???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-19 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   19 , 2018  07:43:18 IST

மிளகிற்காகவே இந்த தேசம் அடிமைப்பட்டது. மிளகாயை நமது தமிழர் உணவில் சேர்த்தும் விட்டது. பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் வரை தமிழர்கள் உணவில் கார்ப்பு (கார) சுவைக்கு மிளகைப் பயன்படுத்தினர். தற்போதைய மிளகாய் இத்தேசத்தில் போர்ச்சுகீசியர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிளகைப் போல உறைப்பு தன்மையுடன் விளங்கியதால் அந்த பயிருக்கு மிளகாய் என்கிற பெயர் வந்தது. ஆங்கிலத்திலும் கூட இன்று வரை  மிளகாயை, மிளகின் ஆங்கில பெயரான பெப்பர் என்றே அழைக்கின்றனர். பழந்தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்களில் மிளகும் ஒன்று. சங்க நூல்கள் மிளகினை கறி என்றே குறிப்பிடுகின்றன. உணவில் மிளகு அதிகமாய் சேர்க்கப்பட்டதால் பின்னாளில் தாவர உணவும், இறைச்சி உணவும் கறி என்கிற பெயரையே பெற்றது. மூட்டை மூட்டையாக தங்கத்தை கொடுத்து மிளகை வாங்கிப் போனதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று மிளகின் மதிப்பை உணர்த்துவதாக தோழி குறிப்பிடுகிறார். 

 

                                யவனர் தந்த வினைமாண் நன்கலம் 

                                பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 

                                வளங்கெழு முசிறி 

பொதுவாக உணவில் உள்ள நச்சு தன்மையையும், உடலில் உண்டாகும் நச்சுத்தன்மையை முறிக்க பயன்படும் அருமருந்து மிளகு. இதைதான் நம் முன்னோர்கள் ‘பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றனர். இன்றும் கொல்லிமலையில் வாழும் மலையாளிகள், மிளகையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். நமது முன்னோர்களின் வாழ்வில் திரிகடுகம் இரண்டற கலந்துள்ளதையும் நான் அறிவேன். கால ஓட்டத்தில் நாம் மறந்து விட்ட மேலான அடையாளங்களில் இதுவும் ஒன்று. திரிகடுகம் உடலையும் உயிரையும் காக்கும் எளிய அருமருந்து. திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. சுக்கு, மிளகு, திப்பிலி என்பவையே அந்த மூன்று மருந்துகள். சித்தர்களின் மருத்துவத்தில் சூரணம் என்பது ஒரு வகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்திய பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர்.  

அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில், 

                                தவறிப்போம் திரிகடுகு சூர ணத்தால்

                                தருவான மந்தமுடங்க ழிச்சல் தீரும் 

                                தவறிப்போந் தேனிலே கொண்டா யானால் 

                                தருகாது சந்நிசீத ளங்கள் தானுந் 

                                தவறிப்போம் பனைவெல்லங்கூட் டியேயுண்ண 

                                தன்மையுள்ள வயிற்றுநோய் தானே தீருந் 

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவில் எடுத்து செய்த சூரணத்தால் மாந்தம், கழிச்சல் தீரும்.  தேன் கலந்து உண்டால் குளிரினால் உண்டாகும் நோய்கள் அணுகாது என்றும், இச்சூரணத்துடன் பனை வெல்லம் சேர்த்து உண்டால் வயிற்று நோய்கள் தீருமாம். அத்துடன் சகலநோய்களும் இச்சூரணத்தை உண்டால் அணுகாது என்றும் சொல்கிறார்.

 

 சமீபமாக ஓர் உறவினர் இறந்த பொழுது அத்தாயின் வயது 110 இருக்கும் என்றார்கள். அவரின் உணவுப் பழக்க முறையை கேட்டு வியந்தே போனேன். நான் மேலே கூறிய சுக்கு, மிளகு, திப்பிலியுடன், பனங்கருப்பட்டி சேர்த்து எல்லா வகையான உணவு பொருட்களுடன் சேர்த்து உண்டு வந்துள்ளார். அசைவத்துடனும் கூட இதை சேர்;த்தே உண்டு வந்துள்ளார் என்றும் தெரிய வந்தது. அவர் இறந்த அன்று பௌர்ணமி தினமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இறைவன் அழைத்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில், அத்தாய் பௌர்ணமியில் உயிர் பிரிந்தது, ஓர் முக்தியடைந்த நிலையாகவே நான் கருதினேன். மறுபிறப்பு இல்லை என்பதும், இறைவன் பாதம் அடையும் நிலையும், சித்த வழிபாட்டில் உள்ளவர்கள் அறிவர். ஆனால் ஓர் கிராமத்து தாய் எவ்வாறு இந்த சித்த காய கற்பத்தை அறிந்தார் என்பது இன்று வரை நான் யோசித்து கொண்டே இருக்கிறேன். இன்று இதை எழுதும் நேரம், அத்தாயின் ஆசீர்வாதம் எனக்கும் கிடைக்குமென்றே நம்புகிறேன். இந்த ஆசீர்வாதம் எத்தனை பேரை வாழவைத்திருக்கிறது. கண்ணதாசனுக்கு கிடைத்த ஆசி, நமக்கும் கிடைக்கும் படி அவன் எழுதிய இந்த பாடலை மனமுருக நீங்கள் கேட்கும் பொழுது ஆதிபராசக்தியே அப்பனுடன் வந்து உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுப்பாள் என்று நம்புவோமாக. நம்பிக்கையை இறைவன் மீது விதைத்து, இங்கு வாழும் வாழ்க்கையை அவர்பால் கொண்ட அன்பால் தமிழ்பால் கொண்டு வாழ்ந்தால் என்றுமே நமக்கு முக்தி தான். இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு பிறவியில் உண்டென்று அறிய எனது ஜாதகமே ஓர் உதாரணம். நான் மேலே கூறிய தாயின் ஜாதகம் பரிபூரண உதாரணம். இதோ நம்தாய் ஆதிபராசக்தி படத்திலிருந்து,

