???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-17 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  05:01:22 IST

ஒரு மனிதனின் அதிகபட்ச அழுத்தம், அவன் செய்யும் தொழிலால் வரும் வினையான கடனே. நாம் என்ன கடன் பட்டோமோ, சித்தர்கள் இந்த குருதி அழுத்தம் சீராக மருந்துகள் பலவற்றை அருளியுள்ளனர். இவை அனைத்தும் எளிமையானதும், செலவு குறைந்ததும் பக்க விளைவுகள் அற்றது என்பது தான் சிறப்பு. 

 

சர்பகந்த செடியின் வேரை சூரணமாக செய்து உண்டு வந்தால் குருதி அழுத்தம் குணமாகும் என்று தேரையர் உரைக்கிறார். 

 

வெண்தாமரைப் பூவை பொடிபொடியாக நறுக்கி சட்டியில் இட்டு, அரை லிட்டர் தண்ணீர் விட்டு நாலில் ஒன்றாக காய்ச்சி, தேன் கலந்து காலையும் மாலையும் அருந்திவர இரத்தக் கொதிப்பு குணமாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர். மேலும் அவர் முளைக் கீரையை சாப்பிட்டு வந்தாலும் குருதி அழுத்தம் குணமாகும் என்கிறார். 

   

உணவே மருந்தென்னும் உயர்நிலை கருத்துள்ள தமிழர்கள் நாம், இவையனைத்தையும் ஆரம்ப பாட கல்வி திட்டத்திலேயே சேர்த்திருந்தால், நம் தலைமுறையே இன்று உலக முதலாளி ஆகியிருக்கலாம், தற்சார்ப்பு பொருளாதாரத்தை இனிமேலாவது நாம் யோசிப்போமாக. ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தொழிலின் மரபணு ரகசியங்களை அறிந்தவர்களே, ஆனால் நாம் வேலைக்கு செல்வது தான் சரி என்று பெற்றோர்கள் வாக்களித்து விட்டனர். இனிவரும் காலம் மாறும், கனவை நினைவாக்கும் காலமும் வரும், பார்ப்போம்.  

 

இதய நாடி நொறுங்கி போகும் அனைத்து சம்பவங்களும், அரை நொடியில் மறந்து விட்டு அடுத்த நுகர்வுக்கு ஆயத்தமாகும் மனித இனம், மனித இதயத்தை வலுப்படுத்த முறையான வழிமுறைகளை அறியவில்லை. மாரடைப்பு இன்றைய நிலையில், அறிவியல் சொல்லும் காரணிகள் பலவுண்டு, முக்கியமாக இதயத்தில் பின்னியிருக்கும் மெல்லிய குருதி நாளங்களில் கொழுப்பு திசுக்கள் படர்வதால் ரத்த ஓட்டம் தடைபடும். இதுவே மாரடைப்பாகிறது. இது தவிர இதயம் சுருங்கி விரிவதில் ஏற்படும் குறைபாடுகளும் உண்டு. பரம்பரை மரபு தன்மைகள், உயர் குருதி அழுத்தம், அதிக மன உளைச்சல், பருமனான உடல்வாகு, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையே இதயத்திற்கு பாதிப்பினை உண்டாக்கும் முக்கிய காரணிகள். மது, புகை இரண்டையும் நீங்கள் விட்டு விடலாம். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் மன உளைச்சலை எவ்வாறு தவிர்ப்பது. இந்த உலகத்தின் ஆணி வேரையே அசைத்து பார்க்கும் மன அழுத்தம், ஓர் குடும்பத்தில் ஏழரை சனியுடனும், அஷ்டம சனியுடனும் வந்து விட்டால் என்ன ஆட்டம் ஆடும், அடுத்த நிலையில், நீங்கள் உங்களையே அறியா ஓர் பைத்தியம் தான். மன அழுத்தத்தை தவிர்க்க எத்தனையோ கண்ணதாசன் பாடல்கள் உண்டு. அதுபோல் சங்க இலக்கிய தமிழ் விளையாட்டும் உண்டு. ஆனால் நம் தகுதிக்கு மீறிய ஆசையும், தேவைகளும், வேலைகளும் மற்றொரு உலகத்தை பரிணமிக்கின்றன. அந்த மன அழுத்த உலகத்தில் நீங்களே அரசனாகவும், மந்திரியாகவும், சேவகனாகவும் இருந்து கொண்டு, உங்களுக்கு நீங்களே உத்தரவு கொடுப்பவனாகவும், அதற்கு பணியாற்றுவதும் நீங்களாகவே மாறிவிடும், அபாய உலகத்தில் இருக்கிறார்கள் இளைய தலைமுறை. மனிதனின் உடல்நிலை மாற்றங்களில், பெரும்பான்மையான பாதிப்புகளில் ஆரம்ப புள்ளி இந்த மன அழுத்தம் தான். இவற்றிற்கான தீர்வுகளை சித்தர்கள் பலவாறாக கூறியிருக்கின்றனர். மன அழுத்தம் அகல அகத்தியர் அருளிய ஓர் எளிய முறை பார்ப்போம். 

