???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-18 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   12 , 2018  01:53:08 IST

சிரிப்பதும், அழுவதும் நமக்கு இட்ட கட்டளை ஒன்றே ஒன்று தான், புத்திகெடாமல் இருப்பது. பாதி மனதில் தெய்வம், மீதி மனதில் மிருகமே உருமாறி கருமாறி, தடுமாறி கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்ற மன அழுத்த பிறழ்வுகளை ரசித்த நம் மனம், கண்ணதாசனின் வரியே என்று நாம் அறிவோமா? இப்பொழுது அறிவோம். 

               

        சட்டி சுட்டதடா கைவிட்டதா, புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா 

                நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்தடா 

                பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்து கொண்டதடா 

                 மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா 

                ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா 

               அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா 

               -    ஆலயமணி 

 

புத்திக்கு காரகன் புதன், மனதிற்கு காரகன் யாவரும் அறிவோம் நம் நிலாவென்று. ஜாதகத்தில் சந்திரனுக்கும், புதனுக்கும் ஓர் உறவு உண்டு. அது தாய் மகன் என்ற உறவு. தாய் என்ற மனதிலிருந்து, மகன் என்ற புத்தி பிறக்கிறது. அந்த பிறப்பின் உறவு முறை, மனஅழுத்த நிலைகளில் மாறுபடும் என்பதை விஞ்ஞானம் ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும். அதுவே கண்ணதாசன் மெய்ஞான வரிகளில், யானை விழிகளின் கண்ணீர் கொண்டு, நிலா மணி ஓசை கொண்டு, உள்ளம் உருகிட ஞானம் கண்டு, வாழ விரும்பும் அன்பு உள்ளங்கள் வாழ்க. 

               

            சட்டி சுட்டதடா கைவிட்டதடா, புத்திகெட்டதடா, நெஞ்சை தொட்டதடா 

                எறும்பு தோலை உரித்து பார்க்க யானை வந்ததடா

                நான் இதயதோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா

                பிறக்கும் முன்னே இருந்த உள்ளம், இன்று வந்ததடா 

                இறந்து பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா 

-              கண்ணதாசன் 

 

சோதிடத்தில் சந்திரனின் கள்ளதொடர்பில் உருவானவனாக தான் புதன் உள்ளான் என்பதால், புதன் அதாவது புத்திகாரகன், மனதை விரோதியாகதான் பாவிக்கிறான். மனதில் இருந்து எழும்பும் புத்தி அலைகள், மனதிற்கே அடங்காமல் போவதின் பரிணாம வளர்ச்சியே மன அழுத்தம். மனதே அடங்கா இவ்வுலகில் புத்தியும் சேர்;ந்து அடங்கவில்லை என்றால், மனநிலை பிறழ்வுகள் பிரசவிக்கும். இன்று பிறக்கும் மகன்களால் தான் பல பெற்றோருக்கு மன அழுத்தம், கவலைகள் கல்வெட்டு போல், மன வரலாற்றை தாங்கும் சாட்சியங்களாக இருக்கின்றன. இதற்கான மருத்துவ முறைகள் இன்று பணம் கொழிக்கும் துறைகளாக தான் உள்ளது. என்னுடைய ஒரே கணிப்பு, கண்ணதாசனின் மன தத்துவ பாடல்களை நீங்கள் மனனம் செய்து விட்டாலே, உங்கள் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் குடிகொண்டு விடும், என்பதற்கு தாய் தந்தை, மகன் உறவிற்கான, (அதாவது சந்திரன், சூரியன், புதன்) பிறந்த பாடலை படித்து கேட்டு உணர்வோம்.

               

              ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ  

                இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலர் இருக்க

                இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே 

                நான் பிறந்த காரணத்தை நானே அறியமுன்னே 

                நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே 

                கைகால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் 

                காதல் மணம் விளங்க வந்தாள் அன்னையடா 

                காதலிலும் பெருமையில்லை கண்களுக்கும் இன்பமில்லை 

                கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா 

                நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை  

                தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே            

                  - பாகப்பிரிவினை படத்தில் கண்ணதாசன் தந்தது

 

