???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-15 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   22 , 2018  03:19:37 IST

நிலவின் கூந்தல் நாம் அறிவோமோ, அது அமாவாசையன்று நிகழும். நிலவின் முகம் நாம் அறிவோம். அது பெளர்ணமியன்று நிகழும். தமிழில் எங்கு காணினும் நிலவின் கூந்தலும், முகமுமாகவே இருக்கிறது. அரசியல் ரீதியாக சொல்வதென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெளர்ணமி அன்றும், கலைஞர் அமாவாசை அன்றும் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெளர்ணமி யோகம் அமாவாசை யோகம் முறையாக உள்ள ஜாதகம், ஜாதகர் எந்நிலையிருந்தாலும் வெற்றி பெற்று விடுவார். நிலவு சோதிடயியலில் தாய், தாயின் கூந்தல் பால் மடி கொடுக்க மறைத்தாடும், கன்னியின் கூந்தல் தலைவனை காண ஒரு புறம் களித்தாடும். கூந்தலை மேகங்களோடு ஒப்பிட்டு காதல் மழை பொழிந்த தமிழ் காலம் ஒன்று உண்டு. இன்றைய நாகரிக வளர்ச்சியில், இயந்திர தனமான போக்கில், கூந்தலென்பது மாற்று திறனாளியாகி விட்டது. உண்மையான சரீரம் இல்லா கூந்தல், கொடூரம் என்பது என் வாக்கு. உடலகை பேணுவதற்கும், உள்ளதழகை பேணுவதற்கும் சித்தர் தமிழ் கலையை விட்டால் வேறு நிலை இல்லை. காதலை பலவிதமாக பிரித்து, அதில் பிரிதல் என்ற ஊடலையும் சேர்க்கும் சங்க இலக்கியங்கள் நிலவை தொட்டுதான் வளர்ந்துள்ளது. நிலவின் கூந்தலை அமாவாசையாக அறிமுகப்படுத்தியது, இதுவரை எவரும் தொடாதது என்றே நினைக்கின்றேன். சங்ககால தமிழ் நாகரிகத்தில், கூந்தலில் தலைவன் மலரைச் சூட்டுவது ஒருவகைத் திருமணமுறை என்று சிலர் வாதிட்டாலும், கன்னிப் பெண்கள் திருமணமாவதற்கு முன்பே மலர் சூடினார்கள் என்பது,    

 

பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி 

-    குறிஞ்சிப்பாட்டு

 

கபிலருடைய குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியும், பல்வகையான மலர்களை பறித்துத் தம் தலையில் சூடிக் கொண்டதாகப் பாடுகிறார். இச்சான்றால் கன்னிப்பெண் மலர் சூடுதல் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டென்றும், அறிவோம். 

அழகிய கூந்தல் பெற திருமூலர் அருளிய வைத்திய சாரத்தை பார்ப்போம்.

 

அழகு நுதலின் அதிசயம் கேளாய்   

களவு காயம் கலந்த அன்நீரிலே 

மிளகு மஞ்சள் கடுதேல்லி வேம்பிடில்

இளகும் காயம் இறுகும் கபாலமே 

-    திருமூலர்  

 

அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள். கடுக்காய் பருப்பு, மிளகு, மஞ்சள், நெல்லிமுள்ளி, வேப்பங்கொட்டை ஆகியவற்றை சமபங்காக சேகரித்து, பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இதனால் உடல் பொலிவடையும்.  

 

              கபாலம் இறுக்கும்  கண்ணும் துலக்கமாம்

              அபால மந்தனி அதிவண்டு போலாகும் 

              விபாலத்திசை வாய்வு வேலை செய்யாது 

              இபாலத்தினுள்ளே எளிதாக மாத்தியே 

 

