???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-16 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   29 , 2018  08:19:07 IST

 

கண்ணதாசன்  :        நான் கண்ட பெண்களுக்கு கூந்தலில் இயற்கையிலேயே     மணம் உண்டு. (இதை சொல்லும் தகுதி அநேகமாக கண்ணதாசனுக்கும், அருணகிரிநாதருக்குமே உண்டென்று நினைக்கிறேன்) பட்டிமன்ற நடுவராக   இருந்து சிவன் பக்கம் தீர்ப்பை வழங்கியிருக்கிறான். இதிலிருந்து நாம் விளையாட்டுக்காகவாவது, மரபணுக்களின் தொடர்ச்சி, கடவுளையும் கேள்வி                கேட்கும் உரிமை. ஓர்  தமிழ் புலவரின் ஆளுமை. ஓர் ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் பெண்களே காரணம். செண்பகபாண்டியன் அவன் தலைவியின் கூந்தலில்             உள்ள மணம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருந்திருந்தால், இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பிறகு, இதை நான் எழுத நேராத நேரம் என்று ஒன்று இருந்த இந்த நூற்றாண்டில், பகுத்தறிவு கொள்கையின் திருவிளையாடலால், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமந்திரத்தின் வாக்கை, வாழ்க்கை வாழ்ந்து இறப்பிலும் யாவரும் தொடர முடியாது என்ற நிலையில் தான் நாம் உள்ளோம் என்பதை நாம் அறிவோமாக.

 

நக்கீரர்:             சங்கறுப்பது எங்கள் குலம்  

                                சங்கரனார்க்கு (சிவனுக்கு) ஏது குலம் 

                ஓர் பெண்ணின் கூந்தல், குலத்தில் முடிந்து,  தமிழ் சங்கம் தலைமுழுகிய தமிழ் சங்க கடல் வற்றி குளமான கதை தான் இங்கே சாதி பேத வேற்றுமைகளால் குளத்தின் கதை இது. 

 

கண்ணதாசன் தமிழுக்கும், தமிழ் கலாச்சார பெருமைக்கும், கூந்தலில் தாழையாம் பூ தமிழ் பெண்களுக்கு முடித்து, தரணி போற்றும் தமிழர் தன்மானத்தையும், தார்மீக அடிப்படையில் நம் வாழ்வியல் முறையையும் கொடுத்ததை, நாம் கொஞ்சமாவது கொஞ்சுவதை அவன் ஆத்மா  ரசிக்கட்டும்.  ஒருவேளை அவன் மறுபடி பிறந்திருந்தால், வருங்கால தமிழ் அவனை வணங்கட்டும்

                                தாழையாம் பூமுடிச்சி தடம் பாத்து நடை நடந்து  

                                வாழை இலை போல வந்த பொன்னம்மா   

                                என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா 

                                பாலை போல் சிரிப்பிருக்கு, பக்குவமாய் குணமிருக்கு 

                                ஆள் அழகும் சேர்ந்திருக்கு கண்ணையா 

                                இந்த ஏழைகளுக்கு என்ன வேண்டும் சொல்லய்யா

                                ------- 

                                தாயாரின் சீதனமும், தம்பி மார் பெரும் பொருளும் 

                                மாமியார் வீடு வந்தால் போதுமா 

                                அது மானாதி மானங்களை காக்குமா 

                                --------   

 

                                எங்கள் நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே

                                அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை 

                                மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா 

                                வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா 

                                மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்து படர்வதில்லை

                                கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா 

                                கண்ணிலே களங்கமுண்டோ சொல்லைய்யா 

                                                                                                                          -    கண்ணதாசன் 

பெண்கள் பூ என்றாகி பூப்படைதல் வரை, மலர்ந்தும் மலராத பாதி மலர் என்ற நிலையில், பூப்படைதல் என்ற ஒன்று தள்ளிப்போனால், அல்லோபதி மருத்துவத்தில் நிறைய பலன் தரும் மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகளும் உண்டு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி பூப்பெய்துதல் தள்ளிப்போனால் அந்த பெண்ணும், அவளது பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகியே தீர வேண்டும். மலர்ந்து மலராத பருவ தன்மை, தமிழுக்கும் உண்டென்று பாடிவைத்த கண்ணதாசனை கண்டு விட்டு, அகத்தியர்  மூலம் மலர்ந்த மருத்துவ முறையை நாம் கண்டு மகிழ்வோம்.

 

மலர்ந்து மலராத பாதி மலர்  போல வளரும் விழிவண்ணமே - வந்து  

விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே 

நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே 

வளர் பொதிகை மலைதோன்றி, மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ்மன்றமே 

 

கண்ணீர் எழுத்துகளாகி, கண்ணதாசனின் கண்களில் உருக்கெடுத்து, உனக்காக தமிழ் உறவுகளை தந்திருக்கும் இப்பாடலின் மகத்துவம், உறவிற்கான மருத்துவம் தலைமுறை உள்ள வரை வாழ்வாங்கு வாழட்டும். 