மாரடைப்பிற்கான மருத்துவ முறையை காண்பதற்கு முன், அதற்கான ஜாதக விளக்கத்தை உணர்ந்து கொள்வதும், வரும் முன் காப்போம் என்ற விதியமைப்பில் உங்களுக்கு பயன்பட்டால், இக்கலை உணர்தலும் ஓர் சித்த மருத்துவ முறையே. திடீரென்று வரும் மாரடைப்பு, இதயம் சம்பந்தப்பட்ட சூரியன் வலுவாக சுபத்துவமாக இருக்கும் ஜாதகங்களில் வருவதில்லை. சூரியன் பாபத்துவமாக, பலவீனமாக உள்ள ஜாதகங்களில் இதயநோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அதேபோல் ஆறாம் பாவாதிபதி பாவத்துவமாக, பலவீனமாக உள்ள நிலையில் அதன் தசை நடக்கும் போது நோயின் தாக்குதலுக்கு ஜாதகர் உள்ளாகிறார். மருத்தவ ஜோதிடம் என்ற ஆராய்ச்சி, இன்று இளைய மருத்துவர்கள் ஆராய தொடங்கியுள்ளது, வரவேற்க வேண்டிய அமைப்புகள். இருதயநோய் வருவதற்கு முதன்மையான கிரகம் சூரியன், அதே நிலையில் ஆறாம் பாவம் எவ்வாறு உள்ளது என்பதையும் கணிக்க வேண்டும். அதன்படி ஓர் நோய் குணமாகும் (அ) குணமாகாதா என்பதை 6, 8, 11ம் பாவங்களின் வலிமையும், அந்த பாவகாபதி வலிமையும், லக்னாதிபதி வலிமையும், சூரியனின் தன்மையும் கொண்டு அறியலாம். உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னம் என்றால், 6ம் பாவாதிபதி சனி ஆவார். சிம்ம லக்னஅதிபதி சூரியனுக்கும், சனிக்கும் எப்போதுமே ஆகாத ஓர் நிலையில், லக்னாதிபதி சூரியன் பலவீனமாகி (அ) 6ம் வீட்டோட்டு சூரியன் சம்பந்தப்பட்ட நிலையில், சனியன் வீடுகளில் அமர்ந்த நிலையில், சனி திசை, புத்தி நடைபெறுமாயின், மாரடைப்பு வருவதற்கான அமைப்புள்ளது. நான் அறிந்த வரை, எந்த ஒரு தவறான பழக்க வழக்கங்கள் இல்லாமல், முறையான உடற்பயிற்சி செய்வதர்களுக்கே, இளமையிலேயே மாரடைப்பு வந்து தவறியிருக்கிறார்கள். எல்லா வகையான பழக்கத்தையும் கொண்டு, முறையற்ற வழியில் வாழ்ந்தவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். யாருக்கு எது வராது என்று நினைப்போமோ, அது அவர்களுக்கு வரும் என்பதே வாழ்க்கை தத்துவமாகிவிட்ட நிலையில், நாமும் வரும் முன் காப்போம் என்ற தமிழனின் சித்த மருத்துவ அறிவை உணர்ந்து செயல்பட வேண்டிய உலகத்தில் உள்ளோம். உடற்தகுதி முற்றிலும் நல்ல நிலையில் உள்ள ஒருவனுக்கு மாரடைப்பு வருகிறதென்றால், அது மன அழுத்தம், மற்றும் மரபு தன்மை என்று விஞ்ஞானம் கூறினாலும், அதை விதியென்றே நான் கொள்வேன் மெய் ஞான் வழியில். பொதுவாக இதயத்தில் நோய் வரக்கூடாமல் இருக்க, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் வராமல் இருக்க வேண்டும், அதற்கான சித்தர்கள் அருளிய மருத்துவ தன்மையை அறிவோம். 

                               

                                காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு  

                                மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் 

                                கோலை ஊன்றி குறுகி நடப்பவன் 

                                கோலை வீசி குலுக்கி நடப்பனே 

                                           -  தேரையர் 

 

இதயநோய் வருவதற்க்கு முன் காக்கும் தன்மையும், வந்த பின்னர் இதயநாள அடைப்பை சரி செய்யும் பண்பும் கொண்ட எங்கள் சித்த அறிவு இதோ, முற்றிய இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, ஒரு அங்குல நீளம் எடுத்து, பொடியாக்கி நறுக்கி கொண்டு, நாட்டு பூண்டு நான்கு பல், தோலை நீக்கி பொடியாக்கி, நான்கு மிளகு மற்றும் ஒன்பது துளசி இலை சேர்த்து அதனுடன் முப்பது மில்லி தண்ணீர் அல்லது பசும்பால் கொண்டு, வேக வைத்து, அந்த பானத்தை, இரவு உணவு உட்கொண்ட பின்னர் அருந்தி வந்தால் இதயம் வலுப்பெறும். 

