???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-13 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   07 , 2018  02:58:04 IST

மூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின், அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது.  மூலிகைகளை சாப நிவர்த்தி செய்து பிடுங்கும் போது அதன் உயிர் உடலிலேயே தங்கிவிடும். சாபநிவர்த்தி செய்யபட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும். மருத்துவத்திற்கான சாப நிவர்த்தியை, மூலிகையை அடையும் போது தற்கால சித்த மருத்துவர்களும் உபயோகிக்கிறார்கள் என்று நம்புவோமாக. நாம் கண்புரையை பற்றி பாh;ப்போம். கோவை சாறு எடுத்து அதனை தலையில் விட்டு நன்கு தேய்த்த பின்னர், பெருவிரல் நகங்களில் ஊற்றிட வேண்டுமென்கிறார் கோரக்கர். இவ்வாறு தொடா;ந்து இருபத்தியோரு நாட்கள்              செய்து வந்தால், கண்ணில் விழுந்த புரை அகன்று விடும் என்கிறார். இன்றைய                   இளையதலைமுறையிடம் கோவை சாறு என்றால், கோவை சரளா என்று நினைத்து விடுவார்களோ என்று பயமாகவும் இருக்கிறது. ஏனென்றால், தமிழ் அந்த அளவு தலையில் இளைய தலைமுறையில் இருக்கிறது. செம்பருத்தி பூ மூலம் உருவாக்கப்படும் தேநீர், நாட்டு சர்க்கரையுடன் சமீப காலமாக அருந்துகிறேன். கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் இதன் நன்மையை பற்றி கூறியிருப்பார்கள். படம் பார்த்து அறிந்து கொள்ளவும். அதற்காக செம்பருத்தி படத்தை பார்த்துவிடாதீர்கள், ரோஜா பபூ அப்புறம் மனசுக்குள் வந்துவிடும். ஏனென்றால் அந்த படத்தின் கதாநாயகி ரோஜா தான்.                 ஏன் திடீரென்று செம்பருத்திக்கு வந்தேனென்று நினைக்கிறீர்களா?, இன்றைய தலைமுறையும், நாளைய அறிவும் திரைப்பட கவர்ச்சியை மட்டும் நோக்கி பயணித்து கொண்டிருப்பதால்.

 

     கண் ஒளி தரும் ஒரு கன்னியை பற்றி “பொன் ஆம் காண் நீ ” என்று மாறுதல் முகமாய், முகத்தில் இரு கண், பொன்னாகி காணும் பாக்கியம், தலைவனை கண்ட தலைவிக்கு உண்டு. நீண்ட பிரிவிடையில் கண்ணதாசன் வருகிறார் என்று நினைக்கிறீர்களா? இல்லை. யாகோபு சித்தர் வருகிறார். கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம் காண் நீ. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம் வளரும் படரும் செடி. இலை, தண்டு, வர் என எல்லா பாகமும் யாவருக்கும் உதவும் வரப்பிரசாதம், சித்த மருத்துவத்தில்,

     தோணாம லிராவணன் சிறையெடுத்த

     தோகை பொன்னாங் கண்ணிதனை பிடுங்கி வந்து

     நாணாதே கல்லுரலி லிட்டுதைய

     நலம்பெறவே திலகமுன் னெடயும்ரெட்டி

     வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி

     வகையாக யெரித்துமுடா ஊற்றிக் காய்ச்சிக்

     காணாத தைலங்கள் முழுகக்கேளு

     கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே     

                 -    யாகோபு

பொன்னாங்கண்ணியை கல் உரலில் இட்டு அதன் எடையில், இரண்டு மடங்கு எள்ளையும் சோ;த்து நன்றாக  இடித்து கொள்ள வேண்டும். பின்னா; இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்து, தலைக்கு குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இதன்  கூட பாசிப்பயிறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தலும் நன்மையே. இப்பொழுது மறுகண்ணுக்கும் அகத்தியர் பொன்னாங்காணி தைலத்தை அறிமுகப்படுத்துகிறார்.

     ஆமப்பா பொன்னாங்காணி தைலங்கேளு,

அப்பனே காணிச்சாறு படியிரண்டு

     நாமப்பா கரிசாலை சாறுப்படியொன்று

     தாமப்பா யெள்ளெண்ணெய் படியிரண்டு

     தப்பா மலாவின் பால் படியிரண்டு

     வேமப்பா மதுரமது பலமிரண்டு

     விருதான முலைப்பாலா வரைத்தப் போட்டே.

பொன்னாங்காணி சாறு இரண்டு படி, கரிசாலை சாறு ஒரு படி, எள்ளெண்ணெய் இரண்டு படி, பசும்பால் இரண்டு படி, ஆகியவற்றை ஒரு மண் சட்டியில் சேகாpத்து, அதனுடன் அதிமரம் சேர்த்து கலவத்தில் இட்டு தாய்ப்பால் விட்டு அரைத்து மண் சட்டியில் எடுத்து, அடுப்பில் மெழுகுபதம் வரும் வரை காய்ச்சி வடித்து சேமிக்கவும். தினமும் காலை வேளையில் இந்த கரைசலை 10 நிமிடம் தலையில் ஊற வைத்து குளிக்கலாம். இதனால்  கண்நோய் குணமாகி பார்வை திறன் அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த  தைலத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

