனன ஜாதகப்படி இருள் கிரக சம்பந்தப்பட்ட தசைகளும் மற்றும் கோட்சாரப்படி சந்திரனை சனி ஆக்ரமிக்கும் காலமே. குடிபழக்கம் தன்னை பாதிக்காதவாறு, யாரும் அறியாமல் குடிப்பவரும் உண்டு. முழுக்க முழுக்க சனி பாபத்துவ அமைப்பில் இருந்தால் அவன் குடித்து விட்டு தன்னிலை மறந்து ரோட்டில் தான் கிடப்பான். குடிப்பதிலும் நாகரீகமாக குடிப்பதும், அநாகரிகமாக இருப்பதும் உண்டென்பதால், இங்கு சனியின் சுபத்துவ மற்றும் பாபத்துவ அமைப்பை நம் ஜாதகங்களில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த வகையில், சிலர் குடிப்பதற்கு முன்னரே, இரைப்பை புண் வராமல் இருக்க மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். வயிற்றுப்புண் வராமல் இருக்க மாத்திரை எடுக்க தெரிந்த நாம், குடிக்காமல் இருக்க முடிகிறதா, முடியவில்லை.

 

ஏனென்றால் அது ஒருவிதமான அதீத உற்சாக மயக்கநிலை. பாடல்களை ரசிப்பதும், ஆடுவதும், சிரித்து மகிழ்வதும் இந்நிலையில் தான், கொடூரம் புரிவதும், கொலை நடப்பதும் இந்நிலையில் தான். ஆக ஒரு நிலையே இருவித நிலைகளை உருவாக்குகிறது. வயிற்றுப்புண் அதிகம் கொண்டவர்களுக்கு, குடிக்க முடியாத நிலையே ஏற்படும். அதனினும் மதுவின் வாசம் கூட கண்களில் கண்ணீரை வரவழைத்த நிகழ்வும் உண்டு. சமரசத்திற்கு உள்ளாகாத மதுவகைகள் சிலநிலைகளில் பெரிய தொந்தரவுகளை கொடுப்பதில்லை. பொதுவாக மருவருந்தும் பழக்கம் கொண்டிருந்தால், இரைப்பையை வளமாக வைத்துக் கொள்ள வேண்டும், சில நியதிகளையும்  கடைபிடிக்க வேண்டும். இந்த குடி என்பதற்கு அன்றாடம் தண்ணீர் எப்படி ஒரு நாள் குடிக்க வேண்டும் என்று சித்தர்கள் அருளியிருப்பதும், அகத்தியர் தண்ணீர் குடிப்பதற்க்கும் நேரம் வகுத்திருக்கிறார் தண்ணீர் ஒரு நாளைக்கு ஆறு முறை குடிக்க வேண்டும். தண்ணீர் காலையில் கட்டாயம் குடிக்க வேண்டும்.

 

‘காணாமல் கோணாமல் கண்டு குடி”  

-              அகத்தியர் 

 

அதிகாலையில், இரண்டு கோப்பையில் தண்ணீரும், மதியநேரம் இரண்டு கோப்பையும், மாலை இரண்டு கோப்பையும், உணவுக்கு பின்னர் மூன்று வேளையும் குடிக்க கூறியுள்ளார்கள். 

                                ‘ பெருந்தாகம் எடுத்திடுனும் பெயர்த்து நீர் அருந்தோ”   

                                 -              தேரையர் 

 