 

                                ஓதமெனும் நீரிழிவை ஓட்டும் காண் 

                                பிறமேகம் காதவழியோட கடத்தும் காண் 

                                போதமயக்கம் வரும் வாதத்தின் 

                                தயக்கம் சுறுக்கும் மருதந்தார். 

 

மருதமரப்பட்டையை பயன்படுத்துவதால் இதயத்தை வலுப்பெற செய்யலாம். மருதமரபட்டை நீரிழிவையும், இரத்த அழுத்தத்தையும் சீராக்கும் பண்பு கொண்டது. மருத மரத்தின் தன்மையையும், மருது சகோதரர்களின் வீரத்தையம், அதை உணர்த்தும் ‘சிவகங்கை சீமையிலே” என்ற கண்ணதாசனின் காவியத்தை கண்டால், விடுதலைக்கான வீர விதையும், மருதமர வரலாற்று வழிமுறையும், அதன் மகத்துவ காளையர் தோள் வலிமைக்கு உவமையும் அறிவோம். எத்தனை விலை கொடுத்து             இந்த சுதந்திரம் கிடைத்ததில் மருத என்ற சொல்லுக்கும் இடமுண்டு. டெர்மினேலியா அர்ஜுனா என்பது உலகம் ஒப்புகொண்ட மருதமர பெயர். இதில் அர்ஜுனா என்ற வட சொல் வந்து விழுந்தாலும், ஆயுர்வேத முறையில் அர்ஜுனா மரம் என்றே அழைக்கின்றனர். அர்ஜுனனின், இதய மற்றும் தோள் வலிமை எவரும் அறிவோம். அப்படியென்றால் நமது மருதமரத்தின் ஆற்றல் அலைவரிசை, அதன் நிழல் தரும் குளிர்ச்சி. போற்றி நாம் வணங்க வேண்டிய அதன் வரலாற்று சிறப்புகள், மருத்துவ பண்புகள் தாண்டி, சித்தர்கள் இம்மரத்தை சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு வழிப்பட வேண்டிய மரமாக அருளியுள்ளார்கள்.

இப்போது மருத்துவ தன்மையை அறிவோம்.

மருதமரத்தின் பட்டையை இடித்து சலித்து, சூரணமாக்கி கொண்டு, ஒரு தேக்கரண்டி காலை, மாலை என்று இருவேளை உண்டு வந்தால் இதயம் வலுப்படும். விடுதலை வீரத்திற்கு தோள் கொடுத்த மருத மரம், மனிதனின் தோள் வலிமைக்கும் பயன்படுகிறது, இந்த மனிதனாகபட்டவன் எதற்கு பயன்படுகிறான், எல்லா மரங்களையும் வனங்களையும் அழிக்க தளைப்படுகிறான். ஒவ்வொரு மரத்தையும் அழிப்பது, தன் தலையை தானே சீவிக் கொள்வது போலத்தான். வளர்ச்சி என்ற பெயரில், வனமில்லா உலகம் உருவாக்கப்பட்டதால், இன்று வாழும் ஒவ்வொருவரும் ஒரு விதமான நோயை கொண்டுள்ளோம். சிறிதாக மார்புவலி வந்தால், உடனே மருத்துவரிடம் சென்று, எல்லா வகையான பரிசோதனைகளையும் செய்து, பல ஆயிரம் ரூபாய் செலவளித்து பின்பு, ஒன்றுமில்லை நன்றாக தான் உள்ளீர்கள், சிறிதாக இரைப்பை புண் இருக்கலாம் என்று கூறும் அறிவியல், தனக்கு மார்பு வலியே வராது என்ற நம்பிக்கையை எவ்வாறு புகட்டும், அப்படியே வந்தாலும் அது மாரடைப்பு இல்லை என்ற நம்பிக்கையையும் எவ்வாறு கொடுக்கும். இந்த இரண்டு வரிகளின் தத்துவத்தை அறிவதற்கு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் கொடுத்த மருத்துவ தத்துவம், இந்த மனித இனத்துக்கே நம்பிக்கையை கொடுக்கும். இதில் மருதமரம் போல, மிளகும் வரலாற்று விடுதலையில் பங்கு வகிக்கிறது.

 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...