???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-14 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   14 , 2018  05:12:16 IST

     வன்னியிலை யுடனேதா னத்திப்பிஞ்சும்

     வகையாக நிழலுலர்த்திச் சூரணித்து

     நன்யைமா பெருமைப்பால் தன்னிற்போட

     நலமான பாலதுவுஞ் தோய்ந்து போகும்

     சொன்னதிதை நல்லெண்ணெய் தண்ணிற்  சேர்த்து

     சுகமாக மூவிரண்டு நான்தான் கொள்ள

     முன்னுரைத்த நீரிழிவு சலரோகங்கள்

     முழுதுமே போகுமென்று மொழிந்தவாறே

                                  -   யாகோபு

 

வன்னிமரத்தின் இலை , அத்திப்பஞ்சு இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து சூரணமாக்கி கொள்ள வேண்டும். பிறகு அந்த சூரணத்தை எருமைப்பாலில் போட்டால் பால் துவைந்து போய் விடுமாம். துவைந்த அந்தப் பாலுடன் நல்லெண்ணெய் சேர்த்து 6 நாள் உட்கொண்டால் நீரிழிவு, மூல ரோகங்கள் யாவும் போகும் என்கிறார். இந்த மருந்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. இதன் சாத்திய தன்மை ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவியல் உலகம் என்பதால், தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம். இது ஒரு தகவல் பகிர்வு ஒன்றே. ஆய்வுக்குட்பட்டவை அறிக சித்த மருத்துவரிடம். தேரையர் அருளிய ‘தேரயர்; குடிநீர்;” நூலில் நீரிழிவிற்கு ஓர் தீர்வை தந்திருக்கிறார் காண்போமா.

 

 

தேற்றான் விதைக் கடுக்காய் செப்புமா வாரைவித்து

ஏற்ற விளம்பிசினோ டித்தனையும் - கோற்றொடியே

பங்கொன்று காலாய் கசிவின்மோ ரில்பருக

பொங்கிவரு நீரிழிவு போம் .....

-     தேரையர்

 

தேற்றான் கொட்டை, கடுக்காய், ஆவாரம் விதை, ஆவாரன் பிசின் என்கிற இந்த நான்கு பொருட்களையும் சமஅளவு எடுத்து நீர்விட்டு ஒரு பங்காக காய்ச்சி வடித்து இறுத்த இந்த நீருடன் ஒரு பங்கிற்கு கால்பங்கு பசுவின் மோர் சேர்த்து பருகிட நீரிழிவு நீங்கும் என்கிறார். தினமும் இருவேளை முப்பது முதல் அறுபது மில்லி லிட்டர் வரை குடிக்கலாம். இயல்பாகவே ஆவாரம் பூவை நமது நீரிழிவு நோய்க்கு பொடி செய்து, பயன்படுத்தி வருகிறார்கள். நான் தருவது தகவல் மட்டுமே, தேடிச் சென்று பொறுப்பெடுத்து கொள்வது  உங்களது உரிமை வாசகர்களே. 

 

     இதே நீரிழிவில் அதன் சர்க்கரை அளவை எப்பொழுதுமே கட்டுக்குள் வைத்திருப்பேன் என்று தனது சுயசரிதமாக கூறியிருப்பதிலிருந்து, கண்ணதாசனுக்கும் நீரிழிவு இருந்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு கருங்குரங்கு இரத்தத்திலிருந்து, பச்சை பாம்பு சூப் வரை எப்படி ருசிக்க  வேண்டும் என்பதை தெளிவுபட கூறியவர். அவரது உணவு பழக்கத்தை தொடர்வது இந்த தொடரல்ல, ஆனால் அசைவ விரும்பிகளாக நாம் இருந்தால், இதையும் சிந்திக்கலாமே என்ற அர்த்த வாழ்வு முறை தான் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது. யதார்த்தமாக ஆடிபாட எனக்கும் ஆசை தான். யாத்திரை, தீவேள்வியென ஓடிக் கொண்டிருக்கையில், வேதத்திற்கு முன்பே தமிழ் பேசிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசுவதை அறியா தமிழினம் நாம் ஒருவரே. மற்ற மொழிகளை வெறுத்து வாழும் இனமும் நாம் ஒருவரே, உணர்வுகளுக்கும் உயிருக்கும் தேவைக்கும் எல்லாவற்றையும் அறிவது தவறல்லவே என்பது தான் தமிழ் கூறும் நல்லுலகம்.

