???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழும் சித்தர்களும்-12 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   01 , 2018  05:02:06 IST

இந்தாய் உலகில் முன்னுனித்தே, இந்தாய்ப் பிறையாய் உருவெடுத்தாள்

     இருக்கு முதலா நம் வேதம், இருக்கு குறளே எனவுரைத்தாள்

     வந்தாய் வானில் அம்புலியே, வந்தாய் தமிழை மண்மிசையே  

     வாலைக்குமரி தமிழுடனே, வாலை ஆடாதாடுகவே 

                                              - உவமைப்பித்தன்,  தமிழ்த்தாய் மடக்கு பிள்ளைத்தமிழ்

 

நிலவுக்கும், தமிழுக்கும் உள்ள உறவை நமக்கு அம்புலி பருவமாய் தந்துள்ளார்கள். குழந்தைக்கு சோறுட்ட நிலவை காட்டும் என் தாய், அமாவாசையன்று என்ன செய்வாள் தெரியுமா, தமிழ்தாய் பிள்ளைத்தமிழ் பாடி சோறுட்டினாள் - என் தமிழ் குலத்து மூதாட்டி. இதில் வாலைக்குமரி என்ற வரி எந்த நோக்கில் உவமைப்பித்தன் பயன்படுத்தினாரோ அதாவது இளமையோடு, சித்தரியலில் இருப்பவர்கள் அறிவர். சித்தர்கள் வணங்கும் பெண் தெய்வம் பெயரும் வாலை குமரியே. வாலை குமரியின் மந்திரத்தை கொடுத்து விட்டேன் உனக்கு என்று சித்தர் சடகோபானந்தா உரைத்தார் ஓர் குகையில், ராயக்கோட்டை அருகாமையில், யாருக்கு தெரியுமா, இன்று நம்மோடு கவனகர் நிறைவாற்றல் பயிற்சி அளிக்கும் கனகசுப்புரத்னம் அவர்களுக்கு.

 

சுவாமி சடகோபானந்தா இரு கண் பார்வையற்றவர். ஓர் குகையில் வாழ்ந்தவர். தற்செயலாக தரிசிக்கும் பாக்கியம் கனக சுப்புரத்தினத்திற்கு கிடைக்க, இன்று அவரும் ஓர் சித்த நிலை அடைந்தவரே. சடகோபானந்தாவை தரிசித்த பிறகு, அவர்களது வாழ்க்கையில் என்ன நடக்குமென்று கூறினாரோ, அப்படியே எல்லோருக்கும் பலிதமாகி விட, உடனே அவரை காண சென்றனர். அவர் ஜீவசமாதி ஆகிவிட்டார் என ஊர் மக்கள் கூற, அவரைக் காண முடியவில்லையே என்று, அவர்கள் வருந்தியுள்ளனர். 

 

இருகண் பார்வையற்ற சித்தர் சடகோபானந்தா ‘வாழ்க வளமுடன்” மகரிஷி அவர்களுக்கு ரசமணி செய்து கொடுத்தவராவர். இதுவரை ரசவாத முறைகளை எவ்வாறு சித்தர்கள் பயன்படுத்தினா; என்பதை, உங்களுக்கு நான் குறிப்பிடவில்லை. ரசவாதமுறை, மிக பக்குவமாக கையாளப்பட வேண்டியது ஒன்றாக தான் நான் உணர்கிறேன், உணர்ந்திருக்கிறேன். மருத்துவ முறைகளுக்கு ரசவாதம் மிகுந்த நன்மையளிப்பதாக இருந்தாலும், அதனை சுத்தி செய்து நடைமுறைக்கு பயன்படுத்த ஏராளமான சிக்கல்கள் இருப்பதையே பின்வருமாறு திருமூலர் உரைக்கிறார்.

           ‘ பாரே பொடிக்கடல் பருவ வெயில் மேற்படல்

           வாறே கொங்கையான் மாயை மிகச் செயல்

           சாயே முளுக்கறல்  கண்ணால் அனல் பார்த்தால்

           சீரேறு பாசாணம் தின்றதால் கண் நோய் “ - -திருமூலர்

 

கடுமையான வெயில் உடலில் படும்படி இருத்தலும், பெண் மோகம் அதிகம் கொண்டாடுதலும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும்  கண் நோய் வரும்.

     இதில் பாசாண வகை என்பது ரசவாத முறையையே குறிக்கிறது. மிக சிறந்த உலோகவியலை தந்த சித்தர்கள், சுத்தம் செய்தலில் உள்ள சிக்கலையும், அதை உண்டாலும், அதன் புகை பட்டாலும் கண் நோய் வரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் சித்தர் சடகோபானந்தா அவர்களே. இரு கண்பார்வையற்றும் தனது வைராக்கிய சிவ சிந்தனையால், அனைத்து மந்திரங்களையும் அறிந்தும், தியானித்தும் முக்தி கண்டவர். கண் பார்வைக்கு மருத்துவம் பார்க்கும் முன்னர் இதைப் பற்றி கண்ணதாசன் பார்வையை பார்ப்போம்.

