???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-2 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2018  02:26:23 ISTஇந்த உடலானது சக்கரங்களை அடிப்படையாக கொண்டது. அவை முறையே மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும் அது பாம்பை போல சுருண்டு மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது. இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேராற்றலாக மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.


குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல்   நோக்கி கிளம்பும் ஆற்றலானது மேலே எல்லா சக்கரங்களையும் கடந்து துரியம் என்ற உச்சந்தலை வரை கொண்டு வரலாம் என்கின்றது சித்தர் பாடல்கள்.
சித்தரியலில் குண்டலினி பற்றி கூறாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லா சித்தர்களும் குண்டலினியின் மகிமையை சீடர்களுக்கு அருளியுள்ளார்கள் பாடல் வடிவில்.

இந்த குண்டலினியை எழுப்பி விடுகிறேன் என்று தான் ஒரு கூட்டமே இங்கு பணம் பறிக்க அலைந்துகொண்டிருக்கிறது. என்னுடைய அனுபவப்படி குண்டலினியை  மூலாதாரத்தில் இருந்து எழுப்பவே குறைந்தது 14 வருடங்கள் ஆகும்.


சித்தர்கள் அருளிய நூல்களில் ஒரு சிறு தொகுதி மட்டுமே தற்போது நம்மிடம் கிடைத்திருக்கிறது, பல அரிய நூல்கள் காலத்தால் அழிந்து போயின, கிடைத்ததில் குண்டலினியை பற்றி சிவவாக்கியர் கூறுவது பின்வருமாறு.

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாடி உம்முள்ளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டரானை யம்மையானை யுண்மையே .
-சிவவாக்கியர்

இந்த பாடலில் குண்டலினி யோகத்தைப் பற்றி சொல்கிறார் சிவவாக்கியர்  நம்முள் அடங்கியுள்ள மூலாதார சக்தி குண்டலினி சக்தியாகும். அந்த குண்டலினி யோகத்தை பயின்று படிப்பபடியாக அதை மேலே உயர்த்தி புருவமதிற்கு யாரால் கொண்டு செல்லமுடியுமோ, அவரால் இளமையோடு நீண்ட காலம் வாழ்வதோடு பரப்பிரம்மமாகவும் இருக்கலாம். என்று சிவபெருமான் மீதும், பார்வதி தேவியார் மீதும் ஆணையிட்டு உறுதியாக சொல்கிறார்.

குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது, உச்சந்தலையில் சிவ அம்சம் உள்ளது. குண்டலினி சக்தி சிவத்தை சேரும் இன்பமே பேரின்பம். இந்த அனுபவத்தை சித்தர்கள் தங்கள் நூல்களில் பதிந்துள்ளனர்.
மூலாதாரம் – உடலில் உள்ள மற்ற சக்கரங்களுக்கு தேவையான சக்தியை அருளகூடிய குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு படுத்துள்ளது.     இச்சக்கரத்தில் இருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக்கிளம்புகின்றன அவை தாமரையின் நான்கு இதழ்போல் தோற்றமளிக்கும் ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் ”வ ஸ ச ஷ ” என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது. இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கின்றன என்கின்றனர் சித்தர்கள்.

நாடிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடியிருந்தானே
-    திருமூலர்


மூலாதாரத்திற்கு மேலே இருக்கும் இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம்.நமது பிறப்பு உறுப்பிற்கு மேலே இது இருக்கிறது என்கின்றனர் சித்தர்கள்.
இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான ”சிவயநம “ என்னும் எழுத்துக்களில்     ஒன்றான ’ந’ என்னும் எழுத்தையும் , அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.
இச்சக்கரத்தினின்று ஆறு முக்கிய நாடிகள் வெளிக்கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப்படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் “ ஸ ஹ, மீ, ய, ர, ல “என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