இப்பொழுது கண் மருத்துவத்திலிருந்து விலகி, மற்றோர் உறுப்பிற்கான உவமையை கண்ணதாசனிடமிருந்து பெறுவோமா. இவ்வளவு தொடரிலும் வெளிச்சம், ஒளி என்று உணா;ந்த நாம். ஒளியில்லா நிலையை என்னவென்று அழைப்பது. இருள் கருவாகி கறுப்பாகும், இந்த உடல் அந்த தன்மையை எந்த வகையில் பிரதிபலிக்கும், பிரபஞ்சம் அறியும், பிரதி உடலும் அறியும். நீயும் அறிவாய் கண்ணதாசன் வழியில், கரு நீல கண்ணனாக, பாரதத்தில் போh; நாளை மாற்றி, அமாவாசையாக அன்றொரு நாள் சூரியனையும், சந்திரனையும் சந்திக்க வைத்த நாள், அறிய வேண்டுமென்றால் கர்ணன் படத்தை கண் கொள்ளவும்.

 

 

உடல் பார்க்கும் கண்ணில், கண் விழியாக கருப்பு நிறத்தில் வெண்மையடங்கி உள்ளது. அறிவியல் ரீதியாக வெள்ளையாக அறியப்படும், உடல் மறைந்தும் மறையாத உயிர்த்தெழுந்த ரோமம், கூந்தலாக கூடுவதை வர்ணிப்போமாக, கவிஞரின் தயவில்,

           கூந்தல் கருப்பு ஆகா, குங்குமம் சிவப்பு ஓகோ.

           (திராவிட கட்சி நிறக்கொடி, அறிந்து கொள்வீர்)

           கொண்டவன் முகம் ரோஜப்பூ (மற்றொரு கட்சி கொடி)

இன்று முதல் நீ என் உரிமை 

என் இதயத்து மாளிகை உன் உரிமை 

ஒன்றிய உள்ளம் வாழியயென்று சொன்னது கோவில் மணியோசை 

............

                         - பரிசு படத்திலிருந்து 

அடுத்தபாடல் 

     பட்டுசேலை காத்தாட பருவமேனி கூத்தாட

     கட்டுகூந்தல் முடித்தவளே என்னை காதல் வலையில் அழைத்தவளே 

     அரும்பு மீசை துள்ளிவர அழுகு புன்னகை அள்ளிவர 

     குறும்பு பார்வை பார்த்தவரே      என்னை கூட்டுக்கிளியாய் அடைத்தவரே 

     கையிலெடுத்தால் துவண்டுவிடும்,  கன்னம் இரண்டும் சிவந்து விடும்.

     சின்ன இடையே சித்திரமே  சிரிக்கும் காதல் நித்திலமே

     நிமிர்ந்து நடக்கும் நடை அழகு 

     நெருங்கி பழகும் கலை அழகு 

     அமைதி நிறையும் முகத்தழகு 

     --------- 

     காசு பணங்கள் கேட்கவில்லை, ஜாதி மதங்கள் பார்க்கவில்லை 

     தாவி வந்தது என் மனமே 

     இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே 

     கட்டு கூந்தல் முடித்தவளே ........ 

-  தாய் சொல்லை தட்டாதே காவியத்திலிருந்து

 

இன்றைய கூந்தல் எந்த வடிவில், எந்த நிறத்தில் உள்ளது என்பது இன்றைய இளைஞர்களே இயம்புவார்கள். நரை விழுந்த இளைஞர்கள் இன்னொரு புறம்,                திரை மறைவில் கூந்தல் மறுபுறம், இயற்கையில் வயோதிகம் புலப்படும் புலம்பல்               தீர்க்க சித்தர்கள் சித்தரித்த மருத்துவ இயலை இளைஞர்கள் வரவேற்பார்கள்             என்றே நினைக்கிறேன். நினைவில் கொள்வோமா என் தமிழ் பெண்களே. 

