???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-20 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   27 , 2018  01:25:09 IST

என்னுடைய கேள்வி கற்பனைக்கும் எட்டாத வாழ்வை கொடுத்து, கட்டாந்தரையிலும் படுக்க வைக்கும் அமைப்பு, எதுவும் நிலையற்றது. எந்நிலையையும் அறிந்து கொண்டு வாழ், அது உனக்கு நிம்மதியை முக்தியை கொடுக்கும் என்பதன் சூட்சுமமாக இருக்குமோ, என்பது பாமர மக்களுக்கு ரஜினிகாந்த் வாயிலாக தான் இறைவனே காட்டமுடியும். அதனால் அவர் ஆன்மீக அரசியல் என்று கூறியது தவறே இல்லை என்பது புலப்படுகிறது. இதை அவரது அரசியல் எதிரிகளும் மறுப்பதற்கில்லை. ஓர் பாடல் மொழியறியும் முன்னரே, அதன் இசை மட்டும் கொண்டு புரிந்து, பின்னாளில் தமிழும் அறிந்த பிறகு, அந்த பாடலின் அற்புதத்தை இன்று வரை, எனக்கு பிடித்த பாடல் என்று கூறிய ரஜினிகாந்த், என்ன அதிசய பிறவி என்றால் பல கண்ணதாசன் பாடல்கள் இவருக்காகவும் வலம் வந்துள்ளன. கர்நாடகத்தில் இருந்து முக்தியடைய தமிழை நோக்கிய பிரயாணம், போனால் போகட்டும் போடா என்பதன் மறு வடிவம், இதோ கண்ணதாசன் வரிகளில், 

               

             போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா 

                வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது 

                வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது 

                வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும் 

                அதில் மரணம் என்பது செலவாகும் 

 

இரவல் தந்தவன் கேட்கின்றான், அவன் இல்லையென்றால் விடுவானா 

உறவை சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா 

 

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

                இதற்கொரு மருந்தை கண்டேனா 

                இருந்தால் அவளை தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா 

நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா 

தினம் நாடகம் ஆடும் கலைஞனடா 

                          - பாலும் பழமும் படத்திலிருந்து

 

மேலே கூறிய  ‘இதற்கொரு மருந்தை கண்டேனா” என்ற கேள்வியுடன் தான் மருத்துவ உலகமும் பயணிக்கின்றது. என்னுடைய உள்ளமும் அதை நோக்கியே ஓடுகையில், ஏற்படும் மன அழுத்த நிகழ்வுகள் ஏராளம். மிக முக்கியமாக ஏளனம். இந்த ஏளனத்தை தாண்டி தான் வெற்றி பெற்ற அனைவருமே நிற்கின்றனர், அவரவர் நிலைக்கேற்ப. நான் உச்ச நட்சத்திர உள்ளத்திற்கே சென்று விடுகிறேன். இன்றுவரை அவரை மீட்டாத ஏளன வார்த்தையில்லை. தமிழ்நாட்டிற்கு என்ன செய்து விட்டார் என்று கேள்வி கேட்கும் உள்ளங்கள், கொஞ்சம் யோசித்து பாருங்கள் இன்று வரை நாற்பது வருட வாழ்க்கையில் எத்தனை படங்கள், அறிவுரையோ தாய், தந்தையரை குடும்பத்தை நேசியுங்கள், எந்தவொரு தயாரிப்பாளரும் நட்டமில்லை, அப்படி ஏதாவது நடந்திருந்தால், அடுத்த படம் அவருக்கே நடித்து கொடுப்பது, இவரின் நடிப்புக்கு முன்னால், இன்றுள்ள குழந்தைகளும், நாற்பது வருட குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவது, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இப்பொழுதும் நடந்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுமைக்குமான ஓர் விளம்பரத்தில் நடித்தாலே எத்தனையோ கோடிகளை அள்ளி கொண்டு போய் விடலாம். உள்ளத்தில் உள்ளதை ஒதுக்கிவிட்டு, உண்மையான ஆன்மீகவாதியாக முயற்சிப்பது குற்றம் என்றால், இது காலத்தின் தொடர்ச்சி, நாம் ஓர் கருவி தான் வாழவந்து விட்டோம் என்ன இதையெல்லாம் என்னவென்றே அறியாமல் வாழ்ந்து, இறந்து போவோரின் உள்ளங்கள் தான் ஏராளம். இந்த மொத்த உலக உள்ளங்களுக்கெல்லாம், கண்ணதாசன் என்ற உள்ளமே ஆறுதல். கர்ணன் படத்திலிருந்து 

 

                உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்துதடா 

                கர்ணா வருவதை எதிர்கொள்ளடா 

                தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை 

                ஊர்பழி ஏற்றாயடா, நானும் உன்பலி கொண்டேனடா 

 