இதிலிருந்து அறிவது என்னவென்றால், சாப்பாட்டுக்கு முன்னர் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்ற இன்றைய வாதத்திலிருந்து விலகி நிற்கிறது சித்தர்களின் தண்ணீர் குடிக்கும் முறை. எனவே தண்ணீரை அருந்துவதற்கு மட்டும், எந்நேரமும், எந்நிலையிலும் எடுக்கலாம். பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ்நீர், வியர்வை நீர், இரத்த நீர், சிறுநீர், கண்ணீர் என பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர் தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மை கொண்டது. பஞ்ச பூதங்களின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும் போது தன் ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு உதாரணம், கறையானின் உமிழ்நீர் மண்கலவையோடு சேர்ந்த நிலையில், அசைக்கவும், எளிதில் கரைக்கவும் முடியாத பெரிய புற்றுக்களாக உருவெடுக்கும். இந்தப் புற்று மண், நீரும் நிலமும் ஆகிய இரண்டு பூதங்களின் சக்தி வாய்ந்த கலவை. இந்த புற்று மண்ணைக் கொண்டு வந்து நீரில் கரைத்து, உடம்பில் வீக்கமுள்ள இடங்களில், பூச வீக்கம் நீக்கும். இரத்தக்கட்டு விலகும், உடம்பில், முகத்தில் தடவிக் குளிக்க உடம்பில் உள்ள தேமல், படை நீங்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். நம் உணவிலேயே சத்து மிகுந்தது நீராகாரம். அதனோடு நாம் உண்ணும் வெங்காயமும் நீர் சொறிந்த பொருளே. வயது ஏற ஏறத் திடப்பொருளைக் குறைத்துத் திரவப் பொருளை அருந்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள். தண்ணீரின் மருத்துவ பயனைக் கூட்ட வேண்டுமானால் அதனைத் தாமிரப் பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்து அருந்த வேண்டும். நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தின் கீழே கிடைக்கும் தண்ணீர் என இரண்டு வகையாகவே நாம் நீரின் வகையை அறிந்திருக்கிறோம். 

 

ஆனால் நமது முன்னோர்கள் தண்ணீரை அதன் குண இயல்புகளின் அடிப்படையில் பதினெட்டு வகையாக பிரித்துக் கூறியிருக்கின்றனர். அவை மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர், குளத்து நீர், ஏரிநீர், சுனைநீர், ஓடை நீர், கிணற்று நீர், ஊற்று நீர், பாறை நீர், அருவி நீர், அடவி நீர், வயல் நீர், நண்டுக்குழி நீர், உப்பு நீர், சமுத்திர நீர், இளநீர் உதாரணமாக. 

 

                இளநீரால் வாதபித்த மேருமனதுந் 

                தெளிவாய்த் துவங்குமிருதிஷ்டக் - கொளிவுங்   

                குளிர்ச்சியு முண்டாகுங் கொடியவனல் நீங்குத் 

                தளிர்ந்தகன நொய்தாகுஞ் சான்று 

-              தேரையர்  

 

இளநீரை அருந்துவதால் வாதம், பித்தம், சனல், கபம், வாந்தி, பேதி நீரடைப்பும் நீங்குமாம். அத்துடன் உனது தெளிவு, கண்ணொளி தேகக் குளிர்ச்சியும் உண்டாகும் என்கிறார் தேரையர். இந்த திரவ நீருக்கு காரணமான அடிப்படை கிரகம் சந்திரன் ஒருவனே. சந்திரனுடன் சனி சேராமல் இருப்பது எவ்வளவு நல்லதோ, அதே போல் இளநீருடன், மதுவை கலக்காமல் இருப்பது. ஏனென்றால் கலந்த சிறிது நேரத்தில் மது மேலேயும், இளநீர் கீழேயும் பிரிந்து விடும். இதனால் மிகுந்த போதைக்கு உள்ளானவர்கள் நிறைய உண்டு. வயிற்றப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இவ்வாறு ஏதாவது ஏற்பட்டால் மணதக்காளி கீரை பச்சையாக உண்டு வந்தால், புண் சரியாகி விடும், நீர் பூசணி சாறும் ஒரு விதத்தில் இதற்கு பயன்படும். வெள்ளரியை பயன்படுத்தலும், கருப்பு திராட்சை விதையுடன் பயன்படுத்தலும், மதுவினால் ஏற்படும் அடுத்த நாள் அசௌகரியங்களை நீக்கி விடும். மிகுதியாக மதுவை நாடுபவர்களுக்கே, இந்த மருத்துவ தற்காப்பு முறைகள் தேவைப்படுகிறது. மேலே பலவகையான நீர் தன்மையை கண்டோம். இதில் சிலநீர் இப்போது உலாவி வருகிறது. முக்கியமாக தேநீர்,