 

  முடி உதிர்தல், பொடுகு, நரை, பூஞ்சை தொற்று போன்றவை தலையாய பிரச்சனை அதற்காக பயன்படுத்தும் பொருட்கள் யாம் அறிவோம், தலையில் மறைக்கப்பட்டதையும் உலகம் அறியும். என்னுடைய அனுபவத்தில் (கோழிகளுக்கு) இறகு உதிர்வதை நான் கண்டிருக்கிறேன். எமது பண்ணையாளர்கள் அதை உப்பு சத்து குறைவாக தீர்மானித்தல் ஒரு வகை, நான் அதை பூச்சு கொல்லிகளின் நச்சு பொருளாக உணர்வது, பண்ணையாளர்களே அறியாத மறுவகை. பூச்சு கொல்லிகளை எல்லா வகையான உணவு பொருட்களும் உண்டு வந்துள்ளதை உணர்ந்தாலும், நாம் கொதிக்க வைக்கும் உணவு சமைத்தல் முறையால் சிறிதளவேனும் தப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கோழிகளுக்கு இதன் நச்சு தன்மை பாதித்தல், முழுமையான உற்பத்தியை முழுதும் பாதித்து விடும். கோழிகளும் அதன் முழுமையான பெண்மை தன்மையையும் இழந்து விடுகிறது. இதனினும் ஓர் அபாயம் நான் அறிந்த வகையில், மற்ற நச்சு தன்மையுள்ள தொழிற்சாலை கழிவுகளை கலந்து வரும் நதி, கடலில் கூடும் போது, அதிலிருந்து பெறப்படும் உணவுக்கான தன்மைகள், பறவைகளையும் இனப்பெருக்க ரீதியாக இயல்பில்லாமல் (மலடாக) செய்து விடுகிறது. நாமும் இதே நிலையை சிறிது சிறிதாய் அடைந்து கொண்டிருக்கிறோம். கூந்தலிலிருந்து பறவைகளின் கூந்தலுக்கு பரிணாம வளா;ச்சி அடைந்த இந்த தொடரில், சிவன் தன் கூந்தலை விரித்தாடும் ருத்ரதாண்டவம் அறிவோமா? அதற்கு முன் அதன் மருத்துவத்தை பார்ப்போம். 

 

    

      கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து

     ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்புகலந் தரைத்து 

     ஒருபலம்யென் யெண்ணெய்சோ;த் துகாய்ச்சி சீலை வடிகட்டி 

     தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன் போல சடைகாணும் 

                          - அகத்தியர் .

கையாந்தகரை (கரிசலாங்கண்ணி) சாறு நாலு மடங்கு எடுத்து, அத்துடன் ரெண்டு மடங்கு குன்றிமணிப் பருப்பு சேர்த்து, அரைத்தெடுத்து அதில் நல்லெண்ணெய் ஒரு மடங்கு ஊற்றி காய்ச்சி, வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோகதிர்களுக்கும், இளைஞர் போல முடிவளருமாம் என்கிறார் அகத்தியர்

பொன்னாங்கண்ணி தைலத்தோடு (இதற்கான குறிப்பை முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன்) பாசிப்பயிறும், சீயக்காயும் சோ;த்து, தலைக்கு முழுகி வந்தால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர். வெள்ளெழுத்து என்பது பொடுகாக இருக்கலாம்

 

     மயிர்களைந்து தைலமது முழுகும் போது

     மறுபாசிப் பயருஞ்சீ யக்காய் சேர்த்து

     ஒயிலாகத் தானரைத்து முழுகிப்பாரு

     உருதிபெருஞ் சிரசினுக்குக் குளிர்ச்சியாகும் 

பயிலான வெள்ளெழுத்தும் மாறிப் போகும் 

தைலமிந்த விதமுழுக உலகத்தோர்க்குத் 

தாட்டிகவான் யாகோபு சாற்றினாரே 

                             -  யாகோபு

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...