முகத்தின் அழகு கண்களில், இந்த கண்களுக்கு மட்டுமே எத்தனையோ பாடல்கள். சங்க இலக்கியம் தொட்டு இன்று வரை படைக்கப்பட்டிருக்கின்றன. நெற்றிக் கண்ணின் கோபத்தையும் நக்கீரர் வாயிலாக அறிந்திருக்கிறோம். ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்பது நம் நெஞ்சில் இன்றளவும் நிறைந்த வாசகம். கடலுக்கு கண் இருந்து அது அழுது மாண்டது கோடி, தமிழ் கடலுக்கு கண் கொண்டு அது அழுது நம்மை மீட்டதும் கோடி. கண்ணதாசன் என்ற கருணைக்கு கண் இருந்து, அது அகமகிழ்ந்து எட்டாம் அறிவாய் நின்று தந்த தமிழ் கண் கோடி வணக்கம். கண்ணதாசன் பிரபஞ்சத்தில்  நான் ஓர் பொன் என்பேன், பூ என்பேன் காதலியாக, நான் ஓர் சூரியன் சோதிடவியலாக, யோசியுங்கள். சூரிய வணக்கம் கண்களுக்கு, சோதிடவியலில் சூரியனின் வலுவைப் பொறுத்தும், இரண்டாம் பாக வலுவைப் பொறுத்தும் நமது பார்வை திறன் குறிப்பிடப்படுகிறது. கண்களுக்கு காரகன் சூரியனே. சூரிய உதயத்திலிருந்து 20 நிமிடம் கழித்து, தினமும் ஓர் ஐந்து நிமிடம் காணச் சொல்கிறார்கள், வணங்கவும் சொல்கிறார்கள் ஆன்றோர்கள். முன்னால் குறிப்பிட்டது போல், தந்தை காரகன் சூரியன் கண்ணுக்கும் உரியவன் என்று அறிந்து கொண்டீர்கள் நெஞ்சங்களே. சூரியனே நாம் வழிபடும் சிவனாகவும் நம் கண்முன்னே வாழ்கிறார். தந்தையை கூறிவிட்டு தாயை விட்டுவிட முடியுமா, வெண்ணிலவே பார்வதி தேவியாகவும் வாழ்கிறார். கண்ணதாசனோ கிருஷ்ண சாம்ராஜயத்தில் ஆஸ்தான கவியாக வாழ்கிறார். நானோ பொன் என்பேன், சிறு பூவென்பேன் பாடலாக இதோ போலிஸ்காரன் மகள் படத்திலிருந்து 

 

     பொன் என்பேன், சிறு பூ என்பேன் 

     காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

என்னென்பேன் கலை ஏடேன்பேன் 

கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன் 

................  

கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து 

காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் 

உன்னை நினைத்திருப்பேன் 

என்னை மறந்திருப்பேன்

கண்ணில் காத்திருப்பேன், நெஞ்சில் நிறைந்திருப்பேன் 

என்னென்பேன் கலை ஏடேன்பேன்  

கண்கள் நான் என்றால் பார்வை நீயென்பேன் 

                                 -    கண்ணதாசன் 

 

புறக்கண்களை மகிழும் புறநானூற்று தமிழர்கள் நாம். அகக்கண்களாகிய சித்த பெருமக்களின் மருத்துவத்தையும் இனி காண்போம். தற்போதைய அவசர வாழ்க்கையில் கண்ணை பாதிக்கும் மிக முக்கிய குறைபாடு நீரிழிவு அதாவது சர்க்கரை நோய். கணையத்தின் செயல்பாடு குறையும் போது இன்சுலின் சுரப்பும் குறைந்து சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதனையே நீரிழிவு நோய் என்கிறோம். இது ஒரு நோய் அல்ல, வெறும் குறைபாடு தான். இதனால் கண் பார்வையில் கோளாறு, நரம்பு மண்டல, இதய சிறுநீரக பாதிப்பு என பல்லுறுப்பு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போதைய அல்லோபதி மருத்துவம் நீரிழிவுக்கு மூன்று  கட்ட தீர்வுகளை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சீரான இடைவெளி  பரிசோதனை செய்து மருந்துகளை எடுத்து கொள்ளல் ஆகியவற்றை வைக்கிறது. நீரிழிவு மருத்துவ சிகிச்சை என்பது பணம் கொட்டும் பெருந்தொழிலாகவும் பெருமையோடு உலா வரும் சமூகத்தில் மாற்றாக சித்தர்களின் தீர்வுகள் கூறப்பட்டாலும், சிந்திக்கவே வழியில்லாத நாம் எவ்வாறு இந்த மூலிகை மருத்துவத்தை சந்திப்போம். நீரிழிவுக்கான எளிமையான தீர்வுகள் சித்தர் பாடல்களில் கசிய விட்டிருந்தாலும், இந்த தகவல்கள் ஆச்சரியமானவை. ஆனால் இவை வெறும் தகவல்கள் என்பதும், முறையாக பரிசோதிக்கப்படவில்லை என்பதும் இன்றைய அறிவியலின் வாதம். ஆர்வமும் வாய்ப்புகளும் உள்ளவர்கள் இவற்றை பரிசோதனை செய்து, இந்த மருத்துவ குறிப்புகளின் சாதக  பாதக ஆய்வறிக்கைகளை சமர்ப்பியுங்கள். யாவரும் இந்த மருத்துவ குறிப்பை பயன்படுத்த, முறையான சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சித்தராசி  அடைக.

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...