 

                தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி   

                தனிகருணை தமிழ்ப்பால் கொடுத்தான் தமிழ்முருகன் 

                வாய்பாடலால் பாடும் பழந்தமிழ் 

                பாடத் தொடங்குகிறேன் ஆடும் மயில் வேலன் அருள் 

                தந்தைக்கு மந்திரத்தை சாற்றி பொருள் உரைத்த 

                உந்துதமிழ் சக்திமகன் முருகன் வந்தான் 

                பல்முளைக்கும் முன்னே எனக்கு கவிதை தந்தான் 

                கந்தன் வந்தான் கவிதை தந்தான்.  

 

ஆதிசக்தி நாயகியின், பாதிசக்தியானவர் தான், மீதி கண்ணிலே பிறந்த முருகன் வந்தான். கலைஞான கண் திறந்து வைத்து தமிழும் தந்தான். 

 

                ஆங்கார சக்தியென்னும் ஓம் கார தாமரைக்குள் 

                ரீங்கார செய்யும் வண்டு கந்தன் வந்தான் 

                என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான் 

                வந்த கலி தீர்ந்ததென்று, கந்தன் களி பாடவந்தேன் 

                சந்தமுள்ள நூறு கவி சரணம் தந்தேன்

                அந்த கந்தனவன் தனது திருசரணம் தந்தான் 

-              கண்ணதாசன். 

 

தமிழ்ப்பாலால் பிறந்து, தாய்பாலால் வளர்ந்து, ஓம் கார தன்மையில் நினைந்து, முக்தியென்னும் திருசரணம் தந்தான் எம்முருகன் என்ற பேரின்ப நிலையை அடைவதற்கு தமிழை தவிர வேறு மொழியில்லை. தாய்ப்பால் முருகனுக்கு கொடுத்த இடமாக தோரணக்கல், கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

 

இன்றளவும் சித்த நிலை தேடும் சாதுக்கள், மற்றைய சித்த ஞானிகள் இங்கு சென்று திருநீர் கொண்டு வருகிறார்கள். அதை வெட்டி எடுத்து வருகிறார்கள். முடிந்தவரை பக்தர்களுக்கு அதை விபூதியாக கொடுக்கிறார்கள். அதை சிறிது உண்ணவும் சொல்கிறார்கள். அதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பிற நோய்களும் தீர்வதாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை, நான் உண்டு பார்த்து முடிவெடுப்பவன் என்ற நிலையில், அது உண்மையில் பராசக்தி கொடுத்த தாய்ப்பாலாகத்தான் இருக்க வேண்டும். இதனை நம்பிக்கையுடன் எடுத்து வருதலும், மன அழுத்தம் தீர ஓர் வழிமுறையே. பிறப்பு முதல் இறப்பு வரை அறிந்து, அதனை தாண்டி முக்தி என்ற நிலை அடைய இன்றைய ஓர் உச்ச திரைப்பட நட்சத்திரம் இமயமலை செல்வதும் எல்லோரும் அறிவோம். கர்நாடக மாநிலம் என்றதும், சித்த நிலை முக்தி என்றதும், அவரை ஒதுக்கி விட்டு, என்னால் உதாரணம் காட்டமுடியவில்லை.

 

ரஜினிகாந்திடம் நீங்கள் மிக எளிமையாக வாழ்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில், சொகுசு பிரயாண வாழ்க்கையும், விலையுயர்ந்த ஐந்து, ஏழு மாடி உணவகங்களில் தான் உண்கிறேன். இதில் என்ன எளிமை இருக்கிறது என்று திருப்பி அவர் கேள்வி கேட்டார். பின்னர் அவர் இமயமலையில் தரையில் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை காண்பித்த பிறகு, அவர் சிரிக்கத்தான் முடிந்தது.

 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...