 

                யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளபிறந்தாயடா 

                அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழிக் கண்டு 

                வாழப்பிறந்தாயடா 

                -------- 

                மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலைப் பேசுவார்.  

             சிறகில் எனைமூடி, அருமை மகள்போல வளர்த்த  கதை சொல்லவா                              

 

பாசமலர் படத்தில்  பாருங்கள் புரியும் உறவுகளை பற்றி….

                                                                                                .  

இந்த மண்ணும் கடல் வானம் மறைந்து முடிந்தாலும்

                                மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

அன்பே ஆரிரா ரிரோ......................

பூப்படைந்து, மணமாகி, அவர்களின் குழந்தைகளின் உறவு நிலை வரை பாடலாய் கேட்டு விட்டோம். இப்போது அகத்தியர் கூறிய மருத்துவ முறையை காண்போம். முதல் முறையாக மாதவிலக்கு (அ) பூப்பெய்துதல் சில பெண்களுக்கு தள்ளிப் போகலாம். 

                                போமப்பா யின்னமொரு புதுமை கேளு

                                பெண்களிலே புத்தியறியா திருந்தால் 

                                நாமப்பா சொல்லுகிறோங் காரணந்தன்னை 

                                நாட்டமுடன் வித்துநீர் யிறக்கிக்கொண்டு 

                                ஓமப்பா பெருங்கால முரைத்துக் கொண்டால் 

                                உத்தமனே பெண்ருதுவாய் உண்மையாகும். 

-              அகத்தியர் பரிபூரணம்

பூப்படைதல் தாமதமாவதற்கு வித்துநீர் கீழிறங்கி கொண்டு, இருப்பதே காரணமாய் இருக்கும் என்கிறார். வித்து நீர் தற்போதைய அறிவியலின்படி ஹார்மோன் குளறுபடி என்று நினைக்க முடியும். இதற்கு பெருங்காயத்தை உரைத்து கொடுத்தால் இந்த குறைநீங்கி  பூப்படைதல் நிகழும் என்கிறார்.

குறிப்பிட்ட நாளில் நிகழாமை,   

மாதவிலக்கு பெண்களுக்கு உள்ள இன்றைய தலையாய பிரச்சனை. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனின் நிலை நன்றாக இருந்தால், மாத விலக்கு சுழற்சி தள்ளிப்போதல் நடவாது. விலக்கு காலங்களில் சரியான ஓய்வு இல்லாவிடில் மாதவிடாய் தடைப்படுதலும், மகப்பேறு காலங்களில் சுகப்பிரசவமின்மையும் உண்டாகும் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கான சிலதீர்வுகளையும் சித்தர்கள் அருளியிருக்கின்றனர்.

                மாத விலக்கு தடைப்படுதல் அல்லது தள்ளி போகுதல் போன்றவற்றிற்கு, மாவிலங்கம் பட்டை, உள்ளி, மிளகு, இவைகளை சம அளவு எடுத்து நன்கு அரைத்து தினமும் காலையில் ஒரு பாக்கு அளவு மூன்று நாள் சாப்பிட மாதவிடாய் உண்டாகும். 

- கொடிவேலி இலையைப் பசும்பாலில் வறுத்தெடுத்து அதனுடன் கொட்டைபாக்கு, குன்றிமணி இவற்றை சேர்த்தரைத்து புனைக்காய் அளவாக எடுத்து அதற்கு சமஅளவில் நாட்டு சர்க்கரை சோ;த்து மூன்று நாள் சாப்பிட மாதவிடாய் உண்டாகும்.

மாத விலக்கு நாட்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலி மற்றும் கூடுதல் உதிரப் போக்கினை கட்டுப்படுத்த ‘பிரண்டை உப்பை” ரெண்டு குன்றிமணியளவு எடுத்து வெண்ணையில் குழைத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ண குணமாகும். இதை மாதவிலக்கு உள்ள நாட்களில் தினமும் மூன்று வேளையும் உண்ணலாம் என்கிறார் அகத்தியா;.

மாத விலக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டு சங்கடங்களில் முதலாவது வலி என்றால், மற்றது அளவுக்கு மீறிய குருதிப்போக்கு. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்  ஒருவருக்கு மாதவிலக்கின் போது தினசரி 60 மில்லி முதல் 80 மில்லி லிட்டர் வரை மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். ஐந்து நாட்களையும் தாண்டி குருதிப்போக்கு நீடிப்பது சித்த மருத்துவத்தில் பெரும்பாடு என்கின்றனா;. 

ஒவ்வொருவரின் உடல் வாகு, குருதிப்போக்கின் தீவிரம், வலி பொருத்து சித்த மருந்துகளை முறையான சித்த மருத்துவரிடம் ஆலோசித்து, பின்வரும் மருத்துவ குறிப்பை உணா;ந்து செயல்பட்டால் பயன்பெறலாம். 