          

கேளப்பா மௌன நிலை கொண்டுமே தான்  

           கவனமுடன் ‘ஓம்ஹ்ரீம்” என்று

           தாளப்பா ஓது ஓது மனமது அடங்கும் 

           கவலைகள் நீங்கும் மிக்கான சத்துருக்கள்  

           துன்பமுடன் மனக் கிலேசம் தீர்ந்துமே 

           அவனியில் நீயுமொரு சாந்தனாச்சே 

                                                                                                        -     அகத்தியர்

 

தனிமையான ஓர் இடத்தில் மௌனமாக இருந்து ‘ஓம் ஹ்ரீம் ” என்று தொடர்ந்து கூறி வர மனது அடங்கி மனக்கவலைகள் தீரும். எதிரிகளால் உண்டான துன்பம் மறைந்து மனக்குழப்பங்கள், மன அழுத்தங்கள் நீங்கி இந்த உலகில் நீயும் ஒரு சாந்த குணமுள்ளவன் ஆகலாம் என்கிறார் அகத்தியர். 

 

நான் முன்னரே அறிமுகப்படுத்திய தோழி அவர்களின் கூற்றுப்படி, சித்தர்கள் அருளிச் சென்ற பாடல்களில் பொதிந்திருக்கும் தகவல்கள், காலங்கள் பல கடந்தாலும் இன்றைக்கும் நமக்குத் தேவையான தீர்வுகளை தரவல்ல அறிவு களஞ்சியம். இந்த நூல்களை அகழ்ந்தாய்ந்து அனைவருமே பயன்படுத்திக் கொள்ள தக்க, தேவையான விழிப்புணர்வோ இல்லாமல் போனது வருந்ததக்க விதியமைப்புகள். மன அழுத்த உறவு முறைகளில் சிரிப்பவனும் உண்டு, அழுபவனும் உண்டு, சிரித்து கொண்டே அழுபவனும் உண்டு. கால ஓட்டத்தில் நமது முன்னோர்களின் திறமையை, ஞானத்தை நாம் அவ்வளவாக உணர்வதில்லை. பணத்தை மட்டுமே மையமாய் வைத்து வாழும் நிர்பந்தத்தில், மனிதனின் உணர்வுகள் எண்ணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்ட நிலையில், மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை முதல் பட்சமாகி விட்டது. போட்டியும் பொறாமையும் கொண்ட இயந்திர வாழ்க்கையில், நாம் வியந்து பார்க்கும் மேலை நாட்டு நாகரீகமும், எழுப்பிய விஞ்ஞானம், வியந்து பார்க்கும் கட்டிடங்களும், இந்த பிரபஞ்சத்திற்கு முன், சித்தர்களின் மருத்துவ அறிவுக்கு முன் அணுவின் அளவு கூட கிடையாது. அணு அளவு கூட இல்லாதவற்றை அணுவாக்கி, ஆற்றலாக்கி, அது தரும் சித்த மந்திரத்தை, மருத்துவமாக, பாரம்பரிய மருத்துவமாக சீனாவில் இன்னும் வாழ்கிறது. ஆனால் அழகு தமிழில் அரிய தீர்வுகள் ஆயிரம் இருந்தும் அதை பயன்படுத்தாத பெருமை நமக்கு தான் உண்டு. சித்தர்களின் சோதிடரீதியான மந்திரங்களை நமது ஜாதகப்படி உணர்ந்து உச்சரித்து வர, உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் ஓர் தகவல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டே வரும். பிரபந்தமும் ஒரு கட்டத்தில் உங்களிடம் பேச ஆரம்பித்து, உள்ளவற்றை உணர்த்தும். அன்றே நீங்கள் கடவுளை உணர்ந்த நாளாகும். கடவுளை காண முடியாதற்கான பல முக்கிய காரணிகளில், முழு முதல் காரணி மன அழுத்தம் தான். தவிர கவலை, போட்டி, பொறாமை, வஞ்சம், ஏளனம், புரளி பேசுதல், பணமுள்ளவனை மதித்தல், கொலை புரிதல், தற்கொலை அடைதல், பிறர்மனை நினைத்தல், மண், பொன், மாது மூன்றிலும் பேராசை, மன நல பாதிப்பு, மாமிசம் மட்டுமே புசித்தல், புகை மது என புரையோடி போன சமுதாயத்தில், கடவுளை காண என்ன வழியுண்டு. எனது மதுவின் தாகத்தையும் யாரும் தீர்க்க முடியவில்லை என்பதே உண்மையென்றும் உண்மையின் வரவில் கடவுளை கண்ட கண்ணதாசன் வரிகளில் இருந்து, தெய்வீகம் பாதி மனதில் குடியிருப்பதால் என்னால் எழுத முடிகிறது. கண்ணதாசன் அருளிய மனஅழுத்தத்தை தீர்க்கும் ஒரிரு பாடல்களை கேட்டுவிட்டு அடுத்த நிலைக்கு செல்வோம். சில நிலைகளில் அழுதால் தான் நிம்மதி, பேச மறந்து சிலையாய் நின்றால் அது தான் தெய்வத்தின் சன்னதி. 

    

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் 

            நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் 

      சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் 

            நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் 

      பாசம் நெஞ்சில் மோதும், அந்த பாதையை பேதங்கள் மூடும் 

      உறவை எண்ணி சிரிக்கின்றேன், உரிமையில்லாமல் அழுகின்றேன் 

------

      கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம்

      கருணை மறந்தே வாழ்கின்றார். கடவுளை தேடி அலைகின்றார்

      காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும் 

      வருவதை எண்ணி சிரிக்கின்றேன, வந்ததை எண்ணி அழுகின்றேன் 

                                              - பாவ மன்னிப்பு படத்திற்காக

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...