இம்முறையில் தொடர்ந்து தலை முழுகி வந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கருவண்டு போல கரியநிற கூந்தல் கிடைக்கும். அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது என்கிறார் திருமூலர். அழகிய கூந்தல் ஆடவனை மதிமயக்கும். மதிமயங்கிய தலைவன், மலரினை சூடுவான். மலரின் வாசம் கண்ட வண்டு உன் வீடு தேடி வந்தால், தலைவனுக்கே பெருமை. கூந்தலில் காதலை வைத்து, காதலை கணவனின் மார்பினில் சோ;த்து, உலகம் இயங்கும் அன்புள்ளங்கள் இரண்டு பாடுவதை கண்ணதாசன் மொழியில் அறிவோம். மலர் கூந்தல் இரண்டும் தெய்வீகம், தெய்வீக தன்மையை இயற்கையில் படைத்த இறைவனை மனமார போற்றுவோமாக. ஊட்டி வரை உறவு நமக்கிருந்தால்  இந்த பாடலின் மகத்துவம் புரியும்.

     பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது 

     உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது 

     ............ 

     விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

மஞ்சம் மலர்களை தூவிய கோலம் 

மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ........ 

இளமை அழகின் இயற்கை வடிவம் 

இரவை பகலாய் அறியும் பருவம் 

- ஊட்டி வரை உறவு படத்துக்காக 

மல்லிகையை ரசித்தோம், கூந்தல் மேங்களாக மாறுவதை ரசிப்போமா

 

     நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் 

     என் மகராணி உனைகாண ஓடோடி வந்தேன் 

     -------

     உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார் 

     உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார் 

     -------

     பொன்வண்டொன்று மலரென்று முகத்தோட மோத 

     நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட  

     என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக 

     நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

-     இரு வல்லவர்கள் படத்தில் 

 

சித்த ரகசியம் மலரோடும் கூந்தலோடும் பின்னியிருப்பதை, காதல் வழி மொழியில் கண்ணதாசன் நமக்கு உணர்த்துவது காமத்தை விலக்கி நிற்கவே. அவன் பாடலில் ஆயிரம் அர்த்தங்கள், அண்ட சராசரம் முழுதும் பெருவெடிப்பில் உண்டானாலும், காமத் தீயை கட்டுப்படுத்த ஆடவன் கரங்கள் மட்டும் போதாது. மேங்களே வந்து பன்னீர் மழை பொழிந்து, தீயை அணைக்க வேண்டுமல்லவா. பருவத்தில் பெண் தடம் மாறி போனால், சமுதாயம் என்ன பேசும் என்று எல்லோரும் நுகர்வர். பருவத்தின் காதலை பக்குவமாய் எடுத்து செல்ல முன்னோர்கள் இட்ட பாதை அழகிய கூந்தல் கவிதை. இன்றவர்கள் கொடுத்த நீதிமன்ற தீர்ப்பு கள்ள காதல் வாழ்க, பிறா;மனை கொஞ்சுவதும் தவறல்ல. பல ஆயிரம் வருடங்களாக, சித்த பெருமக்கள் பிறர்மனை நோக்காமையை தான் வலியுறுத்தி வந்துள்ளார்கள். இறுதியில் சாம்பல்  தான் மிஞ்சும். இறுதி வரை காமம் நிற்காது, இடையில் ஓடிவிடும். இறுதிவரை அன்பாகி சிவமே நிற்கும். அந்த சிவன் பூசுவதும் சுடுகாட்டு சாம்பல் தான், நமது இறுதி நிலை மயானமாகும். சிவனின் திருவிளையாடலில் கூந்தலின் சந்தேகமும், நக்கீரனின் தன்மையையும், கேள்வியும் அதற்கான பாண்டிய மன்னனின் நிகழ்வையும் பார்ப்போம். 

 

பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா என்பதற்கு மதுரை சொக்கநாதர் பாடி நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட நிகழ்வு இதோ, 

 

சிவன்    :    நக்கீரரே என்பாட்டில் எங்கு குற்றம் கண்டீர், சொற்சுவையிலா,   பொருட்சுவையிலா? 

நக்கீரர்   :    சொல்லில் குற்றமில்லை, இருந்தாலும் மன்னிக்கப்படலாம்,      பொருளில் தான் குற்றமுள்ளது.            

சிவன்    :    என்ன குற்றம் ? 

நக்கீரர்   :    எங்கே நீர் இயற்றிய செய்யுள் சொல்லவும். 