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே, காவியமோ ஓவியமோ  கன்னி இளமானே,

வண்ணமுக வெண்ணிலவில் கன்னி இளமானே,  வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே,

பார்வையில் நோய் கொடுத்தாய் கன்னி இளமானே.. பக்கம் வந்து தீர்ப்பதற்கா கன்னி இளமானே.. - என்ற பாடலும் - அம்பிகாபதி (படம்)

அங்கம் முழுதும் தலைவன் தலைவி உறவாடினாலும், தடம் காணா ஓர் இடம் கண் மட்டுமே. கண்ணை உறவாட நினைத்தால், இமை மூடிக்கொள்ளும். சங்க இலக்கியத்திலிருந்து, இன்று வரை தொடாத தமிழ் பார்வைகள், காதலியின் பாவையை தழுவ காற்றோடு கலந்தாலொழிய கண்ணை தழுவ முடியாது என்ற இலக்கிய பார்வை இதோ கண்ணதாசனின் பார்வையில், அவனை தவிர யார்; கூற முடியும். நூறு முறை பிறந்தாலும், நூறு முறை இறந்தாலும்  உனை பிரிந்து, வெகுதூரம் நான் ஒரு நாளும் போவதில்லை.

     உலகத்தின் கண்களிலே, உருவங்கள் மறைந்தாலும்

     ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை.

     ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

     உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

     இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

     அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

     நம் காதலின் தீபம் மட்டும் எந்நாளிலும் கூட வரும்.

     .........

இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன்.                             - வல்லவனுக்கு வல்லவன் படத்திற்காக,

 

கண்களை பற்றி கண்ணதாசனின் பார்வையில், அதன் மருத்துவத்தை சித்தர்களின் ஆசியுடன், ஆரம்பிக்கும் முன் ஒராயிரம் பார்வையிலே பாடலை வாசகர்களே ஓh; தடவை  கேட்டுவிடுங்கள். கண் நோய் என்று பொதுவாக குறிப்பிட்டாலும், ஏதேனும் குறைபாடு வந்தால், பொதுவான ஓர் மருத்துவமாகவே திருமூலர் அருளியிருக்கிறார்.

     இந்துப்பு திப்பிலி இயல்பீத ரோகிணி

     நந்திப்பபூச்சாற்றில் நயந்து அரைத்திட

     அந்த கண் கண்ணுங் கருந்ததி தோன்றிடும்

     நந்திக்கு நாதன் நயந்து உரைத்ததே          - திருமூலர்

கண் நோய் ஏதும் உண்டானால், இந்துப்பு, திப்பிலி, பீதரோகிணி ஆகியவற்றை எடுத்து நந்தியவட்டை பூவின் சாறுடன் சேர்த்து மிருதுவாக, இமை மீது பூசி வந்தால், ஏதாவது குறைபாடு இருந்தால் குணமாகுமாம். அத்துடன் பார்வையற்றாலும் பார்வை கிடைக்க வழி உண்டாகும். இதை நந்திக்கு சிவன் கூறியது என்கிறார் திருமூலர்.

     இதனை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிவிட்டால், நாம் முறையான சித்த மருத்துவரிடம் இந்த மருத்துவ குறிப்பை கூறி ஆலோசனை பெற்று நன்மை பெறலாம் என்பது விதியினால் வழி நமக்கு திறந்தே இருக்கும். அறிவியல் உண்மைகள், அதன் (மூலக்கூறின்) அணுக்களின் தன்மைகள், சிலவகையான வேதிப் பொருட்கள் இணையும் தருணங்கள் புதிதான ஓர் சக்தியும் பிறந்து கொண்டே இருக்கும். பலவித இயற்கை மூலிகை இணைவுகள், எவ்வித ஆக்ரோஷத்தை கொண்டிருக்கும் என்பது சித்த ரகசியம் ரகசியமே. வேண்டுமானால் ஒரு பாடலை கையில் எடுத்து கொண்டு அதில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களின் தன்மையை ஆராய்ந்து அதில் வேலை செய்யும் மூலக்கூறு எதுவென்று பகுத்தாய்ந்து  உருவேற்றம் செய்தால், அதை ஓர் உயிர் கருவாகி கலைந்து கண் முன்னே காட்டும் அறிவியல் தன்மை, கரு உருவாகி, உடலாகி, உயிராகி காட்டுவதை மறுக்குமா?. மறுக்கும். கண்புரைக்கு (கேட்ராக்ட்) நவின மருத்துவம் எந்த மருந்தையும் முன் வைக்கவில்லை மாறாக அறுவை சிகிச்சை  எளிதாய் முடிந்துவிடுவதாக இருக்கிறது.  அல்லோபதி இதுவரை மருந்துகளை பரிந்துரைக்காத ஓர் நிலையில் சித்தர்கள் தந்த கண் ஒளி தத்துவம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

     பூவிழுந்த கண்ணுக்கு மூலிகேளே

     விள்ளுவேன் பூவிழுந்த கண்ணினோர்க்கு

     விகற்பமற ஐந்தேழு ஒன்பது நாள்

     சள்ளையறக் கோவைச்சாறு  சிரசிலூற்றி

     சாரவே தேய்த்து பின் காண்கையாரைத்

     தெள்ளிதமாய் பெருவிரல்கள் நகத்திலும்

     தொல்லையற ஊற்றிடவே பூவும் நீங்கும்

     கள்ளமறக் கண்பார்வை தெளிவாய்த் தோன்றும்.

                       -கோரக்கர் (ரவிமேகலை)

 

(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)

         

          

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...