மூன்றாவதான சக்கரம் மணிப்பூரகம் – இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை “டட, ணத, தத, தந, பப” என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். இந்த சக்கரமானது ’நமசிவய” என்னும் எழுத்துக்களில் ஒன்றான ’ம்’ என்பதன் தத்துவத்தை விளக்குகின்றது.
நான்காவது ஆதார சக்கரமான அனாகதம், பஞ்சாட்சர எழுத்துக்களான ’’சிவயமே”என்னும் எழுத்துக்களில் ஒன்றான ’சி’ என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விளக்குகிறது. இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக நாடிகள் தாமரை இதழ்போல வெளிவரும் அசைவுகளால் உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள் பின்வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர். அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச, என்பதாகும்.மூலாதாரத்தில் இருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி, “சிவயநம”என்னும் எழுத்துக்களில் ”வ” என்னும் எழுத்தையும் , அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது . இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதுனாறு யோக நாடிகள் கிளம்புகின்றன . அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ , ருஊ, வஈ, இஆ, அஅ, அம் ஓஜ , ஏலூ, என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது.


ஆறாவது சக்தி ஆதார மையமாய் குறிக்கபடும், அக்ஞா சக்கரம், “சிவயநம” என்னும் எழுத்துக்களில் ஒன்றான ’ய’ என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குகிறது. இரண்டு தாமரை இதழ்களில் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை  ஹ, ள , என்ற எழுத்துக்களால் குறிக்கபடுகிறது.
ஒவ்வொரு சக்கரத்தின் மூல மந்திரத்தையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள் சித்தர்கள்.
அவை மூலாதாரம் – லம், சுவாதிஷ்டானம் – வம் , மணிப்பூரகம் – ரம். அனாதகம் –யம், விசுத்தி – ஹம் , ஆக்ஜை - ஓம்


துரியம் சக்கரமானது ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை மலரை போன்றது, என்கின்றனர் சித்தர்கள். அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.

தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனித்தோர் எட்டு விரல் மேலே கேளு
கோனான குருபதந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஒர் ஆயியரத்தெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோண மாகும்
அகாரமொடு, உகாரமொடு, மகாரமாகும்.
நானான நாதமொரு விந்து ஐந்தும்
நலத்த ஐங் கோணத்தில் நிற்கும் பாரே
-    போகர்


ஆஞ்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதாரமையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது. அ உ ம் கலந்து ஓம் என்றாகி , ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்றன , இவ்வளவும் “ ஓம் நமசிவய ” என்றாகிறதன் பொருளே.
 சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக சூட்சமமானது , பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியொரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது . குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைதான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குரிப்பிடுகின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழுப்பும் ஐம்பது நாடிகளின் சப்தங்கள் ஐம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் பேசா மொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியொரு எழுத்துக்கள் ஆகிறது. வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து பேசினாலே உடல் நலம், ஆன்ம நலம் சிறக்கும் என கூறியிருக்கின்றனர்.
இந்த தகவல்கள் எல்லாம், இலங்கையில் சித்த பாரம்பரியத்தில் வந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் , அவரது வலைத்தளங்களில் இருந்து திரட்டபட்ட தகவல்களே. அவர் தன்னை தோழி என்று குறிப்பிட்டு கொள்கிறார். அவரை நான் பார்த்ததில்லை, அவரது பெற்றோர்கள் சித்த பாரம்பரிய மருத்துவர்கள். இன்று அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அதே நேரத்தில் இந்த பெண்ணுக்கும் விபத்து ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டதாகவும் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண் நல்லபடியாக குணமடைய சிவனையும் சித்த பெருமக்களையும் வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது அவரை வலைத்தளத்தில் கடந்த ஒரு வருடமாக எந்த பதிவும் வரவில்லை என்பது அவர் சிரமத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்பதையே  உணர்த்துகிறது. அவர் நல்லபடியாக மீண்டு வந்து சித்தர் நூல்களை தமிழாக்கம் செய்ய பணிக்குமாறு இறைவனிடமும், சித்தர்களிடமும் உருகி வேண்டுகிறேன். ஒரே நேரத்தில் பெற்றோர் இழப்பு, விபத்து,  சாதித்த பெண்மணிக்கு வந்த சோதனைகள் அளவுகடந்தவை. இறைவா கண் திறந்து   பாராய்..

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...