                மன்னவர் பணியேற்க்கும் கண்ணனும் பணி செய்ய  

                உன்அடி பணிவானடா - கர்ணா

                மன்னித்து அருள்வாயடா 

                செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து 

                வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - வஞ்சகன் கண்ணனடா   

                                                        -  கண்ணதாசன் 

உள்ளம் உறங்காமல் இருக்க வருவதை எதிர்கொள்ள வேண்டும். உடல் உறங்காமல் இருக்க, காயகற்ப மூலிகைகளை உண்ண வேண்டும். ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு விதமான காய கற்ப மூலிகைகளை முக்தியடையவும் பயன்படுத்தியுள்ளனர். திரிகடுகம் என்ற மருத்துவ நிலையிலிருந்து, ஓர் ஆன்மீக ஆராய்ச்சியை தொடர்ந்து, இப்பொழுது திரிகடுக காயகற்பம் தயாரிக்கும் முறையை காண்போம். இப்பாடல் கருவூரார் வாதகாவியம் என்ற நூலிலிருந்து விளக்கம் கொள்கிறோம். கருவூரார் ஜீவசமாதி கரூரில் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. அவரது ஒளிவட்டம் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து போவதாக தெரிகிறது. அஸ்தம் நட்சத்திரகாரர்கள் அவரை வணங்கி வரலாம். 

                               

                               அற்புதமா தாகவொரு - மருந்து  

                                அறைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும் 

                                கற்பமொன்று விள்ளுகிறேன் - நல்ல          

                                கற்றாழைஞ் சோறெடுத்து விஸ்தாரமாய்  வெருகடி 

                                திரிகடுகு பொடி பண்ணி - வெருகடி  

                                தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே

                                பிரட்டியே தின்று வரக் - காயம் 

                                பிலக்குமேப்பா நரை திரை மாறும்

 

                                சித்தருக்கு சித்தனப்பா  - பர 

                                தேசியர்க்குப் பர தேசிகனாம் 

                                ஞானியர்க்கு ஞானியப்பா 

                                    -   கருவூரார்   

இப்பாடலில் வெருகடி என்பது காட்டுப் பூனையின் மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று. 

 

கற்றாழை சோற்றில் வெருகடி அளவு எடுத்து அதனுடன் திரிகடுக சூரணத்தை (மிளகு, சுக்கு, திப்பிலி) வெருகடி அளவு சேர்த்து உண்ண வேண்டுமாம். இப்படி உண்டு வர நரைதிரை மாறி உடலும் உறுதியாகுமாம். மேலும் அத்தகையவர்கள் சித்தருக்கு சித்தனாகவும், பரதேசிகளுக்கு பரதேசியாகவும், ஞானியாகவும் இல்லறதானாகவும் சிறந்து பல காலம் வாழலாம் என்கிறார் கருவூரார்.  

 

                                இதுவொரு வருடங் கொண்டால் - இவனுக் 

                                கிப்பிறவி போகப்பிற் பிறவியல்லை 

                                தேவலோகம் நாகலோகம் - முழுதும் 

                                தேவ னிவனென்றே செப்பலாகும் 

                                நேராகவே தோன்றும் - மல 

                                நீர்விட்ட இடங்களில் வர்ணம் பேதிக்கும்  

                                அமிர்தம் ரசத்தைக்கட்டும் - அவன் 

                                அவனியிற் பேர்பெற்ற சித்தனப்பா

 

இந்த கற்பத்தினை காலை அல்லது மாலை வேளையில் தொடர்ந்து ஒரு வருடம் உண்ண வேண்டுமாம். அப்படி உண்பதால் இனி பிறப்பே இருக்க மாட்டாது என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் உலகில் பெயர் பெற்ற சித்தனாக இருப்பார்கள் என்கிறார். பொதுவில் காய கற்பங்களை பற்றி மிகையான புரிதல்கள் நம்மிடையே இருக்கிறது. நாம் வாழும் நாட்களில் உடல் நலிவின்றி பொலிவோடும், வலுவோடும் வாழத் துணைபுரிபவை என்கிற அளவில் மட்டுமே கற்பங்களை அணுகிட வேண்டும். இன்றைய நவீன மருத்துவம் உடல் ஆரோக்கியத்திற்காக முன் வைக்கும் சத்து மாத்திரைகளைப் போன்றவையே கற்பங்கள். நமது உடலில் உள்ள குறைபாடு அல்லது தேவைக்கு ஏற்ப இந்த கற்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உட்கொண்டால் அதுவே நஞ்சாகவும் மாறிவிடும் ஆபத்திருக்கிறது. இந்த தொடரின் நோக்கம் நமது முன்னோர்கள் இத்தகைய அரிய பலதகவல்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதே. எனவே இவற்றை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவர்தரும் பரிந்துரைக்கேற்ப எடுத்துக் கொள்வது அவசியம். 

 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...