 

தேன் கலந்த நீராக இல்லாமல், வெள்ளையர்களால் தேயிலை வியாபார யுக்திக்கு கிடைத்த பெயர். தேயிலை நீரென்றும் கொள்ளலாம். இன்று தேநீர் இல்லாமல் எவரது வாழ்க்கையும் இல்லை, என்பதிலிருந்து நோய் பெருத்து உடல் இனி மெல்ல சாகும். தமிழ் இனி மெல்லசாகும் என்ற வாக்கிலிருந்து, உடல் நோய் சார்ந்து இனி மெல்ல சாகும். இதிலிருந்து மீள சித்தர் அறிவை தேட தொடங்கிதான், மருத்துவம் சார்ந்த முறைகளை இங்கு என்னால் தர முடிகிறது. என்னை பொறுத்தவரை மதுவுக்கு இணையாகத்தான் தேநீர் அருந்துதலை நினைக்கிறேன். இதிலிருந்து ஓர் சட்டதிட்டம் வேண்டுமானால் கொண்டு வரலாம், மதுவருந்தும் கணவனை, தேநீர் அருந்தும் மனைவி திட்ட கூடாது என்பதே, அல்லது இருவரும்; இரண்டையும் விட்டுவிடுங்கள். விதி விலக்காக சின்னதிரை நாடகங்களையும் சேர்த்து பெண்கள் காண்பதை விலக்க வேண்டும் என்பதை ஆண் சமூகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது. தேநீருக்கு மாற்று தேன் கலந்த மூலிகை கொதி நீர், நீரழிவு இருந்தால் சோற்று கற்றாழை நீர், தேன் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு கொண்ட அருமருந்து. கலப்படம் கலந்த இப்பூமியில் சுத்தமான தேனை அடைவது அவ்வளவு எளிதல்ல. நம்பகமான சித்த மருத்துவரை அணுகி, சுத்தமான தேன் கிடைக்கும் தகவல்களை பெற்று கொள்ளலாம். பஞ்சாமிர்தம் தேன் கலந்த, போகரால் தரப்பட்ட அருமருந்து. பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கம் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் பங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் இதனை வீட்டில் வைத்து உண்பது வழக்கம். பழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தை, மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் கொண்டு பஞ்சாமிர்தம் அருளியுள்ளார்.

 

காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் தன்மை கொண்டது. இவ்வளவு அரிய பஞ்சாமிர்தம் பற்றி நாம் அறிந்தாலும், சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில் தான் இன்று சிக்கல். பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலைவாழையில் செய்யப்படுவதில்லை. தேவை அதிகரித்ததால் வேறு பழங்கள் கொண்டு செய்யப்படும் பஞ்சாமிர்தம் விரைவில் கெட்டும் விடுகிறது. ஆனால் மலை வாழையில் சுத்தமான தேன் கொண்டு செய்வதை கண்ணதாசன் மொழியில் அறிவோமானால், நான் பாடல் கேட்டு ரசித்தேன், மலைத்தேன். 

 

                பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

                அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன் 

                அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்

 

                கொடித் தேன் இனியங்கள் குடித்தேன் என 

                ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன் 

                துளித் தேன் சிந்தாமல் களித்தேன்  

 

                மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்

                உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் 

                எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்

                இனித் தேன் இல்லாதபடி கதை முடித்தேன்

 

                நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்  

                உலகத்தை நான் இங்கு மறந்தேன் 

                உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன் 

                உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்  

-              வீரஅபிமன்யு (1965)       

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...