 

சிவன்       :  ‘ கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்மி

     காமஞ் செப்பாது கண்டது மொழிமோ 

     பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 

     செறியெற் றரிவை கூந்தலின் 

     நறியவும் உளவோ நீயறியும் பூவே” 

நக்கீரர்   :    உமது செய்யுளின் கருத்து?   

சிவன்    :    தலைவன் தலைவியின் காதலில் மெய்மறந்து, அவளது      கூந்தலில் வரும் நறுமணத்தை புகழ்ந்து, வண்டை நோக்கி      பாடுவதாக செய்யுள் அமைத்திருக்கிறேன்.  

நக்கீரர்   :    அதன் உட்கருத்து ? 

சிவன்    :    மலர்களிடத்தே உள்ள மகரந்த பொடிகளை ஆராய்ந்து      கொண்டிருக்கும் தும்பி இனத்தை சேர்ந்த உயர்ந்த சாதி வண்டே, நீ கண்ட மலர்களில் இம்மங்கையின் கூந்தலை விட அதிக மணம் உள்ள மலரும் உண்டோ? என்று கேட்பது போல்     எழுதி இருக்கிறேன். 

நக்கீரர்   :    இப்பாட்டிலிருந்து எமது மன்னவருக்கு தாங்கள் கூறும் முடிவு? 

சிவன்    :    பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உண்டு      என்பது தான் எமது தீர்வு. 

நக்கீரர்   :    ஒரு காலும் இருக்க முடியாது, வாசனாதி திரவியங்களை      பூசிகொள்வதினாலும், தொடர்ந்து மலர்களை சூடிகொள்வதனாலும் தான் ஒரு பெண்ணின் கூந்தலுக்கு மனம்     இருக்க முடியுமே தவிர, பிறப்பிலிருந்தே வெறும் கூந்தலுக்கு     இயற்கையில் மணம் உண்டு என்று ஒருகாலும்   ஒப்புக் கொள்ள     முடியாது.      

 

சிவன்    :    நான் எழுதிய தமிழ் பாட்டு குற்றமா? 

நக்கீரர்   :    ஆண்டவா, புலவரே நீரே முக்கண் முதல்வரையும் ஆகுக   

          உமது நெற்றியில் ஒருகண் காட்டிய போதிலும்

          உமது உடம்பெல்லாம் கண்ணாக்கி சுட்டபோதிலும்   

          குற்றம் குற்றமே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே 

(பிரம்மாண்டமான கற்பனை கலந்த பகுத்தறிவு வாதம்) ஆனால் இது திராவிட பகுத்தறிவு வாதமல்ல) அது நமக்கு தேவையுமல்ல. 

 

நக்கீரர்   :    சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு
              ஏது      குலம் 

              சங்கை அறிந்துண்டு வாழ்வோம் 

              அரணே உன்போல இரந்துண்டு வாழ்வதில்லை  

 

இந்த நீண்ட வாதங்களை, திருவிளையாடல் படக்காட்சிகளாக பாருங்கள். பார்த்த பிறகு வாழ்த்தப்பட வேண்டியது. சிவனாக வரும் சிவாஜியையும், நக்கீரராக வரும் ஏபி நாகராஜன் ஐயா அவர்களையுமே. உமையே கண்கலங்கி நின்ற இடமப்பா இது சிவனின் திருவிளையாடலால், வாசகர்களே. இந்த வரலாற்று போட்டியில் கடைசிவரை பெண்களுக்கு கூந்தலில் மணம் இயற்கையா? செயற்கையா? என்ற கேள்வியின் வாதத்தோடு முடிந்து விட்டது. இதற்கான தீர்ப்பை கண்ணதாசன் அவனது சுய சரிதத்தில் கொடுத்துள்ளது மரபணுக்களின் திருவிளையாடல் போல் தெரிகிறது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, ஏனென்றால் நக்கீரர் வாழ்ந்த காலமாக சங்க தன்மை உரைப்பது கிமு மூன்றாம் நூற்றாண்டு. திருவிளையாடலின் கேள்விக்கு விடை கிடைத்ததோ கண்ணதாசன் வாழ்ந்த நம் நூற்றாண்டில் அப்படியென்ன தீர்ப்பு பார்ப்போமா........ 

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...