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி வந்து, தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி எடுத்து விட்டு, இடித்து சாறு பிழிந்து, வடிகட்டி, 4 கரண்டி அளவு சாறினை எடுத்து,  அதனுடன் ஆறு துளி சுத்தமான நல்லெண்ணையை விட்டு கலக்கி, குருதி வெளியான அன்றும், அதற்கு அடுத்த நாளும் காலையில் குடித்து விட வேண்டும். இதனால் வயிற்று வலி நின்று, அதிக அளவில் வெளியேறும் இரத்தமும் நின்று விடும்.  

- தும்பை இலையை சுத்தம் செய்து அதில் சாறுபிழிந்து, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறுவிட்டு, மூன்று அவுன்ஸ் அளவு நல்லெண்ணையை சேர்த்து, காலையில் மட்டும் மூன்று நாள் சாப்பிட, எத்தகைய குருதிப்போக்கும் குணமாகும். 

பருத்தியிலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, இடித்துச் சாறு பிழிந்து  (1 அவுன்ஸ்), அரைகரண்டி பசு வெண்ணெய் சோ;த்து, காலை மூன்று நாள் தொடா;ந்து சாப்பிட இரத்தப்போக்கு கட்டுப்பட்டு நிற்கும். 

இரத்தம் (குருதி) என்றதும், இன்றைக்கு இருக்கும் இரத்த அழுத்தம் எவ்வாறு ஒவ்வொரு மனிதனையும் பாதித்துள்ளது என்பதும், அதற்கான அல்லோபதி மருத்துவத்தன்மை, தினந்தோறும் உட்கொள்ள வேண்டிய நிலையும் ஞாபகம் பெறுகிறேன். மருந்துகளை உட்கொள்வது ஓரிரு நாள் தவறிவிட்டால் மூளையில் இரத்தகசிவாகி, பக்கவாதமும் வந்து விடும் நிலையில் எத்தனையோ போ;. இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் எத்தனையோ காரணங்களை அடுக்கி வைக்கிறது மருத்துவ உலகம். அதற்கான பக்க விளைவுகளையும் அனுபவித்து ஆக வேண்டிய கட்டாய நிலையில் மக்கள். இதயம் வலுவாய் வைத்திருக்க பல வைத்திய முறைகளையும், யோக முறைகளையும் அருளியிருக்கின்றனர் சித்தர்கள். பிரணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள், குண்டலினியை, உயர்த்துதல் போன்ற யோக முறைகள் இதயத்தை வலுவாக்கும். 

                                மருந்தும் பரங்கிப்பட்டை ஆறுபலம்  

                                குருத்தாள் வேருக் கூருங் கழற்சிக்காயும் 

                                பொறுத்த நன்னாரி  பூடும் நுணாவேரும் 

                                தீர்ந்து முழக்கு சேர இடித்திடவே 

                                இடித்து சூரணம் எழிலாய் வடி செய்து 

                                கடித்து சீனியில் கலந்து அருந்திடு 

                                வடித்து தேரையன் வாக்கு போய்யதீது 

                                நடித்த மார் நோய் நடுங்கியே ஓடுமே 

                                                                    -          தேரையர்

பரங்கிப்பட்டை ஆறுபலம், குருந்தன்வேர், கழற்சிக்காய், நன்னாரி, நுணா வேர், மிளகு இவற்றை நன்றாக இடித்து வடிகட்டி சீனியில் கலந்து உட்கொள்ள  மார்பு நோய் குணமாகும். இது தேரையன் வாக்கு பொய்யாகாது என்கிறார்; தேரையர். சுக்கு, பூண்டு எடுத்து சுட்டு பனைவெல்லம் சேர்த்து அரைத்து தொடர்ந்து உண்ண நெஞ்செரிவு உடனே தீரும் என்கிறார்;. இவை தவிர அதிக அளவில் சீத்தாப்பழம் உண்டு வந்தால் இருதயம் வலிமை மிக்கதாகும் என்றும் உரைக்கிறார்.  குருதியில் ஆரம்பித்து, குருதியை சுத்தம் செய்யும் கருவறையை அதாவது இதயத்தை வலுப்படுத்த தேரையார் அருளிய மருத்துவம் பார்த்தோம். இதற்கு முன்னா விளக்கப்பட்ட இரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்ற சித்த மருத்துவத்தையும் பார்ப்போம். ஒரு பக்கம் தலைக்கு மீறிய கடன், இன்னொரு பக்கம் அன்றைய கடன் தீர்க்க பயணப்படும் திரைப்பட பாடல்கள், என்று உச்ச இரத்த அழுத்தத்தில் கண்ணதாசனால் கொடுக்கப்பட்ட எத்தனையோ பாடல்களில், இதயம் தேடும் என்னுயிரே கேட்போமா, 

 

பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓர் உயிரே 

புதையல் தேடி அலையும் உலகில், இதயம் தேடும் என் உயிரே

------- 

ஆலமரத்தின் விழுதினை போல அணைத்து நிற்கும் உறவு தந்தாயே 

வாழை கன்று அன்னையின் நிழலில், வாழ்வது போல வாழ வைத்தாயே 

உருவம் இரண்டு, உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்று 

                                                         -     ஆலயமணி படத்திற்காக

 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...